• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • இந்தியாவில் எங்கெல்லாம் ஸ்கை டைவிங் செய்யலாம்?

இந்தியாவில் எங்கெல்லாம் ஸ்கை டைவிங் செய்யலாம்?

பறவைகளைப் போல் சிறகுகள் இல்லையென்றாலும் மனித வின்ஞானத்தால் கண்டுபிடிக்கப்பட்டதுதான் ஸ்கை டைவிங்.

  • Last Updated :
  • Share this:
    வானில் பறக்க யாருக்குதான் ஆசை இருக்காது. அப்படியொரு வாய்ப்பு கிடைத்தால் அதை அனுபவிக்காமல் இருக்க முடியுமா? பறவைகளைப் போல் சிறகுகள் இல்லையென்றாலும் விஞ்ஞானத்தால் கண்டுபிடிக்கப்பட்டதுதான் ஸ்கை டைவிங். பறக்கும் அனுபவத்தை அளிக்கும் இந்த ஸ்கை டைவிங் செய்ய இந்தியாவில் எந்தெந்த இடங்கள் சிறந்தவை என்பதைக் காணலாம்.

    தீசா, குஜராத்:



    இந்தியாவிலேயே குஜராத்தில்தான் ஸ்கை டைவிங் பகுதி மிகப் பெரியது. அழகிய ஏரியை ஒட்டிய இடத்தில் இந்த டைவிங் பகுதி இருக்கிறது. இதனால் வானில் மிதந்தவாறு அதை ரசிக்கும் அனுபவத்தைப் பெறலாம். இங்கு தண்டம் ஜம்ப், ஸ்டாட்டிக் லைன் ஜம்ப், ஆக்ஸிலரேட்டட் ஃப்ரீ ஃபால் என மூன்று விதமான ஸ்கை டைவிங் அனுபவத்தைப் பெறலாம். இந்தியாவிலேயே இங்கு தான் ஸ்கை டைவிங் செய்வோருக்கு இறங்கும் இடம் இருக்கிறது. இது சுற்றுலாத் தளத்தால் அங்கீகரிக்கப்பட்டது. நீங்கள் ஸ்கை டைவிங் செய்யப்போகும் ஒரு மணி நேரத்திற்கு முன் அது குறித்த பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இங்கு ஸ்கை டைவிங் குறித்த முகாம்களும் அவ்வப்போது நடக்கும். 3,500 முதல் 4000 அடி உயரத்திலிருந்து வானில் இறக்கப்படும். டைவிங் செய்ய 16000 தொடங்கி 38000 ரூபாய் வரை செலவாகும். வெளிநாட்டினர் வருகையும் இங்கு அதிகம்.

    ஆம்பி பள்ளத்தாக்கு, மஹாராஷ்ட்ரா:



    தண்டம் ஜம்ப் தான் இங்கு பிரசிதிபெற்றது. பறந்தபடி பள்ளத்தாக்குகளின் அழகை ரசிக்கலாம். டைவிங் செய்ய ஏற்ற இடம் இந்தியாவிலேயே இங்குதான் சரியாக பொருந்தியிருப்பதாகவும் கூறப்படுகிறது. இங்கு உறுப்பினர் அட்டைகள் வழங்கி ஒரு வருடத்திற்கான சளுகைகளும் அளிக்கின்றனர். 10,000 அடி உயரத்தில் நின்றபடி பாராசூட்டிலிலிருந்து பறக்க விடுவதுதான் இவர்களின் சிறப்பு. வானிலிருந்து பனிசூழ் காற்றில் மேகங்களை அள்ளி அனைத்த அனுபவத்தைப் பெறலாம். ஒரு நபருக்கு திங்கள் முதல் வியாழன் வரை 20,000 ரூபாயும், வெள்ளி முதல் ஞாயிறு வரை 25,000 என வசூலிக்கப்படுகிறது.

