ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

ஊர்ந்து சென்று கடவுளைப் பார்க்கும் நெல்லிக்கனி குகைக் கோவிலுக்கு ஒரு ட்ரிப்!

ஊர்ந்து சென்று கடவுளைப் பார்க்கும் நெல்லிக்கனி குகைக் கோவிலுக்கு ஒரு ட்ரிப்!

நெல்லிதீர்த்தம்

நெல்லிதீர்த்தம்

இந்த குகையில் தான் ஜாபாலி முனிவர் தவம் செய்து, துர்கா பரமேஸ்வரி தேவியை வேண்டி அரக்கனான அருண்சுரனைக் கொன்றதாக கதை.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Karnataka, India

கடவுளுக்கு முன் அனைவரும் ஒன்று. ஏழை,பணக்காரன், நெட்டையன், குட்டையன் அனைவரையும் ஒரே தராசில் வைத்து தான் கடவுள் பார்ப்பார் என்று சொல்லுவதுண்டு. ஆனால் கோவில்களில் பொது தரிசனம், சிறப்பு தரிசனம், விஐபி தரிசனம் என்று கடவுளை பார்க்கவே பல கேட்டுகள் போடும் உலகத்தில் இன்றும் தனித்தனி  வழி போடாமல் அனைத்து பக்தர்களுக்கும் இயற்கையாகவே ஒரே வழி தான் என்று சொல்லும் கோவில் ஒன்று உள்ளது.

சமூக அந்தஸ்து மற்றும் பாலினத்தைப் பொருட்படுத்தாமல், அனைவருமே மண்டியிட்டபடி செல்லவேண்டிய கோவில் ஒன்று கர்நாடக மங்களூரின் புறநகரில் பகுதியில் அமைந்துள்ளது. நெல்லிதீர்த்த குகைக் கோயில் தென் கர்நாடகாவில் உள்ள உள்ள நெல்லிதீர்த்தம் எனும் இடத்தில் அமைந்துள்ளது.

ஸ்ரீ சோமநாதேஸ்வரர் என்றும் அழைக்கப்படும் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இக்கோயில் கிபி 1487 ஆம் ஆண்டைச் சேர்ந்தது. 200 மீ நீளமுள்ள நெல்லிதீர்த்த குகை ஒரு இயற்கை குளம் மற்றும் சிவலிங்கம் உள்ள பகுதிக்கு செல்கிறது . உள் கருவறையை அடைய, மக்கள் ஊர்ந்து தான் செல்ல வேண்டும். ஏனெனில் ஒரு கட்டத்திற்குப் பிறகு, குகையில் நடக்கவோ அல்லது வசதியாக குனிந்துகொள்ளவோ ​​முடியாத அளவுக்கு குறுகிவிடும்.

இதையும் படிங்க: வீட்டுக்கு நடுவே சர்வதேச எல்லை... இரட்டைக் குடியுரிமை கொண்ட ஒரே இந்திய கிராமம்... எங்கு உள்ளது தெரியுமா..?

நெல்லிதீர்த்தா என்ற பெயரைப் பற்றி நீங்கள் யோசித்துருப்பீர்கள். நெல்லிக்கனி அளவு பல நூற்றாண்டுகளாக நீர்த்துளிகள் தொடர்ந்து விழுவதன் விளைவாக குகையின் உள்ளே சிவலிங்கம் கொண்ட ஏரி உருவானதால் இந்த குகைக்கு நெல்லிதீர்த்தா குகை என்று பெயர் வந்ததாக சொல்கின்றனர்.

இந்த ஏரியின் நீர் புனிதமானது என்றும், அங்குள்ள சேற்றில் நோய் தீர்க்கும் குணம் இருப்பதாகவும் பக்தர்கள் நம்புகின்றனர். குகை மண்ணை வீட்டிற்கு எடுத்துச் செல்வதும் இங்கு வழக்கம்.

ஒரு புராணக்கதையின்படி நெல்லிதீர்த்த குகையை ஜாபாலி என்ற முனிவர் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்த குகையில் தான் ஜாபாலி முனிவர் தவம் செய்து, துர்கா பரமேஸ்வரி தேவியை வேண்டி அரக்கனான அருண்சுரனைக் கொன்றதாக கதை. நெல்லிதீர்த்தத்திலிருந்து வெகு தொலைவில் உள்ள கடேல் என்ற இடதில் அரக்கனை துர்கா தேவிகொண்டதாக சொல்லப்படுகிறது.

இதையும் படிங்க :தென்னிந்தியாவின் சிரபுஞ்சி அகும்பே பற்றி கேள்விபட்டிருக்கிறீர்களா? டிரீப் செல்ல சரியான நேரம் இதுதான்...!

இந்த குகை கோவிலுக்கு முன்னர் துர்க்கைக்கு ஒரு கோவிலும் அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாக நாக கடவுளுக்கு சன்னிதானமும், மகரிஷி ஜாபாலி மண்டபமும் அமைந்துள்ளது. அது மட்டும் இன்றி இங்கு வரும் பக்தர்களுக்கு மதியம் அன்னதானமும் வழங்கப்படுகிறது.

நெல்லிதீர்த்தத்தை எப்படி அடைவது?

விமானம் மூலம் சென்றால் மங்களூரு விமானநிலையத்திற்கு செல்லலாம். அங்கிருந்து சுமார் 15 கிமீ தொலைவில் நெல்லிதீர்த்தம் அமைந்துள்ளது.

ரயில் மூலம் வந்தாலும் மங்களூரு தா அருகில் இருக்கும் ரயில் நிலையம் அங்கிருந்து கார் அல்லது பேருந்து மூலம் இந்த குகைக் கோவிலை அடையலாம்.

First published:

Tags: Karnataka, Mangalore, Travel, Travel Guide