ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

ஜாலியா சுத்துங்க.. ஒரே விசா.. 26 நாடுகளுக்கு டூர் போகலாம்.. இதைப்படிங்க முதல்ல!

ஜாலியா சுத்துங்க.. ஒரே விசா.. 26 நாடுகளுக்கு டூர் போகலாம்.. இதைப்படிங்க முதல்ல!

ஷெங்கன் விசா

ஷெங்கன் விசா

இந்திய பயணிகள் இப்போது தங்கள் வசதிக்கேற்ப, நாட்டில் எந்த முக்கிய நகரங்களிலும் உள்ள உலகளாவிய விசா வசதி சேவைகள் விண்ணப்ப மையங்களில் தங்கள் விசா சந்திப்பை பதிவு செய்யலாம்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai |

சுற்றுலா நோக்கங்களுக்காக ஜெர்மனிக்கு செல்ல திட்டமிட்டுள்ள இந்திய சுற்றுலா பயணிகளுக்கு ஒரு நல்ல செய்தி. இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கான விசா விண்ணப்ப விதிகளில் சிலவற்றை அந்நாடு தளர்த்தியுள்ளது.

26 ஐரோப்பிய நாடுகள் தங்கள் உள் எல்லைகளை விடுத்து, மக்கள் சுதந்திரமான மற்றும் கட்டுப்பாடற்ற பயணத்தை பெற்றுக்கொள்ள ஷெங்கன் பகுதி என்பதை நிறுவியது.

ஆஸ்திரியா, பெல்ஜியம், செக் குடியரசு, டென்மார்க், எஸ்டோனியா, பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, கிரீஸ், ஹங்கேரி, ஐஸ்லாந்து, இத்தாலி, லாட்வியா, லிச்சென்ஸ்டீன், லிதுவேனியா, லக்சம்பர்க், மால்டா, நெதர்லாந்து, நார்வே , போலந்து, போர்ச்சுகல், ஸ்லோவாக்கியா, ஸ்லோவேனியா, ஸ்பெயின், சுவீடன் மற்றும் சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகள் இந்த ஷெங்கன் பகுதிக்குள் அடங்கும்.

இதையும் படிங்க: ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு செல்ல விரும்பினால் உங்கள் பாஸ்போர்ட்டில் முதலில் இதை சரிபாருங்க!

இந்த நாடுகளில் எந்த நாட்டிற்கு போகவேண்டும் என்றாலும் பொதுவாக ஷெங்கன் விசாவைப் பெற்றால் போதும். 26 ஐரோப்பிய நாடுகளுக்கும் இதை மட்டுமே காட்டி பயணிக்கலாம். நாட்டின் எல்லைகளைத் தாண்டும் போது மட்டும் எல்லை அதிகாரியிடம் முத்திரை பெற்றுக்கொள்ளவேண்டும். இல்லையேல் தண்டனைக்கு உற்படுத்தப்படுவர்.

இவற்றில் பெரும்பாலான இடங்களுக்கு, நீங்கள் விமானங்களில் கூட செல்ல வேண்டியதில்லை. விரைவு ரயில் பயணம், சாலைப் பயணம் கூட மேற்கொள்ளலாம்.

விசா காலம்..

பயண தேதிக்கு மூன்று மாதங்களுக்கு முன் ஷெங்கன் விசாவிற்கு விண்ணப்பிக்கலாம். ஷெங்கன் விசாவானது, 90 நாட்கள் வரை, ஷெங்கன் பகுதியில் உள்ள எந்த மாநிலத்திலும் பயணிகளை சட்டப்பூர்வமாக தங்க அனுமதிக்கும். அதன்பின்னர் விசா நீட்டிப்புக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

இதையும் படிங்க: இந்தியா டூ மியான்மார்... ஒரு சிறந்த சாலை பயண ட்ரிப் ஐடியா இதோ !

புதிய மாற்றம்..

தற்போது இந்தியாவில் உள்ள ஜெர்மன் தூதரகம் தங்கள் விசா விதிமுறைகளில் சில மாற்றங்களை செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். அதிகாரிகளின் கூற்றுப்படி, இந்திய பயணிகள் இப்போது தங்கள் வசதிக்கேற்ப, நாட்டில் எந்த முக்கிய நகரங்களிலும் உள்ள உலகளாவிய விசா வசதி சேவைகள் விண்ணப்ப மையங்களில் தங்கள் விசா சந்திப்பை பதிவு செய்யலாம் என்று அறிவித்துள்ளது.

இருப்பினும், இந்த தளர்வு மாணவர், வேலை வாய்ப்பு மற்றும் குடும்ப மறுகூட்டல் விசா அடங்கிய D-விசா வகைக்கு பொருந்தாது என்றும் குறிப்பிட்டுள்ளது.

ஜெர்மன் ஷெங்கன் விசாவிற்கு வயது வந்தவருக்கு 80 யூரோக்கள் (இந்திய மதிப்பில் 6800 ரூபாய் ) மற்றும் சிறார்களுக்கு 40 யூரோக்கள் (இந்திய மதிப்பில் 3400 ரூபாய் ) செலவாகும். ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு விசா கட்டணமே இல்லையாம். இப்போதே ஐரோப்பாவுக்கு ஒரு டிக்கெட்டை போட்டுவிடலாம் தானே?

First published:

Tags: Travel, Travel Guide