முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / வெளிநாட்டில் பயணித்து கொண்டே வேலை செய்யும் டிஜிட்டல் நாடோடி விசா பற்றி தெரியுமா?

வெளிநாட்டில் பயணித்து கொண்டே வேலை செய்யும் டிஜிட்டல் நாடோடி விசா பற்றி தெரியுமா?

டிஜிட்டல் நாடோடி விசா

டிஜிட்டல் நாடோடி விசா

டிஜிட்டல் நாடோடி விசாவிற்கான தகுதி அளவுகோல்கள் கடுமையானவை. மிக முக்கியமானது குறைந்தபட்ச வங்கி இருப்பு அல்லது ஒரு குறிப்பிட்ட வருமானத்தை ஈட்டுவது.

  • Last Updated :
  • CHENNAI |

கொரோனா தொடங்கியதில் இருந்து அலுவலகம் செல்லாமல் வீட்டில் இருந்தே வேலை செய்யும் கலாச்சாரம் புதிய இயல்பானதாக மாறியுள்ளது. வீட்டில் இருந்து மட்டும் இல்லாமல் பயணத்தின் போதும் வேலை செய்யும் பழக்கம் இப்பொது அதிகரித்து வருகிறது. வேலைக்கு நடுவில் பெரிய விடுமுறை கிடைக்காது. பயணத்திற்காக வேலையை விடவும் முடியாது என்ற நிலையில் டிஜிட்டல் நாடோடிகளாக வாழ்வது என்ற பழக்கம் புதிதாக உருவாக்கி வருகிறது.

அலுவலகத்துக்கு செல்லாமல் வீட்டில் இருந் வேலை செய்வதை போல வெளியூர், வெளிநாடுகளுக்கு பயணம் செய்து கொண்டு இருக்கும் போது கூட வேலை செய்யும் கலாச்சாரத்திற்கு பேர் தான் டிஜிட்டல் நாடோடிகள். இது உலகெங்கிலும் உள்ள சில சிறந்த அழகிய இடங்களிலிருந்து மக்கள் வேலை செய்வதற்கான கதவுகளைத் திறக்கிறது. புதிய மாற்றத்திற்கு ஏற்ப, பல நாடுகளும் டிஜிட்டல் நாடோடி விசாக்களை(digital nomad visas) வழங்கி வருகிறது.

இந்த புதிய விசா மூலம் தங்கள் நாடுகளுக்கு அதிக சுற்றுலா பயணிகளை வர வைக்க முயல்கிறார்கள். 30 க்கும் மேற்பட்ட நாடுகள் வேலை செய்யும் வல்லுநர்கள், சுயதொழில் செய்பவர்கள், மாணவர்கள் உட்பட, 'டிஜிட்டல் நாடோடி விசா' எனப்படும் புதிய குடியிருப்பு அனுமதியை வழங்குகின்றன. இதனால், ஒரு தனிநபர் அவர் வசிக்கும் நாட்டிலிருந்து தொலைதூரத்தில் வேலை செய்ய அனுமதிக்கப்படுகிறார். மேலும் அத்தகைய திட்டத்தை வழங்கும் நாட்டிற்குள் நுழைந்து அங்கிருந்து வேலை செய்யலாம்.

அதேசமயம், டிஜிட்டல் நாடோடி விசாவிற்கான தகுதி அளவுகோல்கள் கடுமையானவை. மிக முக்கியமானது குறைந்தபட்ச வங்கி இருப்பு அல்லது ஒரு குறிப்பிட்ட வருமானத்தை ஈட்டுவது. இது ஒவ்வொரு நாட்டைப் பொறுத்து மாறுபடும். எடுத்துக்காட்டாக, ஒரு தனிநபருக்கு அந்த நாட்டில் குறைந்தபட்ச ஊதியத்தை விட நான்கு மடங்கு மாத வருமானம் இருக்க வேண்டும் என்று போர்ச்சுகல் கட்டளையிடுகிறது. இது தற்போதைய விகிதத்தில் மாதத்திற்கு € 3,040 ஆகா உள்ளது. இந்திய மதிப்பில் இது சுமார் ₹2.7 லட்சக்கு சமம்.

