நீண்ட கொரோனா இடைவெளிக்குப் பின் பயணம் செய்ய திட்டமா..? இந்த விஷயங்களில் கவனமாக இருங்கள்..!

மாதிரி படம்

கொரோனோவிற்கு எதிராக தடுப்பூசி செலுத்துக்கொண்டாலும், தற்போதைய வைரஸ் தொற்றுநோய்களின் அலை ஆதிக்கம் செலுத்துகிறது, இது கடுமையான அறிகுறிகளையும் ஏற்படுத்தும்.

  • Share this:
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனாவின் கோரப்பிடியில் உலகம் முழுவதும் உள்ள மக்கள் சிக்கி தவித்து வருகின்றனர். இந்தியாவில் இரண்டாவது அலை பரவல் சற்று குறைந்திருப்பதால், கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு இந்தியா மற்றும் உலகெங்கிலும் உள்ள மக்கள் பயணங்கள் மேற்கொள்ள தொடங்கியுள்ளனர். இதனால் நீண்ட காலமாக வீட்டிற்குள் அடைந்து கிடந்த மக்கள் வெளியில் செல்வதை விரும்புகின்றனர். முக கவசம் அணியாமல், நெரிசலான தெருக்களில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் மக்கள் பயணம் செல்வதை பெரும்பாலான செய்திகளில் பார்க்க முடிகிறது.

டெல்டா வைரஸ் வேகமாக பரவுவதால், இப்போது பயணிப்பது பாதுகாப்பானதா?

கொரோனோவிற்கு எதிராக தடுப்பூசி செலுத்துக்கொண்டாலும், தற்போதைய வைரஸ் தொற்றுநோய்களின் அலை ஆதிக்கம் செலுத்துகிறது, இது கடுமையான அறிகுறிகளையும் ஏற்படுத்தும். எனவே, இப்போது பயணம் செய்வதற்கான பாதுகாப்பான வழி என்ன? பாதுகாப்பாக இருக்க ஒரு பயணி என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும்? என்பது குறித்து தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

நீங்கள் இப்போதே பயணிக்க விரும்பினால் நினைவில் கொள்ள வேண்டிய சில முக்கியமான விஷயங்கள் குறித்து இங்கு காண்போம்,.தடுப்பூசி உங்கள் பயணத்தில் மிகவும் பாதுகாப்பானது :

தற்போது பயணம் செய்பவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி மிகவும் அவசியமானது என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள். கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசி இறப்பு போன்ற கடுமையான அபாயங்களில் இருந்து உங்களை பாதுகாக்கிறது. அதுமட்டுமின்றி பல்வேறு மாநிலங்கள் அல்லது வெளிநாடுகளுக்கு வரும் பயணிகள் கட்டாயம் தடுப்பூசி சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என்ற உத்தரவும் அமலில் உள்ளது. எனவே, நீங்கள் தற்போது பயணிக்க விரும்பினால் தடுப்பூசி போட்டு கொள்ளுங்கள். இரண்டு டோஸ் தடுப்பூசிகளும் போட்டு கொள்வது அவசியம். முதல் டோஸ் வைரஸில் இருந்து பாதுகாப்பை வழங்கும், அதே நேரத்தில் இரண்டாவது டோஸ் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

நீங்கள் நல்ல ரிலேஷன்ஷிப்பில் தான் இருக்கிறீர்களா..? சந்தேகம் இருந்தால் இதை படியுங்கள்..!

பரவல் குறைவான இடங்களைத் தேர்வு செய்யுங்கள் :

நாடு முழுவதும் உள்ள சுற்றுலாத்தலங்கள் திறக்கப்பட்டுள்ளது. இருப்பினும், உலகளாவிய தொற்றுநோய் பரவலுக்கு மத்தியில் நாம் இருக்கிறோம். அனைத்து பகுதிகளிலும் கொரோனா பரவல் ஒரே மாதிரியாக இருப்பதில்லை, சில பகுதிகள் அதிகமாகவும், சில பகுதிகளில் குறைவாகவும் இருக்கலாம். நீங்கள் தற்போது பயணம் செய்ய விரும்பினால், திட்டமிட்டிருக்கும் பகுதியில் கொரோனா பாதிப்புகள், அங்கு தற்போது நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகள் ஆகியவற்றை தெரிந்து கொள்ள வேண்டும். அதனடிப்படையில் பாதிப்பு குறைவான மற்றும் அதிக தளர்வுகள் உள்ள பகுதியை தேர்ந்தெடுத்து செல்வது அனைவருக்கும் நல்லது.பாதுகாப்பாக இருக்கவும் :

நீங்கள் பயணம் செய்யும்போது கொரோனா தொற்று அபாயத்தைக் குறைப்பதற்கான ஒரு சிறந்த வழி, நீங்கள் எங்கு சென்றாலும் பாதுகாப்பாக இருப்பதே. நீங்கள் ஒரு குழுவினருடன் பயணம் செய்தால் நீங்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுள்ளீர்கள் என்பதை உறுதிப்படுத்தவும். அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பின்பற்றி முக கவசம் அணிந்து, அவ்வப்போது சானிடைசர் பயன்படுத்துவதை உறுதி செய்து கொள்ளுங்கள். முடிந்தவரை தனித்தனி குடும்பமாக பயணம் செய்வது நல்லது. மேலும் உங்கள் வீட்டில் குழந்தைகள், வயதானவர்கள் இருந்தால் பயணத்தை தள்ளி வைக்கலாம்.

தனிமைப்படுத்துதல் அவசியம் :

பல மாநிலங்கள் மற்றும் சர்வதேச பயணத்திற்கான வழிகாட்டுதல்களில் பயணிகள் வந்தவுடன் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்ற நடைமுறை தற்போதும் அமலில் உள்ளது. இது உங்களுக்கு மட்டுமின்றி உங்களைச் சுற்றியுள்ளவர்களுக்கு பயணத்தை பாதுகாப்பானதாக மாற்ற பேருதவியாக இருக்கும். அதேபோல நீங்கள் வேறு மாநிலம் அல்லது நாட்டிற்கு சென்று விட்டு வீடு திரும்பினாலும் தனிமைப்படுத்துதல் அவசியமாகிறது. இதனால் உங்கள் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.காரில் பயணம் செய்யும் போது பின்பற்றி வேண்டியவை :

* நீங்கள் அருகில் இருக்கும் இடங்களுக்கு செல்ல விரும்பினால் கார் சிறந்த தேர்வாக இருக்கும். ஆனால் காரில் சென்றாலும் சில விஷயங்களை கடைபிடிப்பது நல்லது.

* நீங்கள் பயணம் செய்வதற்கு முன்னர் உங்கள் வாகனம் முழுமையாக சுத்திகரிக்கப்படுவதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

* நீங்கள் மட்டுமின்றி உங்களுடன் வரும் அனைவரும் முக கவசம் அணிந்திருக்க வேண்டும். உங்கள் காரில் கூடுதல் முக கவசங்களை கொண்டு செல்வது நல்லது.

* COVID-19 வைரஸ் பரவல் ஏரோசோல்கள் அல்லது ஈரப்பதமான காற்று வழியாக பரவக்கூடும் என்று புதிய ஆய்வுகள் வெளிவந்துள்ளன. எனவே பாக்டீரியா, பூஞ்சை அல்லது வைரஸ்களிடம் இருந்து தப்பிக்க
உங்கள் காரின் ஏசியை சுத்தம் செய்வது அவசியம்.

 
Published by:Sivaranjani E
First published: