ஊரடங்கு முடிந்தவுடன் தோனியும் சாக்‌ஷியும் இங்குதான் சுற்றுலா போறாங்களாம்..!

”ஊரடங்கு எங்களை வெகுவாக பாதிக்கவில்லை. தினசரி இயல்பு வாழ்க்கையைப் போல்தான் நகர்கிறது”

ஊரடங்கு முடிந்தவுடன் தோனியும் சாக்‌ஷியும் இங்குதான் சுற்றுலா போறாங்களாம்..!
தோனி சாக்‌ஷி
  • Share this:
இந்த வருடம் ஐபிஎல் இருந்திருந்தால் சென்னையே களை கட்டியிருக்கும்; இருந்தாலும் நன்மைக்கே என நினைக்கும்போது கடந்து செல்வதே எதார்த்தம்.

ஆனாலும் நம் கிரிக்கெட் வீரர்கள் ரசிகர்களுடன் தொடர்பில் இருக்க அவ்வபோது இந்த ஊரடங்கில் வீட்டில் அவர்கள் செய்யும் குறும்புத்தனங்கள், வீட்டு வேலைகளை புகைப்படங்களாகவோ, வீடியோவாகவோ பகிர்ந்து வருகின்றனர்.

சமீபத்தில் தோனியின் மனைவி சாக்‌ஷி சென்னை சூப்பர் கிங் அதிகாரப்பூர்வ தளத்தில் பேசிய வீடியோ கால், ஒன்றில் ஊரடங்கு முடிந்ததும் உங்கள் திட்டம் என்ன? என்ற கேள்விக்கு கிரிக்கெட் ஆட்டம் தொடர்ந்தால் அதை கழிப்பதில் நேரம் சரியாக இருக்கும். இல்லையெனில் உத்திரகாண்ட் போகலாம் என்ற திட்டம் உள்ளது என்று கூறியுள்ளார்.

 
View this post on Instagram
 

#WhistlePodu @ruphas


A post shared by Chennai Super Kings (@chennaiipl) on


அதாவது அந்த வீடியோவில் ”மஹிக்கு கிரிக்கெட் இருந்தால் கிரிக்கெட். கிரிக்கெட் தள்ளிபோடப்பட்டால் இருவரும் உத்திரகாண்ட் மலைபிரதேசங்கள் நோக்கி பயணிக்கவுள்ளோம். மஹிக்கு, பனி என்றால் மிகவும் பிடிக்கும்” என்று கூறியுள்ளார்.

மேலும் அதில் இந்த ஊரடங்கு எங்களை வெகுவாக பாதிக்கவில்லை. தினசரி இயல்பு வாழ்க்கையைப் போல்தான் நகர்கிறது. குறிப்பாக ஸிவா முற்றிலும் எங்களின் நேரத்தை எடுத்துக்கொள்கிறாள் என்று கூறியுள்ளார்.லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

பார்க்க :

 
First published: June 3, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading