யானை சஃபாரி, புலி சஃபாரி, ஜீப் சஃபாரி எல்லாம் போயிருப்போம். ஆனால் இந்தியாவில் முதன் முறையாக சிவிங்கிப்புலி சஃபாரி மத்திய பிரதேசத்தின் குனோ தேசிய பிங்க இந்த மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் காட்டுப்பூனை இனங்களில் ஒன்றான சிவிங்கிப்புலி கடைசியாக 1947 இல் பதிவிடப்பட்டது. 1952 இல் இருந்து இந்தியாவில் ஒரு சிவிங்கிப்புலி கூட இல்லாத நிலையில் 'இந்தியாவில் ஆப்பிரிக்க சிவிங்கிப்புலி அறிமுகம் திட்டம்' 2009 இல் உருவாக்கப்பட்டது.
திட்டத்தின் கீழ் ஆப்பிரிக்கக் காடுகளில் இருந்து அடுத்த எட்டு முதல் பத்து ஆண்டுகளுக்கு ஆண்டுதோறும் 12 சிவிங்கி புலிகள் இந்தியாவிற்கு இறக்குமதி செய்ய ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. அதன்படி 70 ஆண்டுகளுக்குப் பின் கடந்த ஆண்டு ஆப்ரிக்க நாடான நமீபியாவில் இருந்து போயிங் - 747 சிறப்பு ரக விமானம் மூலம் 5 பெண் சிவிங்கிப் புலிகள், 3 ஆண் சிவிங்கிப் புலிகள் கொண்டுவரப்பட்டன.
2022 செப்டம்பர் 17 அன்று பிரதமர் மோடியின் 72ஆவது பிறந்தநாள் அன்று எட்டு சிவிங்கிப் புலிகள் மத்திய பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவில் விடுவிக்கப்பட்டது. அதன் பின்னர் டிசம்பர் 2022 இல் மேலும் 12 சிவிங்கி புலிகள் 2023 பிப்ரவரியில் மத்திய பிரதேசத்துக்கு அனுப்பப்படும் என்று தெரிவித்தனர். பிப்ரவரி 15க்குள் ஏழு ஆண் மற்றும் ஐந்து பெண் சிறுத்தைகள் குனோவை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
12 புதிய சிவிங்கி புலிகள் இந்த மாதம் வரும் நிலையில், அதை மக்கள் பார்வைக்கு கொண்டு வர குனோ தேசிய பூங்கா ஒரு முன்னெடுப்பை கொண்டு வர உள்ளது. மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஷியோபூர் மற்றும் மொரேனா மாவட்டங்களில் பரவியுள்ள குனோ பல்பூர் தேசியப் பூங்கா மற்றும் வனவிலங்கு சரணாலயம் சிவிங்கி புலி சஃபாரியை கொண்டு வர உள்ளது.
இதையும் படிங்க: பசுமை... இயற்கையின் பேரழகு... மனம் விரும்பும் மாஞ்சோலைக்கு ஒரு டிரிப் போகலாம்!
புலி சஃபாரி போல குனோ தேசிய பூங்காவில் வாகன சஃபாரி முள்ளம் காட்டில் இயல்பாக உலவி திரியும் சிவிங்கி புலிகளை காண பார்வையாளர்கள் அனுமதிக்க பட உள்ளனர். ஆப்பிரிக்காவில் இருந்து இந்திய காடுகளுக்கு வந்துள்ள புதிய காட்டுப்புலியை காண இது ஒரு பெரிய வாய்ப்பாக இருக்கும்.
குனோ பல்பூர் தேசியப் பூங்கா சஃபாரி திறக்கப்படும் தேதி இன்னும் வெளியிடப்படாத நிலையில் இந்த மாதத்திற்குள் திறக்கப்படும் என்று நம்பப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Madhya pradesh