பிடித்தவரை மணம் முடிக்க திருமண சந்தை : எங்கு உள்ளது தெரியுமா..?

ஜிப்ஸி இன மக்களைப் பொருத்தவரை திருமணம் 16 முதல் 20 வயதுக்குள் செய்ய வேண்டும். 25 வயதைத் தாண்டினாலே அவர்கள் திருமண வயதைக் கடந்தவர்களாக பார்க்கப்படுகிறது.

news18
Updated: September 18, 2019, 9:53 PM IST
பிடித்தவரை மணம் முடிக்க திருமண சந்தை : எங்கு உள்ளது தெரியுமா..?
திருமணச் சந்தை
news18
Updated: September 18, 2019, 9:53 PM IST
பணத்தை தண்ணீர் போல் செலவழித்து திருமணம் நடத்தி மெச்சிக்கொள்ளும் இந்த காலகட்டத்திலும் ஆரவாரமே இல்லாமல் நடக்கும் இந்த திருமணச் சந்தை திகைப்பூட்டக் கூடிய விஷயமாக இருக்கிறது.

மிகவும் வறுமையில் இருக்கக் கூடிய பல்கேரியவின் ஜிப்ஸி இன மக்கள் கூட்டாக இணைந்து நடத்துவதே இந்த திருமணச் சந்தை. காலம் காலமாக பல்கேரியாவின் மொகிலா என்ற கிராமத்தில் உள்ள குதிரைச் சந்தை மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த திருமண சந்தைக்கு குழந்தைகள், பெரியவர்கள் என குடும்பத்தோடு சுற்றுலாவிற்குச் செல்வதுபோல் செல்கின்றனர். சந்தையில் விளையாட்டு நிகழ்ச்சி, உணவுக் கடைகள் என பொழுதுபோக்கு அம்சங்களும் இடம்பெறுகின்றன.
இதற்கிடையில் திருமணத்திற்காகக் காத்திருக்கும் இளம் பெண்கள் மற்றும் ஆண்கள் சந்தையில் உலா வர பிடித்தவரை தேர்வு செய்து அங்கேயே பேசுகின்றனர். இருவருக்கும் பிடித்துவிட்டால் பெண் வீட்டாருடன் அந்த இளைஞர் பேச வேண்டும். பெற்றோர்களுக்கும் அவர்களுடைய குணாதிசயங்கள் பிடித்திருந்தால் வரதட்சனை பேசப்படுகிறது. அதில் பெண் வீட்டார் கேட்கும் வரதட்சனையை அந்த இளைஞர் தர வேண்டும். அந்த தொகையில் உடன்பட்டால் இருவரின் திருமணம் அங்கேயே நிச்சயிக்கப்படுகிறது.

இந்த வரதட்சணை என்பது பெண்ணின் அழகை வைத்து தீர்மானிக்கப்படுகிறது. ஒரே பெண்ணை பல ஆண்கள் திருமணம் செய்து கொள்ள விருப்பப்பட்டால் வரதட்சனை மதிப்பு எகிறும். பெண் வீட்டார் கேட்கும் அதிகபட்ச வரதட்சணையை யார் கொடுக்கிறாரோ அவருக்கே அந்தப் பெண்.Loading...

ஜிப்ஸி இன மக்களைப் பொருத்தவரை திருமணம் 16 முதல் 20 வயதுக்குள் செய்ய வேண்டும். 25 வயதைத் தாண்டினாலே அவர்கள் திருமண வயதைக் கடந்தவர்களாக பார்க்கப்படுகிறது.

பார்க்க:

சைபர் க்ரைம் முறைகேடுகளில் சிக்காமல் தப்பிப்பது எப்படி?


லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: September 18, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...