ஹோம் /நியூஸ் /lifestyle /

ராஜ்யோத்சவம்.. சத்தீஸ்கரில் களைகட்டும் பழங்குடியினர் நடன விழா..

ராஜ்யோத்சவம்.. சத்தீஸ்கரில் களைகட்டும் பழங்குடியினர் நடன விழா..

தேசிய பழங்குடியினர் நடன விழா

தேசிய பழங்குடியினர் நடன விழா

இந்தியாவின் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் , மொசாம்பிக், மங்கோலியா, டோங்கோ, ரஷ்யா, இந்தோனேஷியா மற்றும் மாலத்தீவுகள் உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த பழங்குடி நடனக் குழுக்கள் ராய்பூர் திருவிழாவிற்கு வருகின்றனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chhattisgarh |

மத்திய பிரதேசத்தின் பகுதியாக விளங்கிய நிலம் 2000 ஆம் ஆண்டு மத்திய அரசால் பிரிக்கப்பட்டு சத்தீஸ்கர் எனும் சுதந்திர மாநிலமாக அறிவிக்கப்பட்டது. அப்போதிருந்து நவம்பர் 1 சத்தீஸ்கர் நிறுவன தினமாக - சத்தீஸ்கர் ராஜ்யோத்சவாமாக கொண்டாடப்படுகிறது. 

ராஜ்யோத்சவம் :

ஒவ்வொரு ஆண்டும், மாநில அரசு தலைநகர் ராய்ப்பூரில் நவம்பர் 1 முதல் 5 வரை ஐந்து நாள் திருவிழாவை நடத்துகிறது. இந்த விழா மாநிலத்தின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியங்களை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்வுகள் அரங்கேறும். 2022 ஆம் ஆண்டு மாநிலத்தின் 23வது நிறுவன தினமாக கொண்டாடப்பட உள்ளது.

தேசிய பழங்குடியினர் நடன விழா:

சத்தீஸ்கரில் தண்டேவாடா, பஸ்தார், பிலாஸ்பூர், கோரியா, கர்பா, கரியாபந்த், துரா, மைன்பூர், சுர்குஜா, தம்தாரி, ஜாஷ்பூர் போன்ற பகுதிகளில் குறிப்பிடத்தக்க பழங்குடியின சமூகத்தினர் உள்ளனர். அவர்களுக்கென்று தனித்துவமான வரலாறு, மரபுகள் மற்றும் கலாச்சாரம் உள்ளது.

திருப்பதியில் பத்து மாதத்தில் ரூ.1200 கோடி உண்டியல் காணிக்கை..

அவர்களது கலாச்சாரத்தையும் பழங்குடியினரின் கலைகளை உலகிற்கு காட்டவும் இந்த திருவிழா 2019 இல் தொடங்கப்பட்டது.  அதன் நீட்சியாக, ராய்ப்பூரில் 3வது தேசிய பழங்குடியினர் நடன விழா, நவம்பர் 1-3 தேதிகளில் நடைபெறும் என்று முதல்வர் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

முதல்வர் பூபேஷ் பாகேல் சார்பாக, மாநிலப் பிரதிநிதிகள் மற்ற மாநிலங்களுக்குச் சென்று முதல்வர்கள், அமைச்சர்கள் மற்றும் அரசு பிரதிநிதிகளை நேரில் இந்த நிகழ்விற்கு அழைதுள்ளனர்.

பங்கேற்பாளர்கள்:

இந்தியாவின் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் , மொசாம்பிக், மங்கோலியா, டோங்கோ, ரஷ்யா, இந்தோனேஷியா மற்றும் மாலத்தீவுகள் உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த பழங்குடி நடனக் குழுக்கள் ராய்பூரில் நடைபெறும் தேசிய பழங்குடியினர் நடன விழாவில் பங்கேற்க உள்ளனர்.

நவம்பர் மாதம் காஷ்மீருக்கு ஒரு ட்ரிப் அடிக்க ரெடியா.. வரவேற்க இரட்டைத் திருவிழாக்கள் ரெடி!

அக்டோபர் 27 அன்று செய்தி நிறுவனமான ANI இன் அறிக்கையின்படி, சுமார் 1,500 பழங்குடி கலைஞர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்பார்கள் என தெரிகிறது. இதில் 1,400 பேர் இந்தியாவிலிருந்தும், மீதமுள்ள 100 பேர் மேற்கண்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள்.

20 லட்சம் பரிசு...

இவ்விழாவில் இரண்டு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட உள்ளது. அதில் வெற்றி பெறுபவர்களுக்கு ₹ 20 லட்சம் மதிப்பிலான பரிசுகள் வழங்கப்படும் என்று சத்தீஸ்கர் அரசு அறிவித்துள்ளது. முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களுக்கு முறையே ₹ 5 லட்சம், ₹ 3 லட்சம் மற்றும் ₹ 2 லட்சம் ரொக்கப் பரிசுகள் வழங்கப்படும் என்று அறிக்கை கூறியுள்ளது.

Published by:Ilakkiya GP
First published:

Tags: Chhattisgarh, Festival