இந்தியாவில் கங்கை மற்றும் யமுனை போன்ற புனித நதிகள் இருக்கும் அதே வேளையில் ஒரு சபிக்கப்பட்ட நதியும் உள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம்! இந்தியாவில் பீகாரின் நடுவே ஒரு சபிக்கப்பட்ட நதி பாய்கிறது. இது உங்கள் எல்லா நற்செயல்களையும் எடுத்துச் செல்லும் என்று நம்பப்படுகிறது.
கர்மாநாசா நதி பீகாரில் உள்ள கைமூர் மாவட்டத்தில் உருவாகி, இந்திய மாநிலங்களான உத்தரபிரதேசம் மற்றும் பீகார் வழியாக பாய்கிறது. 'கர்மா' என்றால் செயல்கள் மற்றும் 'நாசா',என்றால் அழித்தல், அதாவது நல்ல செயல்களைக் கொல்வது என்ற பொருளில் பெயர் வைத்துள்ளனர்.
இந்த நதி உமிழ்நீரால் ஆனது என்றும் இதை தொட்டால் உங்கள் புண்ணியங்கள் போய்விடும். இந்த நீரை பருகினாலோ, நேரடியாக ஊற்றி சமைத்தாலோ மரணம் என்று உள்ளூர் வாசிகள் கூறுகின்றனர். அதற்கு ஒரு புராண கதையையும் சொல்கின்றனர்.
திரிசங்கு என்ற அரசன் உயிருடன் இருக்கும்போதே சொர்க்கத்திற்கு செல்ல விரும்பியுள்ளார். அதற்காக வசிஷ்டரிடம் கேட்டுள்ளார். அவர் மறுக்கவே வசிஷ்டரின் விரோதியான விஷ்வாமித்திரர் உதவியை கேட்டுள்ளார் . இதனால் கோபம் அடைந்த வசிஷ்டர் சபித்துள்ளார்.
ஆனால், விஸ்வாமித்திர் தனது தவ வலிமையால் திரிசங்கை உயிருடன் சொர்க்கத்துக்கு அனுப்பியுள்ளார். ஆனால் இது விதிகளின் படி தவறு என்பதால் இந்திரன் அரசனை பாதிவழியில் நிறுத்தி, பூமிக்கு அனுப்பியுள்ளான். விஸ்வாமித்திரர் தனது மரியாதைக்கு இழுக்கு ஏற்பட்டுவிடும் என்று கீழ்நோக்கி வந்தவரை வான்வழியில் நிறுத்தியுள்ளார். இரு பக்கம் இருந்தும் நிறுத்தப்பட்டு தலைகீழாக தொங்கிய திரிசங்கின் வாயில் இருந்து உமிழ்நீர் பூமியில் விழத்தொடங்கியது.
அந்த உமிழ்நீரில் இருந்து கர்மநாசா நதி தொடங்கியதாகவும், திரிசங்குவை வசிஷ்டர் சபித்ததால் அவரது எச்சிலும் சாபம் பெற்றது. அதில் தொடங்கிய நதி ஆதனால் இதில் விஷத்தமை உண்டு என்று உள்ளூர்வாசிகள் கருதுகின்றனர்.
அதனால் இந்த நதியின் கரையில் அமைந்துள்ள கிராம மக்கள் கர்மநாசா நீரை நேராக பருகுவதற்கோ, சமைப்பதற்கோ பயன்படுத்துவதில்லை. நீண்ட காலமாக இந்த ஊர் மக்கள் பழங்களை உண்டு தான் வாழ்ந்துள்ளனர். நதி நீரை சமையலுக்கு பயன்படுத்தி அது விஷமாக மாறிவிடும் என்ற நம்பிக்கை அவர்களிடம் இருந்தது. 192 கிமீ பாயும் இந்த நதி இறுதியாக கங்கையோடு கலந்து கடலை அடிக்கிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.