    தானா, மத்தியப்பிரதேசம்:



    மத்தியப்பிரதேசத்தில் உள்ள சாகர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம்தான் தானா. இந்தியாவில் இங்குதான் முதன் முறையாக ஸ்கை டைவிங் விளையாட்டு தொடங்கப்பட்டது. என்னதான் நீங்கள் எத்தனை பெரிய சாகச பிரியராக இருந்தாலும், பல அனுபவங்களைப் பெற்றிருந்தாலும் பயிற்சியாளார் உங்களுடன் துணைக்கு வருவார். அதுதான் இங்கு சிறப்பு. ஸ்டாட்டிக் லைன் ஜம்ப், டண்டெம் ஜம்ப் ஆகியவை இங்கு பயிற்சியளிக்கப்படுகின்றன. இங்கு ஸ்கை டைவிங் செய்ய 35000 முதல் 37000 வரை செலவாகிறது.

    மைசூர், கர்நாடகா:



    மலைத் தொடர்களுக்கு நடுவே பறப்பதே அலாதியான ஒன்றுதான். சாமுண்டி மலைகளுக்கு நடுவே அமைந்துள்ள இந்த ஸ்கை டைவிங் பகுதி வெறொரு உலகத்திற்கு உங்களை அழைத்துச் செல்லும். இங்கு மூன்று விதமான ஸ்கை டைவிங் அனுபவத்தைப் பெறலாம். ஆக்ஸிலரேட் ஃப்ரீ ஃபால் ஜம்பிற்கு மட்டும் 8 நாட்கள் பயிற்சிகள் அளித்த பின்னர்தான் பறக்க விடுவார்கள். இதற்கு ஒரு நபருக்கு 2,50,00 ரூபாய் ஆகிறது. மற்ற ஜம்பிங் விளையாட்டுகளுக்கு 35,000 முதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

    ஹைதராபாத், தெலுங்கானா:



    நாகர்ஜுனா சாகர் விமானநிலையத்தில்தான் இந்த ஸ்கை டைவிங் பகுதி இருக்கிறது. 4000 அடி உயரத்திலிருந்து முதலில் உங்களுக்கு மூன்று நாட்கள் பயிற்சி அளிக்கப்படும். பின் 9000 முதல் 10,000 அடி உயரத்திலிருந்து பூமியின் அழகைக் கண்டு ரசிக்கலாம்.

    அலிகார், உத்திரப்பிரதேசம்:



    ஸ்கை டைவிங் விளையாட்டில் மறக்க முடியாத த்ரில்லிங் அனுபவத்தை பெற அலிகார் சிறந்த இடம். பயிற்சியாளர்களால் முறையான பயிற்சிகள் அளிக்கப்பட்ட பின்னரே வானில் பறக்க விடுவார்கள். நீல நிறம் சூழந்த வானை எட்டிப் பிடிக்கத் தூண்டும் இதன் அழகில் இலயிக்கலாம். இங்கும் 9000 முதல் 10000 அடி உயரத்திலிருந்து பறக்கும் அனுபவத்தைப் பெறலாம்.

    புதுச்சேரி:



    புதுச்சேரி சிறந்த சுற்றுள்ளாத் தளம் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் ஸ்கை டைவிங்கிற்கும் பெயர்போன இடம் புதுச்சேரி என்று உங்களுக்குத் தெரியுமா? வெளிநாடிலிருந்தும், உள்ளூரிலிருந்தும் ஏராளமான மக்கள் இங்கு ஸ்கை டைவிங்கிற்காக வந்து செல்கின்றனர். டண்டெம் மற்றும் ஸ்டாட்டிக் ஆகிய இரு ஜம்புகள்தான் இங்கு பலரும் விரும்புகின்றனர். பாண்டிச்சேரி சென்றால் காற்றில் பறக்கும் காற்றாடியாய் அலைமோதும் அனுபவத்தைப் பெறலாம். இங்கு 18,000 முதல் 62,000 வரை ஒரு டைவிங்கிற்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sivaranjani E
    First published: