இந்த கிராமத்தில் எல்லாமே உயரம்தான் : இந்தியாவின் உயரமான கிராமம் பற்றி தெரியுமா ?

பனிசூழ் தோற்றத்தில் வெள்ளை உலகமாகக் காட்சியளிக்கும் இது பைக் ரைடர்களுக்கு விருப்பமான இடம்.

Web Desk | news18
Updated: June 27, 2019, 6:03 PM IST
இந்த கிராமத்தில் எல்லாமே உயரம்தான் : இந்தியாவின் உயரமான கிராமம் பற்றி தெரியுமா ?
ஹிக்கிம்
Web Desk | news18
Updated: June 27, 2019, 6:03 PM IST
ஹிக்கிம்.. இந்தியாவின் மிக உயரமான கிராமம் என்ற பெருமை கொண்டது. ஹிமாச்சலப் பிரதேசம், லஹால் மற்றும் ஸ்பிட்டி மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த கிராமம் கடல் மட்டத்திலிருந்து 14,400 அடி உயரத்தில் அமைந்துள்ளது. பனிசூழ் தோற்றத்தில் வெள்ளை உலகமாகக் காட்சியளிக்கும் இது பைக் ரைடர்களுக்கு விருப்பமான இடம்.

கண்களுக்கு விருந்தளிக்கும் இந்த பரந்த நிலப்பரப்பில் புத்த மடாலயங்களும் , புத்த போதகர்களும்தான் அதிகமாக வசிக்கின்றனர்.

இந்த கிராம மக்கள் தங்களின் வாழ்வாதாரத்திற்குத் தேவையான பொருட்களை வாங்க வேண்டுமெனில் 46 கி. மீட்டர் தொலைவில் உள்ள கஸா கிராமத்திற்குத்தான் வர வேண்டும். இதுதான் அவர்களுக்கு டவுன். கடந்த 2011 ஆண்டு கணக்கெடுப்புப் படி இங்கு மொத்தம் 77 வீடுகள் உள்ளன. 187 ஆண்கள் மற்றும் 179 பெண்கள் என மொத்தம் 366 பேர் மட்டுமே வசிக்கின்றனர். இங்குக் கட்டப்படும் வீடுகள் கற்கள் மற்றும் கட்டைகள் மட்டுமே பயன்படுத்துகின்றனர்.
உலகின் உயரமான தபால் நிலையம்

இந்த கிராமத்தின் மற்றொரு சிறப்பு என்னவெனில் இங்கு இருக்கும் தபால் நிலையம் உலகின் உயரமான இடத்தில் இருப்பதுதான்.  1983 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த தபால் நிலையம் அதிக பனிப் பொழிவுக் காரணமாகக் குளிர் காலத்தில் மட்டும் முற்றிலுமாக மூடி வைக்கப்படும். இந்த தபால் நிலையத்தோடு அதன் தபால்காரரான ரின்சென் செரிங்கும் உலகின் பிரபலமானவர். இவர் தன்னுடைய 22 வயதிலிருந்து இன்று வரை பணிபுரிந்து கொண்டிருக்கிறார். இது அங்கிருக்கும் மக்களுக்குச் சேமிப்பு வங்கியாகவும் செயல்படுகிறது. பணம் எடுக்கவும் போடவும் இந்த தபால் நிலையம்தான் உதவியாக இருக்கிறது.

Loading...உயரமான வாக்குச் சாவடி

அடுத்ததாக உலகின் உயரமான வாக்குச் சாவடி இருப்பதும் இங்குதான். இது லிம்கா புக் ஆஃப் ரெக்கார்டிலும் இடம் பெற்றுள்ளது. பின் அந்த ரெக்கார்டை தாஷிகாங் கிராமம் தட்டிச் சென்றது.

நீங்கள் ஒருமுறையேனும் இந்த கிராமம் சென்று வரவேண்டும் என்று நினைத்தால் கோடைக்காலமான ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதத்தில் சென்று வரலாம். பனிப் பருவத்தில் இந்த கிராமத்திற்குச் செல்லும் பாதைகள் முடக்கப்படும். எந்த போக்குவரத்தும் இருக்காது என்பதால் செல்வது கடினம். ரயில் பயணம் மேற்கொள்வதானால் ஜோகிந்தர் நகரில் இறங்கி அங்கிருந்து ஹிக்கிம் 375 கிலோ மீட்டரில் உள்ளது. அங்கிருந்து ஹிக்கிம் செல்ல கால் டாக்ஸி அல்லது பொது போக்குவரத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: June 27, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...