அந்த வகையில் டிஜிட்டல் நாடோடி விசாவை தற்போது ஐரோப்பிய நாடுகளான ஸ்பெயின் மற்றும் போர்ச்சுக்கல் அறிமுகம் செய்துள்ளது. நீங்கள் இந்த நாடுகளின் டிஜிட்டல் நாடோடி விசா வாங்க விரும்பினால், டிஜிட்டல் நாடோடி விசாவைப் பெறுவது பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் இங்கே.

ஸ்பெயின்

நீங்கள் சுயதொழில் செய்பவராக இருந்தாலோ அல்லது வெளிநாட்டில் இருந்து பணியாற்றும் அனுமதி வழங்கக்கூடிய ஸ்பெயின் நாட்டில் அல்லாத நிறுவனத்தில் பணியாளராகவோ அல்லது ஃப்ரீலான்ஸராக(freelancer) இருந்தாலோ ஸ்பெயினின் டிஜிட்டல் நாடோடி விசாவிற்கு நீங்கள் விண்ணப்பிக்கலாம் . அது போல ஸ்பானிய நிறுவனங்களில் இருந்து அதிகபட்சமாக 20 சதவீத வருமானத்தை ஈட்டுபவர்களும் இந்த வகை விசாவிற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் ஐரோப்பிய ஒன்றியம் அல்லது ஐரோப்பிய பொருளாதாரப் பகுதியில் வசிக்காதவர் மற்றும் ஸ்பெயினில் சட்டவிரோதமாக வசிக்காதவர்களாக அவர்கள் இருக்க வேண்டும்.

எவ்வளவு நாள் அங்கே தங்க முடியும்?

தற்போதைய நிலவரப்படி, ஸ்பெயின் இந்த விசாக்களை ஒரு வருட காலத்திற்கு வழங்குகிறது. இருப்பினும், ஒரு நபர் ஸ்பெயினில் சுற்றுலா விசா மூலம் வந்திருந்தால், அவர்கள் அங்கிருந்து மூன்று வருட டிஎன்வி(DNV)யை கோரலாம். இதற்குப் பிறகு, அவர்களின் விசாவை ஐந்து ஆண்டுகள் வரை புதுப்பிக்க முடியும்.

போர்ச்சுகல்

பணிக்கான ஆதாரத்தை வழங்கக்கூடிய சுயதொழில் செய்யும் அல்லது ஃப்ரீலான்ஸராக இருக்கும், யார் வேண்டுமானாலும் போர்ச்சுகலின் D8 டிஜிட்டல் நாடோடி விசாவிற்கு விண்ணப்பிக்கலாம். தொலைதூரத்தில் பணிபுரியும் அனுமதியுடன் போர்ச்சுகலுக்கு வெளியே உள்ள எந்த நிறுவனத்தில் பணிபுரியும், ஐரோப்பிய ஒன்றியம் அல்லது ஐரோப்பிய பொருளாதாரப் பகுதியில் வசிக்காதவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு விசா கிடைக்க வாய்ப்புண்டு.

இதையும் பாருங்க: இந்த கோடை விடுமுறைக்கு நாமக்கல் பக்கம் போக சூப்பர் ஸ்பாட் ரெடி!

எவ்வளவு நாள் அங்கே தங்க முடியும்?

top videos

    போர்ச்சுகல் இடம்பெயர விரும்பும் தொலைதூர தொழிலாளர்களுக்கு குடியிருப்பு அனுமதி அட்டை , மற்றும் டிஜிட்டல் நாடோடி விசாவை வழங்குகிறது.இந்த நாடோடி விசா ஒரு வருடத்திற்கு செல்லுபடியாகும். அதேசமயம் அனுமதி அட்டை இரண்டு ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும். அதை மேலும் மூன்று ஆண்டுகளுக்கு புதுப்பிக்கலாம்.

    First published:

    Tags: Travel