தந்தேராஸ் பண்டிகை கொண்டாடுவதற்கான காரணம் மற்றும் அதன் முக்கியத்துவம் பற்றி தெரியுமா..?

தந்தேராஸ் பண்டிகை கொண்டாடுவதற்கான காரணம் மற்றும் அதன் முக்கியத்துவம் பற்றி தெரியுமா..?

ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 13ம் தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளியின் முதல் ஆரம்பப் பண்டிகை இது தான்.

ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 13ம் தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளியின் முதல் ஆரம்பப் பண்டிகை இது தான்.

  • Share this:
தந்தேராஸ் பண்டிகை தனத்ரயோதாஷி என்றும் அழைக்கப்படும். இது ஒளி பண்டிகையான தீபாவளியின் தொடக்கத்தைக் குறிக்கிறது. அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 13ம் தேதி கொண்டாடப்படுகிறது. மஹாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் 5 நாட்களுக்கு கொண்டாடப்படும் தீபாவளியின் முதல் ஆரம்பப் பண்டிகை இது தான்.

இந்துக்கள் தன்தேரா நாளில், ஆயுர்வேதத்தின் கடவுளான தன்வந்தரியை வணங்குகிறார்கள். மனிதகுலத்தின் முன்னேற்றத்திற்காக ஆயுர்வேதத்தின் ஞானத்தை தன்வந்தரி வழங்கினார் என்றும், நோய்களிலிருந்து விடுபட அவர் உதவுவதாகவும் கூறப்படுகிறது. அதே தந்தேராஸ் நாளில், லட்சுமி பூஜை மாலையில் செய்யப்படுகிறது. எனவே இந்த புனித நாளில் குபேரா பகவான், தன்வந்தரி, எமராஜ், லட்சுமி தேவி ஆகியோரை மக்கள் வழிபடுகிறார்கள்.

தந்தேராஸ் பூஜையின் முக்கியத்துவம்:

தந்தேராஸில், மக்கள் தங்கள் வீடுகளுக்கு வெளியே இரவில் எம தீபத்தை ஒளிரச் செய்வார்கள். புராணங்களின்படி, த்ரயோதாஷி திதியில் அவ்வாறு செய்வது மரணத்தின் கடவுளான யமராஜை விரட்ட முடியும் என்பது ஐதீகம். தந்தேராஸ் தினத்தன்று, சமுத்திரமந்தனின் போது லட்சுமி தேவி செல்வத்தின் கடவுளான குபேரா பகவானுடன் தோன்றியதாகவும் கூறப்படுகிறது. அதனால்தான் இந்த நாளில் அவர்களிடம் பிரார்த்தனை செய்வது உங்கள் குடும்பத்திற்கு செல்வத்தை தரும் என்று சொல்லப்படுகிறது. மேலும் அந்த தினத்தில் புதிய பாத்திரங்கள் மற்றும் நகைகள் அல்லது தங்க நாணயங்கள் மற்றும் வெள்ளி பொருட்களை வாங்குவது உங்கள் குடும்பத்திற்கு நல்ல அதிர்ஷ்டத்தைத் தரும் என்று நம்பப்படுகிறது. சிலர் தந்தேராஸ் தினத்தில் மின்னணு பொருட்கள் மற்றும் வாகனங்களையும் வாங்குகிறார்கள்.புராணங்கள் கூறும் கதை என்ன?

புராணக் கதையின் படி, சாபத்திற்கு ஆளான இளவரசரை காப்பாற்றும் மனைவியின் செயல் தந்தேராஸ் நிகழ்வுடன் இணைக்கப்பட்டுள்ளது. அதில் ஹிமா என்ற அரசனின் மகனுக்கு ஒரு சாபம் அளிக்கப்பட்டது. அந்த சாபம், அவன் தனது திருமணத்திற்குப் பின்பு 4 வது நாள் மரணமடைவான் என்பது தான். ஒரு ரகசிய வேண்டுகோள் மூலம் இதனை அறிந்துகொண்ட இளவரசனின் மனைவி கணவனைச் சாபத்திலிருந்து காப்பாற்ற ஒரு திட்டத்தை தீட்டுகிறார். அவர்களுடைய திருமணமான 4 வது நாளன்று தூங்க வேண்டாமென அவள் தனது கணவனுக்கு வேண்டுகோள் விடுகிறார்.

