முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / தாஜ்மஹாலைக் கட்டியது ஷாஜகான்.. அதற்கு பிளான் போட்ட இஞ்சினியர்  யார் தெரியுமா ?

தாஜ்மஹாலைக் கட்டியது ஷாஜகான்.. அதற்கு பிளான் போட்ட இஞ்சினியர்  யார் தெரியுமா ?

தாஜ்மஹால்

தாஜ்மஹால்

தாஜ்மஹாலைக் கட்ட கட்டிடக் கலைஞர்கள் மொத்தம் முப்பத்தி ஏழு (37 ) பேர் வேலை செய்திருக்கின்றனர்.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

தாஜ்மஹால் உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றாக இருக்கிறதெனில் அதன் கட்டடக் கலை வேலைபாடுகளை அத்தனை சாதரணமாக கருதிவிட முடியாது.

என்னதான் அதன் வேலைபாடுகள், அதற்குப் பின்னால் இருக்கும் வரலாற்று நிஜங்களைக் கண்டு வியந்தாலும் அதற்கு அச்சாரம் போட்ட வடிவமைப்பாளரையும் குறிப்பிடுவது அவசியம். இப்படியொரு கட்டிடத்தைக் கட்ட வேண்டும் என்கிற எண்ணம் ஷாஜகானிற்கு இருந்தாலும், அவரின் எண்ணத்தை கற்பனைக்கு அப்பார்பட்ட பிரமாண்ட படைப்பாக வடிவமைத்த வடிமைப்பாளரைப் பற்றிக் குறிப்பிடுவதும் அவசியம்.

தாஜ்மஹால் இந்தியா, பாரசீகம் மற்றும் இஸ்லாமிய கலாச்சாரம் என முப்பரிமாணத் தழுவல்களைக் கொண்டக் கலைக் கட்டிடம். அதாவது மொகலாயர்களின் கலை ஆதிக்கம் கொண்ட பிரமாண்ட படைப்புகளில் இன்றும் மூச்சு விட்டுக் கொண்டிருக்கும் படைப்பெனில் அது தாஜ்மஹால்.

இப்படி மதம் கடந்து, மொழி கடந்து இந்தியன் என்கிற ஒற்றைப் புள்ளியில் தலை நிமிர்ந்து பெருமைப்படக்கூடிய கட்டிடமான தாஜ்மஹால் உருவான வரலாறு பலரும் அறிந்ததே. தன் ஆசை மனைவி மும்தாஜின் கடைசி ஆசையை நிறைவேற்றவே ஷாஜகான் தாஜ்மஹாலை நிறுவினார்.

ஷாஜகான்  கட்டிடக் கலையில் பெரும் ஆர்வம் கொண்டவர் .  தன் மனைவிக்காகக் கட்டப்போகும் கட்டிடம் உலக அளவில் பேசப்பட வேண்டும் என்பதற்காக உலக அளவில் கைத்தேர்ந்த கட்டிடக் கலை வடிவமைப்பாளர்களை வரவழைத்து தாஜ்மஹாலின் பிளான் வரைபடம் வரையப்பட்டுள்ளது.

இருப்பினும் அவர்களின் பெயர்களை ஷாஜகான் எந்த இடத்திலும் குறிப்பிட விரும்பவில்லை. அவர்களின் பெயர்களும் வரலாற்றிலிருந்து அழிக்கப்பட்டுள்ளது. காரணம், அவர் எல்லாவற்றையும் தாண்டி அந்த கட்டிடத்தின் பெருமை மட்டுமே பேசப்பட வேண்டும் என நினைத்திருக்கிறார். அதனால்தான் தன்னைப் பற்றியும், அந்தக் கட்டிடம் கட்டப்பட்ட பின்னனி குறித்தும் எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை. அதன் ரகசியம் இன்றும் ரகசியமாகவே காக்கபடுகிறது.

இருப்பினும் அந்த ரகசியத்தை கட்டிடக் கலை வல்லுநர்கள் கண்டறிந்துள்ளனர். தாஜ்மஹாலைக் கட்ட கட்டிடக் கலைஞர்கள் மொத்தம் முப்பத்தி ஏழு (37 ) பேர் வேலை செய்திருக்கின்றனர். அதில் முதன்மை கட்டிடக் கலை வல்லுநராக லஹோராவைச் சேர்ந்த ’உஸ்தான் அஹமத்’ என்பவர்தான் இரவு பகல் பாராது அவர்களை வழி நடத்தி உழைத்திருக்கிறார். தாஜ் மஹாலின் வரைபடப் பிளானையும் அவர்தான் வரைந்திருக்கிறார். டெல்லி செங்கோட்டையை வடிவமைக்க பிளான் போட்டவரும் இவர்தான்.

மேலும் தாஜ்மஹாலின் ஒவ்வொரு பக்கங்களும் ஒவ்வொரு உலக கட்டிடக் கலைக் கலைஞர்களின் ஆதிக்கம் இருக்கிறது. இதற்கென தனியாக கிரியேட்டிவ் டீம் உருவாக்கியிருக்கின்றனர். தாஜ்மஹால் பல கட்டிடக் கலைகளைத் தழுவியது என்பதற்கு அந்த கிரியேட்டிவ் டீம்தான் சாட்சி. இன்றைய கட்டிடக் கலைஞர்கள், தாஜ்மஹாலைத் தழுவிய உலகின் பிரபல கட்டிடங்களை வைத்து அந்த டீமில் யார் யாரெல்லாம் இருந்திருப்பார்கள் என்பதைக் கண்டறிந்துள்ளனர்.

அதில் துருக்கியில் உள்ள துர்க்கிஷ் டோம் ஓட்டோமன் கட்டிடத்தின் உருளை வளைவைக் கட்டிய இஸ்மைலி அஃபண்டி தாஜ்மஹாலின் மேற்புற உருளை வளைவைக் கட்டியிருக்கிறார்.  லஹோரில் உள்ள கோல்ட்ஸ்மித் கட்டிடத்தின்  உச்சியில் உள்ள கூம்பை வடிவமைத்த குவாஸிம் கான்தான் தாஜ்மஹாலின் உச்சியில் உள்ள கூம்புவை வடிவமைத்துள்ளார்.  இப்படியாக ஒவ்வொரு கட்டிடக் கலையை வைத்து அந்தக் குழுவில் இவர்களெல்லாம் இருந்திருக்கக் கூடும் என யூகிக்கின்றனர்.

இப்படி இவர்கள்தான் அந்த பிரமாண்டத்திற்கான அச்சானியாக இருந்துள்ளனர். ஷாஜகான் அவர்களை இயக்கும் சக்தியாகவும் அவர்களின் தேவைகளை தடையில்லாமல் வழங்கவும் ஏற்பாடு செய்துள்ளார். இந்தியா, பாரசீகம் என மொத்தம் 20,000 வேலையாட்கள் வேலை செய்துள்ளனர். அதேபோல் ஒட்டோமன் பேரரசும் ஷாஜகானிற்கு உதவியுள்ளது. அதிக எடை நிறைந்த பொருட்களை சுமக்க ஆயிரம் யானைகளைப் பயன்படுத்தியுள்ளனர். எப்படியிருந்தாலும் அதை ஒருவர் டிசைன் செய்திருந்தாலும் ஒரு குழுவின் முயற்சியாலேயே சாத்தியம் என்பதே உண்மை.

ஐ.பி.எல் அணிகள் குறித்த முழு விவரம்!

First published:

Tags: Tajmahal