முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / இனி சென்ட்ரல் இரயில் நிலையத்தில் பேசக்கூடாது.. சைலண்ட் மோடுக்கு மாறும் முதல் இந்திய இரயில் நிலையம்.!

இனி சென்ட்ரல் இரயில் நிலையத்தில் பேசக்கூடாது.. சைலண்ட் மோடுக்கு மாறும் முதல் இந்திய இரயில் நிலையம்.!

சென்ட்ரல் ரயில் நிலையம்

சென்ட்ரல் ரயில் நிலையம்

ரயில் நிலையத்தில் ஒலிக்கும் பயணிகள் கவனத்திற்கு.. சத்தம் ஏதும் இல்லாமல் இருந்தால் எப்படி இருக்கும் என்று நினைத்து பாருங்கள்.

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

இந்தியாவின் பரபரப்பான ரயில் நிலையங்களில் ஒன்று சென்னை டாக்டர் எம்.ஜி.ஆர் ராமச்சந்திரன் சென்ட்ரல் ரயில் நிலையம் என்று சொன்னால் அது மிகையாகாது. ஒரு நாளில் லட்சக்கணக்கான பயணிகளும் கிட்டத்தட்ட 200 ரயில்களும் வந்து செல்கிறது. இப்படியான 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த ரயில் நிலையம் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் சைலண்ட் மோடுக்கு மாறி விட்டது.

இந்தியாவில் இதற்கு முன்னாள் மும்பை, லக்னோ, ஜெய்ப்பூர், டெல்லி, ஹைதராபாத் உள்ளிட்ட விமான நிலையங்கள் தான் சைலண்ட் விமான நிலையமாக மாறி வந்தது. இந்திய ரயில் நிலையங்கள் ஏதும் அமைதி காக்க வில்லை. ஆனால் தற்போது இந்தியாவின் முதல் சைலண்ட் விமான நிலையமான சென்னை சென்ட்ரல் மாறியுள்ளது.

சைலண்ட் ரயில் நிலையம் என்றால் என்ன?

ரயில் நிலையம் என்று சொன்னதும், “ பயணிகளின் கனிவான கவனத்திற்கு.. சென்னை முதல் டெல்லி செல்லும் ரயில் 123456 பிளாட்பாரம் எண் 8 இல் புறப்பட தயாராக உள்ளது..” என்பது போன்ற வார்த்தைகள் தான் நினைவிற்கு வரும். ஒவ்வொரு ரயில் வரும்போதும் கிளம்பும் போதும் அதுகுறித்த அறிவிப்புகள் ஒலித்துக்கொண்டே இருக்கும்.

ரயில் நிலையத்தில் ஒலிக்கும் இந்த சத்தங்கள் ஏதும் இல்லாமல் இருந்தால் எப்படி இருக்கும் என்று நினைத்து பாருங்கள். அது தான் சைலண்ட் ரயில் நிலையம். ஆனால் ரயில்கள் வருவதும் போவதும் எப்படி தெரியும்? என்று தானே யோசிக்கிறீர்கள் அதற்காக பெரிய  டிஜிட்டல் திரைகளை ரயில் நிலையம் முழுவதும் அமைத்துள்ளனர். அதில் ரயில்கள் குறித்த அறிவிப்புகள் ஓடிக்கொண்டே இருக்கும். அதை பார்த்து பயணிகள் தெரிந்துகொள்ளலாம்.

இதுகுறித்து சனிக்கிழமை, தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என். சிங் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ஞாயிறு முதல் ஒலி வடிவில் ரயில்கள் குறித்த அறிவிப்புகள் எதுவும் வராது என்றும், ரயில்கள் குறித்த அனைத்து தகவல்களும் வரும் காட்சிப் பலகைகளும் செயல்படும் நிலையில் இருப்பதை உறுதி செய்ய அறிவித்துள்ளார். அதோடு பயணிகள் வசதிக்காக விசாரணைச் சாவடிகளில் போதுமான பணியாளர்களை நியமிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்காக ஈவிஆர் பெரியார் சாலை (எம்டிசி பேருந்து நிறுத்தம்), புறநகர் முனையம், வால் டாக்ஸ் சாலை (கேட் எண் 5) ஆகிய மூன்று நுழைவுப் புள்ளிகளிலும் தமிழ், இந்தி மற்றும் ஆங்கிலத்தில் ரயில்களின் வருகை மற்றும் புறப்பாடுகளைக் காட்டும் பெரிய டிஜிட்டல் திரைகள் நிறுவப்பட்டுள்ளன. அதேபோல ரயில் நிலையத்தின் உள்ளே மத்திய பகுதிகளில் 40-60 இன்ச் டிஜிட்டல் திரைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த நடவடிக்கை "பரிசோதனை அடிப்படையில்" மேற்கொள்ளப்பட்டதாகக் குறிப்பிட்ட சென்னை ரயில்வே கோட்டத்தின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர், விளம்பர ஆடியோவும் இனி ரயில் நிலைய வளாகத்திற்குள் இருக்காது என்று கூறினார். ரயிகள் குறித்த விரிவான தகவல்களை பெற ரயில்வே ஊழியர்களால் நிர்வகிக்கப்படும் பயணிகள் தகவல் மையங்கள் பயணிகளுக்கு வழிகாட்டும்," என்று அவர் கூறினார்.

இதையும் படிங்க : புதுச்சேரி வாசிகளுக்கு ஒரு குட் நியூஸ்.. இனி குறைந்த செலவில் விமானத்தில் பறக்கலாம்.

மேலும் பார்வை குறைபாடுகள் உள்ள பயணிகளுக்கு உதவ, ரயில் நிலையம் இப்போது அதன் பிரதான நுழைவாயிலில் பிரெய்லி வரைபடங்களை நிறுவியுள்ளது. அது மட்டும் இல்லாமல் நிலையத்தின் செயல்பாடுகளை விளக்கும் சைகை மொழி வீடியோவை மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்க QR குறியீடுகள் ரயில் நிலையம் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளன.

புதிய முன்னெடுப்பு பயணிகளின் பயணத்தை எந்த விதத்திலும் பாதிக்காதவாறு பார்த்துக்கொள்வதில் முனைப்பாக உள்ளனர். மேலும் அனைத்து வகை மக்களும் இரைச்சல் இல்லாத ஒரு ரயில் நிலைய அனுபவத்தை பெறுவதை உறுதி செய்கின்றனர்.

First published:

Tags: Chennai Central S22p04, Railway Station