மேலும் தங்கம் மற்றும் இதர ஆபரணங்கள், நாணயங்களை அவளது கணவனின் படுக்கையறை கதவின் முன் குவித்தார். அரண்மனை முழுவதும் முடிந்த அளவு நிறையத் தீபங்களை ஏற்றினார். பின்னர் தனது கணவனின் அருகில் அமர்ந்து அவர் தூங்கி விடாமல் இருப்பதற்காக இரவு முழுவதும் பல்வேறு கதைகளைச் சொல்லியும் பாடலைகளை பாடியும் தூக்கத்தை கலைகிறார். அந்த நேரத்தில் யமதர்ம ராஜன் அரசன் ஹிமாவின் மகனைத் தேடி பாம்பு வடிவில் வந்தார். ஆனால் பல்வேறு ஆபரணங்கள், விளக்குகள் மற்றும் நாணயங்களின் ஒளி அவரது பார்வையை மறைத்ததால், அவரால் அரண்மனை படுக்கையறைக்குள் நுழைய முடியவில்லை.ஆபரணக் குவியல்களின் உச்சியில் ஏறி அமர்ந்து இளவரசனின் மனைவி பாடிய பல்வேறு காதுக்கினிய பாடல்களை எமன் கேட்கத் தொடங்கினார். காலைப் பொழுது விடிந்ததும் யமதர்ம ராஜன் இளவரசனுக்கு எந்தத் தீங்கும் செய்யாமல் அங்கிருந்து வெளியேறினார். இதனடிப்படையிலேயே எம தீபம் ஏற்றப்படுகிறது. மரணத்தின் கடவுளான எமதர்ம ராஜனின் நினைவாக, மக்கள் அன்று இரவு முழுவதும் தங்கள் வீடுகளில் விளக்குகளை ஏற்றி வைத்து வழிபடுகிறார்கள். அதேபோல, தாந்தேராஸ் தினத்தன்று மக்கள் தங்க ஆபரணங்களையும், நாணயங்களையும் வாங்குவதற்கு இதுவும் ஒரு காரணமாகும். மேலும், பக்தர்கள் தந்தேராஸ் தினத்தன்று குபேர லக்ஷ்மி பூஜை செய்கிறார்கள். அன்றைய தினத்தில் தங்கம் வாங்குதல் ‘செல்வம்' நல்ல அதிருஷ்டத்தின் அறிகுறியாக நம்பப்படுகிறது. அதனால் தான் மக்கள் கடவுள் லக்ஷ்மி தேவி அல்லது கணேசரின் உருவப்படங்கள் பொறித்த தங்க நாணயங்களை அன்றைய தினத்தில் வாங்குகிறார்கள்.

2020ம் ஆண்டில் தந்தேராஸ் பூஜை நடத்தும் தேதி, நேரம்:

Drykpanchang.com இன் படி, இந்த ஆண்டு தந்தேராஸ் பூஜை நவம்பர் 13 அன்று வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுகிறது. தந்தேராஸ் பூஜையின் செய்யும் தருணம் மாலை 05:28 மணி முதல் மாலை 05:59 மணி வரை ஆக இருக்கும். மேலும், தந்தேராஸ் தினத்தன்று சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு பிரதோஷ் காலில் அதாவது மாலை 05:28 மணி முதல் இரவு 08:07 மணி வரை லட்சுமி பூஜை செய்யலாம்.
Published by:Sivaranjani E
First published: