Home /News /lifestyle /

கோவிட்-19 தொற்று கட்டுக்குள் வந்துகொண்டிருக்கும் நிலையில் பயணம் செய்வது சரியா? பாதுகாப்பான பயணத்திற்கு டிப்ஸ்

கோவிட்-19 தொற்று கட்டுக்குள் வந்துகொண்டிருக்கும் நிலையில் பயணம் செய்வது சரியா? பாதுகாப்பான பயணத்திற்கு டிப்ஸ்

கொரோனா சுற்றுலா பாதுகாப்பு

கொரோனா சுற்றுலா பாதுகாப்பு

இந்தியாவை பொறுத்தவரை தொற்று கட்டுக்குள் இருந்தாலும் ஒரு சில நாடுகளில் தொற்று பரவல் சற்று அதிகரித்து காணப்படுகிறது.

உலகம் முழுவதும் கொரோனா தொற்று கட்டுக்குள் வந்ததை அடுத்து மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். நமது நாட்டில் பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா கட்டுப்பாடுகள் திரும்ப பெறப்பட்டு உள்ளன. எனினும் சீனாவின் சில முக்கிய நகரங்களில் தொற்று பரவல் மீண்டும் காணப்படுவதாக வெளியான தகவல் மக்களை மீண்டும் அச்சுறுத்தியது.

இதனிடையே இங்கிலாந்தில் முதல் முதலாக கண்டறியப்பட்ட ஒமைக்ரான் XE என்ற புதிய வகை வேரியன்ட் மும்பையில் ஒரு நோயாளிக்கு கண்டறியப்பட்டுள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த புதிய வேரியன்ட் உலக நாடுகளுக்கு அடுத்த அச்சறுத்தலாக இருக்கும் என்று தெரிகிறது.

இதனிடையே பல நாடுகளில் விதிக்கப்பட்டிருந்த கொரோனா கட்டுப்பாடுகள் மற்றும் அனைத்து பயண விதிகள் தளர்த்தப்பட்டு அவற்றின் எல்லைகள் திறக்கப்பட்டு உள்ளன. இதனை தொடர்ந்து உலக நாடுகளிடையே வழக்கம் போல விமான சேவைகள் துவக்கப்பட்டு உள்ளன. இப்படிப்பட்ட சூழலில் நம் பகுதியில் மட்டும் தொற்று பரவல் விகிதத்தை கணக்கில் கொண்டு ஒரு பயணத்தை திட்டமிடுவதை விட, செல்ல திட்டமிடும் இடங்கள் அல்லது நாடுகளில் தொற்று பரவல் எப்படி இருக்கிறது என்பதை ஆராய்ந்து விட்டு பிறகு பயணம் செய்வது பாதுகாப்பாக இருக்குமா என்று யோசித்து முடிவெடுப்பதே விவேகமான ஒன்றாக இருக்கும். அதே போல பயணம் மேற்கொள்வதற்கு முன் நீங்கள் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து கொள்வது மிக முக்கியம்.



பூஸ்டர் ஷாட்:

உலகளவில் கொரோனா பாதிப்புகள் குறைவதற்கு முக்கிய காரணம் தடுப்பூசி. எனவே நீங்கள் எங்காவது பயணம் செய்வதற்கு முன் கொரோனா தடுப்பூசிகளின் 2 டோஸ்களை தவிர, பூஸ்டர் டோஸையும் எடுத்து கொள்வதை உறுதி செய்யுங்கள். ஏனென்றால் பல நாடுகள் பயணிகள் தங்கள் வருகைக்கு முன் பூஸ்டர் டோஸ்கள் போட்டிருக்க வேண்டும் என்பதை கட்டாயமாக்கி உள்ளன.

குடும்பத்துடன் கோடை சுற்றுலா செல்ல வேண்டுமா? அப்போ இந்த 5 இடங்களை மிஸ் பண்ணிடாதீங்க..!

ஆய்வு செய்யுங்கள்..

இந்தியாவை பொறுத்தவரை தொற்று கட்டுக்குள் இருந்தாலும் ஒரு சில நாடுகளில் தொற்று பரவல் சற்று அதிகரித்து காணப்படுகிறது. எனவே நீங்கள் வெளிநாடுகளுக்கு பயணம் செய்ய திட்டமிட்டிருந்தால், நீங்கள் செல்ல விரும்பும் நாட்டில் தொற்று பரவல் விகிதம் எவ்வாறு இருக்கிறது என்பதை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள். மேலும் அங்கு செல்வதற்கான விமானங்கள் மற்றும் அங்கு ஹோட்டல்களில் தங்க ரூம்கள் கிடைக்குமா என்பதெல்லாம் சரியாக தெரிந்து கொள்வது முக்கியம்.



ஹோம்ஸ்டே:

தொற்று துவங்கியதிலிருந்து ஹோட்டல்களில் தங்குவதை விட ஹோம்ஸ்டே-க்களை(homestay) மக்கள் அதிகம் தேர்வு செய்கிறார்கள். கூட்டத்திலிருந்து விலகி, தனித்தனியாக அமைக்கப்பட்ட ஹோம்ஸ்டே, ஹோட்டல்களை விட எப்போதும் பாதுகாப்பானது என்று மக்கள் நினைக்கிறார்கள். எனவே தொற்றிலிருந்து பாதுகாப்பாக இருக்க பாதுகாப்பான தங்குமிடங்களை தேர்வு செய்து கொள்ளுங்கள்.

கோடை காலத்தில் அவசியம் செல்ல வேண்டிய இந்தியாவில் உள்ள 5 அழகிய நீர்வீழ்ச்சிகள்!

எப்படி பயணம் செய்வது?

எப்படி பயணம் செய்கிறீர்கள் என்பதும் முக்கியம். வெளிநாட்டு பயணம் இல்லையென்றால் ரயில்கள், விமானங்களை விட சாலைவழி பயணங்கள் சிறந்தவை. அதே போல வெளிநாடுகள் என்றால் தாய்லாந்து, மாலத்தீவுகள், அமீரகம், இங்கிலாந்து, இத்தாலி, ஜெர்மனி, கென்யா மற்றும் பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகள் அங்கு சென்ற பிறகு குவாரன்டைன் செய்யாமல் மக்களை அனுமதிக்கின்றன.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Covid-19, Travel, Vaccine

அடுத்த செய்தி