எங்குப் பார்த்தாலும் இரட்டையர்களாக இருக்கும் அதிசயக் கிராமம் : இந்தியாவில் எங்கு உள்ளது?

இந்தியாவில் 1000 இரட்டைக் குழந்தைகள் பிறக்கிறார்கள் எனில் அதில் 45 குழந்தைகள் இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கின்றனர்.

news18
Updated: June 13, 2019, 5:14 PM IST
எங்குப் பார்த்தாலும் இரட்டையர்களாக இருக்கும் அதிசயக் கிராமம் : இந்தியாவில் எங்கு உள்ளது?
இரட்டையர் கிராமம்
news18
Updated: June 13, 2019, 5:14 PM IST
உலக அளவில் இந்த கிராமம் புரியாத புதிராகவே உள்ளது. எங்குத் திரும்பினாலும் கண்களுக்கு இரண்டு இரண்டாகத் தெரியும் மக்கள். காண்பது நிஜமா எனக் கண்களைக் கசக்கிப் பார்த்தாலும் இரண்டாகவேத் தெரிகிறது.

பின்புதான் தெரிந்தது அது இரட்டையர்கள் அதிகமாக வசிக்கும் கிராமம் என்று... கேரளா மலப்புரம் மாவட்டத்தில் உள்ள கொடினி என்னும் கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட இரட்டையர்கள் வசிக்கின்றனர். 20 ஆயிரம் பேர் வசிக்கும் இந்த கிராமத்தில் இத்தனை இரட்டையர்களா என ஆராய்ச்சியாளர்களும் வியந்து காரணத்தைக் கண்டறிந்து வருகின்றனர். சிலர் இங்கு இருக்கும் சுற்றுச்சூழல், உணவுப் பழக்கம், தண்ணீர் போன்றவையும் காரணங்களாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
இரட்டையர்கள் அதிகமாக வசிக்கும் நாடுகள் வரிசையில் நைஜீரியா, பிரேசில் போன்ற நாடுகள்தான் எப்போதும் பேசப்படும். குறிப்பாக நைஜீரியா இரட்டையர்களின் தலை நகரம் என அழைக்கப்படுகிறது.அதற்கு அடுத்தபடியாக இந்தியாவில் உள்ள கேரள மாநிலம் பேசப்படுகிறது. இங்கு இந்தியாவில் 1000 இரட்டைக் குழந்தைகள் பிறக்கிறார்கள் எனில் அதில் 45 குழந்தைகள் இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கின்றனர். இதனால் இந்த கிராமம் உலக அளவில் பிரபலமாகப் பேசப்பட்டு வருகிறது. இதை நினைத்து அந்த கிராம மக்களும் பெருமையாகக் கருதுகின்றனர்.

Loading...
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: June 13, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...