ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

கூனி நதி.. டெல்லியின் மர்மம்.. இந்த பக்கம் மட்டும் போய்டாதீங்க..

கூனி நதி.. டெல்லியின் மர்மம்.. இந்த பக்கம் மட்டும் போய்டாதீங்க..

கூனி நதி

கூனி நதி

1857 போரின் போது, ​​அனைத்து கிளர்ச்சியாளர்கள் மற்றும் ஆங்கிலேயர்களின் உடல்கள் இந்த ஆற்றில் வீசப்பட்டன.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Delhi |

தண்ணீல கண்டம்னு சொல்லிக் கேட்டுருக்கோம். தண்ணியே கண்டமா இருந்து பார்த்திருக்கீங்களா? டெல்லியின் நடுவில் ஓடும் நதியே காவு வாங்கும் ஒரு கண்டமாக விளங்குகிறது. எப்படி என்று கேட்கிறீர்களா? அந்த நதி பக்கம் போன யாரும் இதுவரை திரும்பி வந்ததில்லையாம்.

குருதி ஆறு அல்லது டெல்லியின் பெர்முடா முக்கோணம் என்று அழைக்கப்படும் கூனி நதி டெல்லியின் மையப்பகுதியில் ரோகினி மாவட்டத்தில் அமைந்துள்ளது. கூனி நதி, மரங்கள் மற்றும் பசுமையான தாவரங்களால் சூழப்பட்ட ஒரு சிறிய ஓடையாகும். இது பேய்கள் நிறைந்த இடமாக நம்பப்படுகிறது. ஏனெனில் அந்த பகுதியில் வசிக்கும் உள்ளூர்வாசிகள் இங்கு பல மர்மமான மரணங்களை கவனித்துள்ளனர்.

அந்த மரணங்களின் பின்புலத்தை நிரூபிப்பதற்கான உறுதியான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்படவில்லை என்றாலும், இது இன்னும் அப்பகுதியில் வாழும் பெரும்பாலான மக்களை பயமுறுத்தும் இடமாகத் திகழ்கிறது. எனவே, சூரியன் மறைந்த பிறகு இந்த நதியை சுற்றி எந்த உள்ளூர்வாசிகளும் செல்வதில்லை.

1857 போரின் போது, ​​அனைத்து கிளர்ச்சியாளர்கள் மற்றும் ஆங்கிலேயர்களின் உடல்கள் இந்த ஆற்றில் வீசப்பட்டன. அன்றிலிருந்து இந்த ஆறு கொலையாளி நதியாக மாறியதாக கதைகள் சொல்கின்றன. இந்த ஆறில் ஓடும் நீரின் நிறமும் சிவப்பாக இருப்பதால் அதன் மீதான பயம் தொடர்ந்து இருக்கிறது.

கூனி நதியின் தண்ணீரைத் தொடும் எவரும் நிச்சயமாக நீர்நிலைக்குள் உறிஞ்சப்படுவார்கள் என்று நம்பப்படுகிறது. அப்பகுதி மக்கள் கூறுகையில், இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடந்துள்ளன. ஒரு சில தற்கொலைகளாக இருந்தாலும் அந்த நதி பக்கம் சென்ற யாரும் உயிரோடு திரும்பியதில்லை. மாறாக, அவர்கள் பேய்களாக மாறி ஓடையில் சுற்றித் திரிகின்றனர். மாலை நேரங்களில் அந்த நதியில் கரையில் மனிதர்கள் கோரமாக அழும் ஓசை கேட்கும் என்கின்றனர்.

மற்ற சராசரி ஆறுகளுடன் ஒப்பிடுகையில் ஓடையின் ஆழம் மிகக் குறைவாக இருந்தாலும், மக்கள் இங்கு மூழ்கி உள்ளனர். அந்த மர்மம் தான் இந்த இடத்தை தனித்து காட்டுகிறது. அதனால் டெல்லி பக்கம் போனால் இந்த நதிப்பக்கம் மட்டும் போய்டாதீங்க...

First published:

Tags: Delhi, Travel, Travel Guide