யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளங்களின் பட்டியலில் அசாமின் சாரெய்டியோ மொய்டாம்ஸ் புதைகுழிகளின் பெயரை சேர்க்க மத்திய அரசு முன்மொழிந்துள்ளதாக அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கடந்த வாரம் அறிவித்தார். அப்படி அந்த புதை குழிகளின் சுவாரசியம் என்ன ? ஏன் அதை பாரம்பரிய தலமாக அறிவிக்க வேண்டும் என்று தெரிந்து கொள்வோமா?
அஸ்ஸாமில் உள்ள சிப்சாகர் நகரத்திலிருந்து தோராயமாக 30 கி.மீ தொலைவில் 1253 ஆம் ஆண்டில் முதல் அஹோம் மன்னர் சாவோ லுங் சியுகாபாவால் நிறுவப்பட்ட அஹோமின் முதல் தலைநகரான சாரெய்டியோ உள்ளது. இங்குள்ள மலையில் சுமார் 90 அரச புதைகுழிகள் உள்ளன. அது தான் சாரெய்டியோ மொய்டாம்ஸ் என்று அழைக்கப்படுகிறது.
Charaideo என்ற வார்த்தை, Che-Rai-Doi என்ற மூன்று தை அஹோம் வார்த்தைகளிலிருந்து பெறப்பட்டது. "சே" என்றால் நகரம் என்று பொருள்."ராய்" என்றால் "பிரகாசம்" என்று பொருள் மற்றும் "டோய்" என்றால் மலை. சுருக்கமாக, Charaideo என்றால், ஒரு மலையுச்சியில் அமைந்துள்ள ஒரு ஒளிரும் நகரம் என்று பொருள்.
இதையும் படிங்க:நாய்ளை காவல் தெய்வங்கங்களாக கோவில் கட்டி வழிபடும் கிராமம்!
மொய்டங்கள் என்றால் என்ன?
மொய்டம் என்பது அஹோம் அரச குடும்பம் மற்றும் அரச ஊழியர்களின் கல்லறையின் மேல் எழுப்பப்பட்ட ஒரு மண் மேடு. சாரெய்டியோவில் பிரத்தியேகமாக அஹோம் அரச குடும்பத்தின் மொய்டாம்கள் உள்ளன, பிற பிரபுக்கள் மற்றும் தலைவர்களின் மொய்டாம்கள் கிழக்கு அஸ்ஸாம் ஜோர்ஹாட் மற்றும் திப்ருகார் நகரங்களுக்கு இடையேயான பகுதியில் அமைந்துள்ளன.
இறந்தவர்களை தகனம் செய்யும் வழக்கம் போலல்லாமல், அன்றைய கிழக்கு இமாலய மலை பூர்வ குடிகளான அஹோம்கள் உடல்களை அடக்கம் செய்தனர். அஹோம் அரசர்கள் மற்றும் ராணிகள் இந்த மொய்டாம்களுக்குள் புதைத்தனர். இன்னொரு சுவாரசியமான விஷயம் என்னவென்றால் மொய்டமின் புதைக்கப்பட்ட நபரின் அந்தஸ்தை பொறுத்து அவர்களின் கல்லறை உயரம் இருக்குமாம்.
இருப்பினும், இங்குள்ள 90 கல்லறைகளில் தாதர் சிங்க மற்றும் ருத்ர சிங்கவைத் தவிர, பெரும்பாலான மொய்டங்கள் அடையாளம் காணப்படவில்லை. அதுமட்டும் இன்றி 30 கல்லறைகள் தான் நல்ல நிலையில் உள்ளது. மற்றவை எல்லாம் சேதமடைந்துள்ளது.
அஸ்ஸாமின் பிரமிடுகள்:
மொய்டமின் அறைகளுக்குள், இறந்த ராஜா மறுவாழ்க்கைக்கு தேவையான பொருட்களுடன் புதைக்கப்பட்டுள்ளனர். சில கல்லறைகளில் அவர்களது வேலைக்காரர்கள், குதிரைகள், கால்நடைகள் மற்றும் அவர்களின் மனைவிகள் கூட சேர்த்து புதைக்கப்பட்டுள்ளனர். பண்டைய எகிப்தியர்களின் சடங்குகளுடன் அஹோம் அடக்கம் செய்யும் சடங்குகளின் ஒற்றுமை வைத்து சாரெய்டியோ மொய்டமுக்கு "அஸ்ஸாமின் பிரமிடுகள்" என்று பெயரிடப்பட்டது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.