ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

சென்னையில் கோடையை குதூகலமாக்கும் டைனோசர் திருவிழா : தேதி, இடம் குறித்த தகவல் இதோ...

சென்னையில் கோடையை குதூகலமாக்கும் டைனோசர் திருவிழா : தேதி, இடம் குறித்த தகவல் இதோ...

டைனோசரஸ் திருவிழா

டைனோசரஸ் திருவிழா

நாம் திரைப்படக் காட்சிகளில் மட்டுமே பார்த்த டைனோசர் உருவத்தை, தற்போது பொம்மை வடிவில் நேரில் பார்க்க இருக்கிறோம். ஜூன் மாதம் 10ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரையில் இந்தத் திருவிழாவை பிரம்மாண்ட அளவில் நடத்துவதற்கான ஏற்பாடுகளை சென்னை சென்டர் செய்து வருகிறது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

இந்தியாவில் இப்போது டைனோசரஸ் திருவிழா நடத்துவது மிக பிரபலமான விஷயமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. முதலில் இந்த திருவிழா டெல்லியில் நடத்தப்பட்டது. அடுத்ததாக சென்னையில் நடைபெற இருக்கிறது. இதேபோன்று மும்பையிலும் டைனோசர் திருவிழா நடத்தப்பட உள்ளது.

கோடைகாலத்தில் பெரும் குதூகலம் நிறைந்த விழாவாக இது இருக்கப் போகிறது. இந்த திருவிழாவில் இருந்து ஏராளமான விஷயங்களை நாம் கற்றுக் கொள்ள முடியும். நம் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர்களுடன் சென்று பொழுதுபோக்குவதற்கு மிக சிறந்த வாய்ப்பாகும்.

நாம் திரைப்படக் காட்சிகளில் மட்டுமே பார்த்த டைனோசர் உருவத்தை, தற்போது பொம்மை வடிவில் நேரில் பார்க்க இருக்கிறோம். ஜூன் மாதம் 10ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரையில் இந்தத் திருவிழாவை பிரம்மாண்ட அளவில் நடத்துவதற்கான ஏற்பாடுகளை சென்னை சென்டர் செய்து வருகிறது. இந்திய டைனோசர் திருவிழா என்ற அமைப்பின் முயற்சியில் இந்த விழா நடைபெற உள்ளது.

கோடையை கழிக்க சிறப்பான இடம்

நீங்கள் சென்னையை சேர்ந்தவர் என்றால், அதுவும் குறைவான பட்ஜெட்டில் கோடை விடுமுறையை கொண்டாட நினைப்பவர் என்றால் உங்களுக்கு மிகச் சிறந்த வாய்ப்பாக இந்தத் திருவிழா இருக்கும். அலுவலகத்தில் பணிபுரியும் நண்பர்கள் அல்லது வீட்டில் உள்ள குழந்தைகள் என ஏதேனும் ஒரு குழுவாக சென்று திருவிழாவை கண்டு ரசிக்கலாம்.

உலகத் தரத்தில் திருவிழா

சென்னையில் நடைபெற உள்ள திருவிழா என்பது உலகத் தரத்தில் அமைவதாக இருக்கும். ஜுராஸிக் உலகத்தை உங்கள் கண் முன்னால் நிறுத்துவதைப் போல அமையும். இந்த விழாவில் நீங்கள் கற்றுக் கொள்ள ஏராளமான விஷயங்கள் இருக்கும் என்பதோடு மட்டுமல்லாமல், இந்தியாவில் உண்மையாகவே சுமார் 65 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு மாபெரும் உயிரினம் குறித்து நீங்கள் தெரிந்து கொள்ளவதற்கான வாய்ப்பும் இருக்கும்.

காஸ்ட் அயர்ன் பாத்திரங்களை துரு பிடிக்காமல் பாதுகாப்பது எப்படி..? உங்களுக்கான டிப்ஸ்

குழந்தைகளுக்கான சிறப்பு ஏற்பாடுகள்

குதூகல நிகழ்ச்சிகள் மற்றும் கண்காட்சி ஆகியவை குழந்தைகளை கவரும் வண்ணம் இருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக, டைனோசருடன் நின்று பல்வேறு கோணங்களில் ஃபோட்டோ எடுத்துக் கொள்ளலாம். டைனோசர் குதித்து, குதித்து ஓடுவதைக் கண்டு மகிழலாம்.

ஜுராஸிக் பார்க் படம் பார்த்துள்ளீர்களா

பல ஆண்டுகளுக்கு முன்னால் திரைக்கு வந்த ஜுராஸிக் பார்க் திரைப்படத்தை நாம் பார்த்து ரசித்திருப்போம். அந்தப் படத்தை நீங்கள் பார்க்காதவராகக் கூட இருக்கலாம். ஆனால், முற்றிலும் அழிந்து போன டைனோசர் உயிரினம் குறித்து நீங்கள் தெரிந்து கொள்வதற்கான மற்றுமொரு வாய்ப்பாக இது இருக்கப் போகிறது.

இலவச அனுமதி

சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இந்தத் திருவிழாவைக் காண வெள்ளிக்கிழமை மற்றும் திங்கள்கிழமை ஆகிய நாட்களில் இலவச அனுமதி வழங்கப்பட உள்ளது.

First published:

Tags: Festival, Summer Vacation