ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

ஐரோப்பிய கடற்படையை வென்ற கன்னியாகுமரியின் பொக்கிஷ பீச் நகரம் 'குளச்சல்' பற்றித் தெரியுமா?

ஐரோப்பிய கடற்படையை வென்ற கன்னியாகுமரியின் பொக்கிஷ பீச் நகரம் 'குளச்சல்' பற்றித் தெரியுமா?

குளச்சல்

குளச்சல்

வரலாற்றில் முதல் முறையாக, இந்தியா எனும் ஒரு ஆசிய நாடு ஐரோப்பிய கடற்படைக்கு எதிராக வெற்றி பெற்ற குளச்சல் போர் நடந்த இடம் இது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Kanniyakumari, India

தமிழ்நாடு முழுவதும் இயற்கை அழகுடன் கூடிய அழகிய சுற்றுலாத் தலங்கள் உள்ளன. பழங்கால கோவில்கள், அழகிய கடற்கரைகள், அழகான நீர்வீழ்ச்சிகள் மற்றும் சுவையான உள்ளூர் உணவு வகைகளுக்கு பிரபலமானது.

இந்திய நிலப்பகுதியின் கடைக்கோடி என்று கருதப்படும் கன்னியாகுமரி முக்கியமாக சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனம் காணக்கூடிய இந்தியாவின் முக்கியமான பகுதி என புகழ்பெற்றது. மூன்று கடல் சங்கமிக்கும் கடற்கரை என்பது மக்களுக்கு நன்கு தெரியும். ஆனால் அதே மாவட்டத்தில் மக்கள் அதிகம் பயணித்திராத அழகிய ஒரு கடற்கரை நகரம் உள்ளது.

குளச்சல் என்ற அழகிய கடற்கரை நகரம் பயணிகளின் பார்வையில் இருந்து மறைந்திருப்பதால் அதன் எழில் குலையாமல் இன்னும் பாதுகாக்கப்பட்டுக் கொண்டு இருக்கிறது. சுத்தமான கடற்கரைகள், எல்லையற்ற கடல், அழகான சூரிய அஸ்தமனம் மற்றும் தனிமையை விரும்பும் பயணிகளுக்கு ஏற்ற இடம் இது.

இதையும் படிங்க:  ஊட்டி போற ப்ளானா? கண்டிப்பா இந்த இடத்தை மிஸ் பண்ணாதீங்க..!

இடம் மற்றும் வரலாறு

கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள மலபார் கடற்கரையில் உள்ள ஒரு சிறிய துறைமுக நகரம் 'சோ கொலாச்சல்'. 2011 அறிக்கையின்படி நகரத்தின் மக்கள் தொகை 50,000 க்கும் குறைவாக உள்ளது. இந்தியாவைக் கண்டுபிடித்த போர்ச்சுகீசிய ஆய்வாளர் வாஸ்கோடகாமாவால் இந்த பண்டைய துறைமுக நகரம் 'கலாச்சி' என்று பெயரிடப்பட்டது.

1700 களின் போது, ​​டச்சு கிழக்கிந்திய கம்பெனிக்கும் திருவிதாங்கூர் சமஸ்தான திற்கும் இடையே குளச்சல் போர் நடந்தது. வரலாற்றில் முதல் முறையாக, இந்தியா எனும் ஒரு ஆசிய நாடு ஐரோப்பிய கடற்படைக்கு எதிராக வெற்றி பெற்றது.

பின்னர், திருவிதாங்கூர் படைகளை வழிநடத்திய மன்னர் மார்த்தாண்ட வர்மாவை கௌரவிக்கும் வகையில் இப்பகுதியில் வெற்றித் தூண் அமைக்கப்பட்டது. 17 அடி உயரம் கொண்ட இந்த  தூண் நகரத்தின் முக்கிய ஈர்ப்புகளில் ஒன்றாகும். தூணின் மேல் ஒரு பெரிய சங்கு பிரமாண்டமாக காட்சியளிக்கிறது.

குளச்சலுக்கு செல்ல சிறந்த நேரம்

கடற்கரை தலமாக இருப்பதால், ஆண்டு முழுவதும் இங்கு காலநிலை சற்று ஈரப்பதமாகவே இருக்கும். ஆனால் இந்த நகரத்தின் அழகை ரசிக்க நவம்பர் மற்றும் மார்ச் மாதங்களுக்கு இடையில் நீங்கள் செல்லலாம். இந்த நேரத்தில் வானிலை பெரும்பாலும் இனிமையாகவும் மனதை வருடுவதாகவும் இருக்கும்.

அதோடு கடலுக்குள் சிறிது தூரம் செல்லக்கூடிய ஒரு பாலம் இருக்கும். அருகே குளச்சல் துறைமுகத்தில் சிறிய ரக கட்டுமரம் முதல் பெரிய கப்பலை வரை அழகாக அணிவகுத்து இருப்பதைப் பார்க்கலாம்

First published:

Tags: Beach, Kanniyakumari, Travel, Travel Guide