ஹோம் /நியூஸ் /lifestyle /

பூட்டானில் தொடங்கும் சவாலான அல்ட்ரா மராத்தான் ஸ்னோமேன் பந்தயம்..!

பூட்டானில் தொடங்கும் சவாலான அல்ட்ரா மராத்தான் ஸ்னோமேன் பந்தயம்..!

பூட்டானில் தொடங்கும் சவாலான அல்ட்ரா மராத்தான் ஸ்னோமேன் பந்தயம்

பூட்டானில் தொடங்கும் சவாலான அல்ட்ரா மராத்தான் ஸ்னோமேன் பந்தயம்

பூடான் எப்போதும் காலநிலை மாற்றத்தை முன்னிறுத்தி உலகளவில் குரல் எழுப்புகிறது. நாம் அனைவரும் காலநிலை மாற்றத்தின் தாக்கங்களால் பெரும் பாதிப்புகளுக்கு இடையே வாழ்கிறோம்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai |

மிகவும் சவாலான அல்ட்ரா மராத்தான்களில் ஒன்றாகக் கருதப்படும் ஸ்னோமேன் பந்தயத்தை முதன்முறையாக நடத்த பூட்டான் தயாராகி உள்ளது. இந்த நிகழ்வு அக்டோபர் 13 முதல் அக்டோபர் 17, 2022 வரை பூட்டானில் நடத்தப்படும்.

இந்தாண்டு போட்டியில் சுமார் 29 விளையாட்டு வீரர்கள், ஒன்பது பூட்டான் ஓட்டப்பந்தய வீரர்கள் கலந்து கொள்கிறார்கள். அவர்கள் ஐந்து நாட்களில் 203 கி.மீ பயணிப்பர். கடல் மட்டத்தில் இருந்து சுமார் 14,800 அடி உயரத்தில் தொடங்கும் இந்த போட்டி 17,946 அடி உயரத்தில் முடிவடையும். இதற்கான பயிற்சி வகுப்புகள் பொதுவாக 20-25 நாட்கள் நடைபெறும். அந்த வகுப்புகள் தற்போது முடிந்துள்ளது.

காலநிலை அவசரநிலை குறித்த விழிப்புணர்வை உருவாக்கும் நோக்கத்துடன் பூட்டானின் மன்னரால் இந்த பந்தயம் தொடங்கப்பட்டது. இந்த நிகழ்வு புவி வெப்பமடைதலின் உண்மையான விளைவுகளை எடுத்துக்காட்டுவதோடு, குறிப்பாக உயர்ந்த இமயமலை போன்ற கிரத்தின் முக்கிய சுற்றுச்சூழல் அமைப்புகளின் மோசமடையும் சுற்றுச்சூழல் அமைப்புகளை எடுத்துக்காட்டுகிறது. பந்தயம் முடிந்த அடுத்த நாள் மெய்நிகர் காலநிலை மாநாடு நடைபெறும். அதனுடன் ஸ்னோமேன் நிகழ்வு முடிவடையும்.

படகு இல்ல அனுபவத்துக்கு ஏற்ற இந்தியாவின் சிறந்த 5 இடங்கள்..!

இது குறித்து, ஸ்னோமேன் பந்தய வாரியத்தின் தலைவர் தூதர் கேசாங் வாங்டி மேலும் கூறுகையில், பூடான் எப்போதும் காலநிலை மாற்றத்தை முன்னிறுத்தி உலகளவில் குரல் எழுப்புகிறது. நாம் அனைவரும் காலநிலை மாற்றத்தின் தாக்கங்களால் பெரும் பாதிப்புகளுக்கு இடையே வாழ்கிறோம். மேலும், இந்த போட்டி மற்றும் அது குறிக்கும் அனைத்து கருத்துக்களும், நமக்கு முன்னால் உள்ள சவால்களின் அடையாளமாகும்.

அடுத்த சில வருடங்கள் நமது கிரகம் மற்றும் அதன் அனைத்து குடிமக்களின் எதிர்காலத்தை தீர்மானிப்பதில் மிக முக்கியமானதாக இருக்கும். நமது இயற்கைச் சூழலைப் பாதுகாப்பதற்கான விழிப்புணர்வையும், தேவையான நிதியை அதிகரிப்பதன் மூலம், காலநிலை மாற்றத்தை விரைவில் நாம் கட்டுக்குள் கொண்டு வரலாம் என்றார்.

அல்ட்ரா மாரத்தானில் அமெரிக்கா, கனடா, ஜப்பான், ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஜெர்மனி, சிங்கப்பூர், தான்சானியா, சுவிட்சர்லாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த தடகள வீரர்களும், பூட்டானைச் சேர்ந்த ஒன்பது வீரர்களும் கலந்து கொள்வார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த பந்தயம் பூட்டானில் உள்ள மிகவும் சவாலான மலையேற்றப் பாதையான ஸ்னோமேன் டிரெயில், லுனானா பகுதி உட்பட நாட்டின் அழகிய மலைப்பகுதிகளை உள்ளடக்கியிருக்கும் . போட்டியாளர்கள் உலகின் மிக உயரமான ஏறாத மலையான கங்கர் புயென்சத்தின் அடிவாரத்தையும் கடந்து செல்வார்கள் என்று தெரிகிறது.

Published by:Ilakkiya GP
First published:

Tags: Travel