குளிர்காலம் தொடங்கிவிட்டது மலைப் பிரதேசங்களுக்கு பயண சீசன் உச்ச நிலையில் உள்ளது. எங்கு போகலாம் என்று யோசித்து கொண்டு இருக்கிறீர்களா. ? கம்மி பட்ஜெட்டில் மைசூர், குடகு மலைக்கு 4 இரவுகள்/5 நாட்கள் போகும் ஒரு அருமையான பயணம் என்றால் குஷி தானே….
உடையார்களின் தலைநகரான மைசூர், அதன் வினோதமான வசீகரம், வளமான பாரம்பரியம், அற்புதமான அரண்மனைகள், அழகாக தோட்டங்கள், பிரம்மாண்டமான கட்டிடங்கள், புனிதமான கோவில்கள் ஆகியவற்றால் பயணிகளை எப்போதும் மயக்குகிறது.அங்கு கிடைக்கும் சந்தனம் மற்றும் பட்டு உலகம் முழுவதும் அறியப்படுகிறது.
கூர்க்: இந்தியாவின் ஸ்காட்லாந்து என்று அழைக்கப்படும் கூர்க், மூடுபனி மலைகள், பசுமையான காடுகள், ஏக்கர் கணக்கில் தேயிலை மற்றும் காபி தோட்டங்கள், ஆரஞ்சு தோப்புகள், மறக்க முடியாத நினைவுகளை கொடுக்கும்.
இதையும் படிங்க : நேபாளுக்கு போக ஆசை இருக்கா... IRCTC-ன் அற்புதமான பேக்கேஜ் இதோ!
பயணத்திட்டம்:
IRCTC மூலம் ஒவ்வொரு வியாழனும் தொடங்கும் இந்த பயணம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து இரவு 9:15 மணிக்கு ரயில் எண். 16021, சென்னை - மைசூர் எக்ஸ்பிரஸில் தொடங்குகிறது. வெள்ளிக்கிழமை மைசூரில் உள்ள கலைக்கூடம், மைசூர் மகாராஜா அரண்மனை, மைசூர் மிருகக்காட்சி சாலை மற்றும் செயின்ட் பிலோமினா தேவாலயம் ஆகியவற்றைப் பார்வையிடலாம்.
பின்னர் ஸ்ரீரங்கப்பட்டினம், தரியா தௌலத், திப்புவின் கோடைகால அரண்மனை, திப்பு இறந்த இடம் மற்றும் ஸ்ரீ ரங்கநாதசுவாமி கோயில் பார்த்துவிட்டு பிருந்தாவன் கார்டனுக்கு மாலை நேர விஜயம் முடித்துவிட்டு மைசூரில் இரவு தங்க வைக்கப்படுவர்.
சனிக்கிழமை காலை பயணிகள் சாமுண்டி மலைக்குச் செல்லப்படுவர். பின்னர் கூர்க் செல்லும் வழியில் குஷால் நகரில் உள்ள பொற்கோவிலுக்குச் சென்று பின்னர் நிசர்கதாமாவுக்கு அழைத்து செல்லப்படுவர்.
மதியம் மடிகேரியில் உள்ள தங்குமிடத்திற்கு சென்றுவிட்டு அருகே உள்ள அபே நீர்வீழ்ச்சி, ஓம்காரேஷ்வர் கோவில் மற்றும் ராஜா மண்டபம் ஆகியவற்றை பாற்றவையிடலாம். இரவு குடகுமலையில் தங்க வைக்கப்படுவர்.
ஞாயிறு அன்று காலை காவிரியின் பிறப்பிடமான தலைக்காவேரி மற்றும் பாகமண்டலத்திற்கு போகலாம். காவிரி தேவிக்கு எழுப்பப்பட்டுள்ள கோவிலை தரிசித்துவிட்டு ரம்யமான குடகுமலையை காவிரி நதியில் சுத்த நீரோடு கண்டு விளையாடி அங்கிருந்து கிளம்பினாள் இரவு 9 மணிக்கு மைசூரில் இருந்து சென்னைக்கு ரயிலை பிடித்துவிடலாம். திங்கள் காலை 7 மணிக்கு சென்னையை அடைந்து விடலாம்.
இதையும் படிங்க: ஸ்ரீராமாயணா யாத்திரை.. அயோத்தி முதல் ராமேஸ்வரம் வரை ரயில் பயணம்.. விவரங்களும் வழிகாட்டலும்!
கட்டணம்:
இந்த டூர் பேக்கேஜ் சாதாரண மக்களுக்கு ஏற்ற விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு நபருக்கு ரூ.8670 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. உணவு, உறைவிடம், ஸ்லீப்பர் கோச்சில் பயணம், நுழைவு சீட்டு கட்டணம், தரிசன டிக்கெட் அனைத்தும் இதில் அடங்கும்.
முன்பதிவு விவரங்கள்
ஆர்வமுள்ள பயணிகள் IRCTC சுற்றுலாவின் அதிகாரப்பூர்வ https://www.irctctourism.com இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம். இன்னும் 10 நாட்களில் நவம்பர் 17 அன்று ஒரு குழு கிளம்ப இருக்கிறது. உங்களது பெயரையும் சேர்த்து விடுங்கள். ஜாலியா ஒரு கூர்க் சுற்றுலா போய் வரலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.