தாஜ்மஹாலை மிஞ்சிய தாராவி: இந்தியாவில் விருப்பமான இடமாக சுற்றுலாவாசிகள் கருத்து!

ஆசிய அளவில் சுற்றுலாவாசிகளின் விருப்பமான முதல் 10 இடங்களில் இந்தியாவிலிருந்து தாராவி மட்டுமே இடம் பெற்றுள்ளது.

news18
Updated: July 3, 2019, 7:00 PM IST
தாஜ்மஹாலை மிஞ்சிய தாராவி: இந்தியாவில் விருப்பமான இடமாக சுற்றுலாவாசிகள் கருத்து!
தாஜ் மஹாலை மிஞ்சிய தாராவி
news18
Updated: July 3, 2019, 7:00 PM IST
ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப் பகுதி மும்பையின் தாராவி. தமிழகத்தில் ஒரு சிலருக்கு மட்டுமே தெரிந்திருந்த தராவி, ரஜினியின் காலா படத்திற்குப் பின் அனைவருக்கும் தெரிந்த இடமாகிவிட்டது.

தற்போது சுற்றுலாவாசிகளின் விருப்பமான இடமாக தாராவி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தை இதற்கு முன்பு வரை தாஜ்மஹால் பிடித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

டிராவலர் நிறுவனம் ஒவ்வொரு வருடமும் சுற்றுலாவாசிகளிடம் கருத்துக் கணிப்பு நடத்தும். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான கருத்துக் கணிப்பை வெளியிட்டுள்ளது. அதில் முதல் பத்து இடங்களில் ஒன்றாக இந்தியாவின் தாராவி, பலரால் அதிகம் விரும்பிச் செல்லும் இடமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.


இதில் உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் முதல் இடத்தில் இடம் பெறவில்லை என்பதுதான் ஆச்சரியம்.

தாராவியை அடுத்து பைக்கில் பழைய டெல்லியைச் சுற்றிப் பார்ப்பது, மூன்றாம் இடத்தில் தாஜ்மஹாலை சுற்றிப் பார்ப்பது என டாப் 10 இந்திய சுற்றுலா இடங்களையும் அந்த நிறுவனம் பட்டியலிட்டுள்ளது.

கருத்துக் கணிப்பு முடிவின் படி, ஆசிய அளவில் சுற்றுலாவாசிகளின் விருப்பமான முதல் 10 இடங்களில் இந்தியாவிலிருந்து தாராவி மட்டுமே இடம் பெற்றுள்ளது.

Loading...
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: July 3, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...