ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

உங்க சேலரி ஸ்லிப்ல இத கவனிச்சு இருக்கீங்களா.. இந்த ஆப்சன் இருந்தா ஜாக்பாட் தான்

உங்க சேலரி ஸ்லிப்ல இத கவனிச்சு இருக்கீங்களா.. இந்த ஆப்சன் இருந்தா ஜாக்பாட் தான்

லீவ் டிராவல் அலவன்ஸ்

லீவ் டிராவல் அலவன்ஸ்

4 காலண்டர் ஆண்டுகளில் 2 பயணங்களுக்கு இந்த சலுகையை நீங்கள் கோரலாம். ஊழியர்கள் தங்களுக்கு மட்டுமின்றி தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கும் LTA விலக்கு பெறலாம் என்பது கூடுதல் சுவாரசியம்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai |

பணியாற்றும் அலுவலகத்தில் இருந்து பயணம் செய்ய பணம் பெற முடியும் தெரியுமா? பயணம் தொடர்பான அல்லது பயணிக்க வேண்டிய கட்டாயம் உள்ள சில நிறுவங்கங்கள் தங்கள் ஊழியர்களுக்கு டிராவல் அலவன்ஸ் கொடுப்பது பார்த்திருப்போம். அது போல நீண்ட பயணம் செய்ய தேவையான பணத்தையே உங்கள் அலுவலகத்தில் இருந்தே பெற வழி சொல்கிறோம் கேளுங்கள்.

உங்கள் சம்பள ஸ்லிப்பை எடுத்து பாருங்கள். அதில் 'லீவ் டிராவல் அலவன்ஸ் (LTA)' பெறும் ஊழியராக குறிப்பிட்டிருந்தால் ஜாக்பாட் உங்களுக்கு தான். அதுவும் 'ஒரே கல்லில் இரண்டு மாங்காய்' தரும் ஜாக்பாட். ஒன்று. உங்கள் பயணத்திற்கான பணம் உங்கள் அலுவலகத்தில் இருந்து கிடைக்கும். மற்றொன்று நீங்கள் செலுத்த வேண்டிய வரியும் குறையும்.

லீவ் டிராவல் அலொவன்ஸ் என்றால் என்ன?

LTA என்பது விடுப்பில் பயணம் செய்வதற்காக பணியாளர் தனது முதலாளியிடமிருந்து பெறும் ஒருவகையான சலுகை ஆகும். வருடாவருடம் கிடைக்குமா என்றால், அதுக்கு கொஞ்சம் சாரி பாஸ்..முடியாது. ஆனா 4 காலண்டர் ஆண்டுகளில் 2 பயணங்களுக்கு இந்த சலுகையை நீங்கள் கோரலாம். ஊழியர்கள் தங்களுக்கு மட்டுமின்றி தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கும் LTA விலக்கு பெறலாம் என்பது கூடுதல் சுவாரசியம்.

இதையும் பாருங்க :மதுரைக்கு ஒரு நாள் டூர் போறீங்களா..? இந்த 5 இடங்களை கட்டாயம் சுற்றிப்பாருங்க..!

இந்த சலுகையின்கீழ் உங்கள் கணவன் அல்லது மனைவி, பெற்றோர்கள், குழந்தைகள் மற்றும் உடன்பிறந்தவர்கள் போன்ற குடும்ப உறுப்பினர்களையும் நீங்கள் அழைத்துச் செல்லலாம்.

வரிச்சுமையை எப்படி குறைக்கும்?

வரி செலுத்தும் போது வருமான வரி சட்டம் 1961, sec 10(5) இன் கீழ் LTA விலக்கை கோரலாம். இது குறுகிய கால சுற்றுப்பயணத்திற்கு மட்டுமே பொருந்தும். எடுத்துக்காட்டிற்கு ஒருவர் ரூ. 30,000 சம்பளமாக பெறுகிறார் என்றால், அவர் ரூ. 20,000 மட்டுமே LTA பெற முடியும். அந்த பணத்திற்கு வரிவிலக்கு பெற்றுக்கொள்ளலாம்.

LTA வைப் பெறுவது எப்படி?

இந்த உதவித்தொகையைப் பெறும் ஊழியர்கள், இந்தியாவிற்குள் மட்டுமே பயணம் செய்ய முடியும். ஒருவர் ஒரே விடுமுறையில் வெவ்வேறு இடங்களுக்குப் பயணிக்கும்போது, அந்த பயணத்தில் உள்ள நீண்ட தூர டெஸ்டினேஷனுக்கு இதை பயன்படுத்திக்கொள்ளலாம்.

இதையும் படிங்க:  அருணாச்சல பிரதேசம் செல்ல விரும்பினால் இனி ஈஸியா பெர்மிஷன் கிடைத்துவிடும்... இதை ஃபாலோ பண்ணுங்க..!

நிபந்தனைகள்:

  • உங்கள் சம்பள வகையில் LTA இருந்தால் மட்டுமே இதை நீங்கள் இதை பயன்படுத்த முடியும்.
  • அதேபோல் கோரிய LTA வழங்க அங்கீகரிக்கப்பட்ட 4 ஆண்டுகளுக்கு இடையில் 2 பயணங்களுக்கான அலொவன்ஸ் விலக்குகளை நீங்கள் பயன்படுத்தவில்லை என்றால், அடுத்த தொகுதியின் முதல் ஆண்டில் அதைப் பயன்படுத்தலாம்.
  • பணியாளர்கள் LTAஐப் பெறுவதற்கான காலக்கெடு தேதியை முதலாளிகள் அறிவிப்பார்கள்.

ஆவணங்கள்

LTA பெற தேவையான ஆவணங்கள் LTA ஐப் பெறுவதற்கான செயல்முறை நீங்கள் வேலை செய்யும் இடத்தைப் பொறுத்தே அமைகிறது. பொதுவாக, பயணச்சீட்டுகள், போர்டிங் பாஸ், பயண முகவர் வழங்கிய விலைப்பட்டியல் போன்ற பயணச் சான்றுகள் மற்றும் சுய அறிவிப்பு ஆகியவற்றை நீங்கள் சமர்பிக்க வேண்டும். ஆனால் நீங்கள் ஹோட்டலில் தங்குவது, உணவு, ஷாப்பிங் ஆகியவற்றை எல்லாம் LTA விலிருந்து பெற முடியாது.

இப்பொழுதே உங்களுடைய சம்பள ரசீதைப் பாருங்கள். நீங்கள் LTA பெறுகிறீர்கள் என்றால் உடனே ஒரு டூர் பிளானை ரெடி செய்யுங்கள் !

Published by:Ilakkiya GP
First published:

Tags: Income tax, Travel, Travel Guide