நதியில் சறுக்கு படகு செலுத்தும் காட்சிகளை படங்களில் பார்த்திருப்போம். நண்பர்களுடன் நதியின் நீரோட்டத்துடன் சறுக்கு படகு செலுத்த கங்கை நதிக்கும், உத்திரகாண்டுக்கும் செல்ல வேண்டும் என்று இல்லை. நம் தென்னிந்தியாவிலேயே அதற்கான வாய்ப்பு உள்ளது. இந்த விளையாட்டுக்கு வாட்டர் ராஃப்டிங் என்று பெயர்.
கர்நாடகாவில் தண்டேலி பகுதி ஒயிட் வாட்டர் ராஃப்டிங் எனும் சாகச விளையாட்டுக்கு பெயர் பெற்றது. கங்கைக்குப் பிறகு சிறந்த இடம் இது தான். கர்நாடக அரசு வனத் துறையுடன் பல தனியார் ஆபரேட்டர்கள் ராஃப்டிங் நடவடிக்கைகளை ஏற்பாடு செய்கின்றனர்.
தூரம் மற்றும் கால அளவு:
தண்டேலியில் உள்ள காளி ஆறு 12 கிமீ தூரம் வரை ராஃப்டிங் வசதியை வழங்குகிறது. ஆற்றின் நீளம் அடர்ந்த காடுகளால் சூழப்பட்டுள்ளது. தரம் 2 மற்றும் தரம் 3 என்று ராஃப்டிங் அனுபவத்தை பொறுத்து பிரித்துள்ளனர். இவை இரண்டுமே களிப்பூட்டும், சாகசமான, மறக்கமுடியாததாக பயணத்தை தரவல்லது. 12 கிமீ ராஃப்டிங் உல்லாசப் பயணம் 3 முதல் 4 மணி நேரம் வரை நீடிக்கும்.
ஆகஸ்ட் மாதம் கர்நாடகாவில் மிஸ் பண்ண கூடாத இடங்கள்..
எங்கே முன்பதிவு செய்வது:
கர்நாடக வனத்துறையால் இயக்கப்படும் ராஃப்டிங்கு முன்பதிவு கவுண்டர் JLR இன் காளி சாகச முகாம் வரவேற்பறையில் செயல்படுகிறது. தனியார் ரிசார்ட்டுகள், ஆன்லைன் போர்ட்டல்கள் மூலம் முன்பதிவு செய்யும் வசதிகளை வழங்குகிறது.
கட்டணம்:
ஒரு நபருக்கு குறைந்த பட்சம் ரூ.900 முதல் ரூ.2500 வரை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. உயிர்காக்கும் உபகரணங்கள் எல்லாமே பயத்தின்போது வழங்கப்படும்.
கவனிக்க வேண்டியது..
ராஃப்டிங் செயல்பாடு அருகிலுள்ள அணைகளில் இருந்து ஆற்றின் நீரை வெளியேற்றுவதைப் பொறுத்தது. மழைக்காலம் மற்றும் நீர் மட்டம் குறைவாக இருக்கும் போது ராஃப்டிங் செயல்பாடு நிறுத்தப்படும். ராஃப்டிங்கிற்கு சிறந்த நேரம் நவம்பர் முதல் பிப்ரவரி வரை ஆகும்.
குறிப்பு:
ராஃப்டிங் தொடங்கும் இடத்திற்கு அருகில் லாக்கர் அறைகள் எதுவும் இல்லை. ராஃப்டிங் நடக்கும் இடத்திற்கு மதிப்புமிக்க எதையும் எடுத்துச் செல்ல வேண்டாம்.
படகு சவாரி, கயாக்கிங், பறவைகள் கண்காணிப்பு ஆகியவை தண்டேலியில் முயற்சி செய்ய வேண்டிய மற்ற சாகசங்கள்.
பயணிகள் கவனத்திற்கு…
பெங்களூரில் இருந்து தண்டேலி 460 கிமீ தொலைவில் உள்ளது.
ஹூப்பள்ளி விமான நிலையம் அருகில் உள்ள விமான நிலையம் (65 கிமீ) ஆகும். லோண்டா, அல்நாவர் அருகிலுள்ள ரயில் நிலையம் (35 கிமீ). அங்கிருந்து டாக்சி மூலம் தண்டேலிக்குச் செல்லலாம்.
தண்டேலிக்கு அருகில் தங்குவதற்கான இடங்கள்: ஜங்கிள் லாட்ஜ்கள் & ரிசார்ட்ஸ் இரண்டு வசதிகளும் தண்டேலியில் உள்ளன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Karnataka, Travel, Travel Guide, Travel Tips, Trip