முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / கலை நிகழ்ச்சிகள்... உணவு சந்தை.. தாஜ்மகாலில் களைகட்டும் 10 நாள் திருவிழா...!

கலை நிகழ்ச்சிகள்... உணவு சந்தை.. தாஜ்மகாலில் களைகட்டும் 10 நாள் திருவிழா...!

தாஜ் மஹோத்சவம்

தாஜ் மஹோத்சவம்

தாஜ் மஹோத்சவின் போது, ​​இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 400 கைவினைஞர்கள் தங்கள் கலைப் படைப்புகளை இங்கே  காட்சிப்படுத்துகின்றனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Agra, India

காதல் சின்னம், உலக அதிசயங்களில் ஒன்று , இந்தியாவின் அடையாளம் என்று பல்வேறு முகங்களை கொண்ட தாஜ் மஹாலில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெரும் 10 நாள் திருவிழாவான தாஜ் மஹோத்சவ் இன்று கோலாகலமாக தொடங்கியுள்ளது. உத்தரபிரதேசத்தின் சுற்றுலா அமைச்சகத்தால் நடத்தப்படும் 10 நாள் திருவிழாவின் முக்கிய குறிக்கோளே தாஜ் மஹால் நோக்கி வரும் உள்ளூர் மற்றும்  வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் எண்ணிக்கையை அதிகரிப்பதே ஆகும்.

தாஜ்மஹாலின் கிழக்கு நுழைவாயிலுக்கு வெளியே நடைபெறும் இந்த வருடாந்த திருவிழாவில் உலகின் பல பகுதிகளில் இருந்து பல்வேறு கைவினைப்பொருட்கள் மற்றும் பாரம்பரிய நடனங்கள் அரங்கேறுகின்றன. 1992 இல் முதன் முறையாக தொடங்கப்பட்ட தாஜ்  மஹோத்சவ் தாஜ் மஹாலின் அழகையும் வரலாற்றையும் கொண்டு செல்லும் நோக்கத்தை அடிப்படையாக கொண்டுள்ளது. தாஜ் மஹால் சார்ந்த கைவினை பொருட்களை இங்கு அதிகம் காணலாம். அது போக இந்திய கலாச்சார கலைவையை ஒருங்கே அனுபவிக்கும் இடமாகவும் இதை மாற்றுகின்றனர்.

தாஜ் மஹோத்சவின் போது ​​இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 400 கைவினைஞர்கள் தங்கள் கலைப் படைப்புகளை இங்கே  காட்சிப்படுத்துகின்றனர். வடகிழக்கு இந்தியாவின் மூங்கில் வேலைப்பாடுகள், தமிழ்நாட்டின் மர வேலைப்பாடுகள், ஆக்ராவின்  பளிங்கு மற்றும் ஜர்தோசி வேலைகள், தென்னிந்தியா மற்றும் காஷ்மீரில் இருந்து காகித மேஷ் கலைப்பொருட்கள், மேற்கு வங்கத்தில் இருந்து காந்தா வேலைப்பாடு அமைந்த துணிகள்,  ஃபரூகாபாத்தில் இருந்து கையால்  அச்சடித்த துணிகள் முக்கிய இடம் பெறுகின்றன.

அது போக, காஷ்மீர் மற்றும் குஜராத்தில் இருந்து தரைவிரிப்புகள், பனாரஸில் இருந்து பட்டு மற்றும் ஜரி வேலைகள்,  பதோஹியில் இருந்து கையால் செய்யப்பட்ட கம்பளங்கள் போன்ற பொருள்களையும் இங்கே வாங்க முடியும். சுருங்க சொல்ல வேண்டும் என்றால் இந்தியரின் உள்ள அணைத்து மாநிலங்களில் இருந்தும் பிரசித்தி பெட்ரா பொருட்களை இங்கே வாங்க முடியும்.

2023 நடக்கும் மஹோத்சவம் கலை பொருட்கள் மட்டுமின்றி, பாரம்பரிய ஆக்ரா உணவுகள் முதல் பிராந்திய உணவு வகைகள் வரை இந்திய உணவுகளுக்கான மையமாகவும் இந்த திருவிழா மாறுகிறது. இந்த ஆண்டின் தீம், " கலாச்சாரத்தின் நிறம் , தாஜோடு " என்று நிர்ணயித்துள்ளனர்.

இதையும் படிங்க: ’கேரளாவில் ஒரு செஸ் கிராமம்’.. இங்க பொழுதுபோக்கே இது மட்டும்தான்..!

பிப்ரவரி 18 முதல் பிப்ரவரி 27, 2023 வரை காலை முதல் இரவு வரை இந்த திருவிழா நடைபெற இருக்கிறது, விழாவிற்காக தனி நுழைவுக் கட்டணம் எதுவும் கிடையாது. தாஜ் மஹாலை சுற்றி பார்க்க வாங்கும் நுழைவு கட்டணம் மட்டும் போதுமானது. பெரியவர்களுக்கு 50 ரூபாயும் குழந்தைகளுக்கு 10 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

அதே போல இரவின் ஒளியில் மிளிரும் தாஜ் மஹாலை பார்க்கவும் வாய்ப்புள்ளது. பௌர்ணமிக்கு முன்னும் பின்னும் 2 நாட்கள் சேர்ந்து மொத்தம் 5 நாட்கள் இந்த அனுமதியை பெறலாம். இதற்கான அனுமதியை ஆக்ரா தொல்லியல் துறை அலுவலகத்தில் பெறவேண்டும். அதன் மூலம் இரவு 8.30 மணி முதல் 12.30 வரை அனுமதிக்கப்படுவர்.

First published:

Tags: Festival, Taj Mahal