நவம்பர் பாதியில் இருந்து ஊட்டியே ஏதோ இமயமலை அடிவாரமா இது? என்று சொல்லும் அளவிற்கு குளிரும் அடர் பனியும் சூழ்ந்து காணப்படுகிறது. வெயில் காலத்திலேயே குளிர் மிஞ்சும் நீலகிரி மலை குளிர் காலத்தில் எப்படி இருக்கும் என்று சொல்லவா வேண்டும்.
ஊட்டி என்றால் ரோஸ் கார்டன், தேயிலை தோட்டம், பைக்காரா ஏரி, பைக்காரா நீர்வீழ்ச்சி, பொட்டானிக்கல்கார்டன் , தொட்டபெட்டா தான் நினைவுக்கு வரும். ஆனால் ஊட்டியில் பெரிதாக மக்கள் போகாத ஒரு ட்ரெக்கிங், டென்டிங் இடம் பற்றி தான் இன்று உங்களுக்கு சொல்ல இருக்கிறோம்.
ஊட்டி நகர மையத்திலிருந்து சுமார் 22 கி.மீ தொலைவில், நீலகிரி உயிர்க்கோள காப்பகத்தின் கீழ் அவலாஞ்சி ஏரி அமைந்துள்ளது. மலைகளால் சூழ்ந்த இடத்தின் நடுவில் அழகிய இரு ஏரி அமைந்துள்ளது.
இதையும் படிங்க: மைசூர் டூ ராமேஸ்வரம்.. அம்மாவிற்காக 60,000 கிமீ ஆன்மிக பயணம் செய்யும் மகன்!
குடும்பத்துடன் செல்லும் பயணிகளாக இருந்தாலும் தனியாக பயணிப்பவர்களாக இருந்தாலும் இந்த இடம் பக்கா ஸ்பாட். பொதுவாக காலை 9 முதல் மாலை 3 மணி வரை இங்கு பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவர். ஏரியின் கரையில் அமர்ந்து மலையில் அழகை ரசிக்கவும் ஏரியில் மீன் பிடித்து சமைத்து சாப்பிடவும் ஏற்ற இடமாக இருக்கும்.
மீன் பிடிக்கும் சாதனங்கள் எல்லாம் ஏரியின் அருகிலேயே கிடைக்கும். குழந்தைகளுக்கு மீன்பிடிக்க சொல்லி தர சிறந்த இடமாக இது இருக்கும். இதற்கு நுழைவுக்கட்டணம் ஏதும் கிடையாது.
இது போக ஏரியை சுற்றியுள்ள இடங்களை சுற்றிப்பார்க்க சவாரி வசதிகாலும் உள்ளது. பேருந்தில் சுற்றி பார்க்க ஒரு நபருக்கு 200 கட்டணமாக வசூலிக்கப்படும். நண்பர்களோடு தனியா ஜீப்பில் செல்ல விரும்பினால் ஒரு ட்ரிப்புக்கு ₹2000 கட்டணமாக வாங்குகின்றனர். அதில் 8 பேர் வரை பயணிக்கலாம்.
இதையும் படிங்க : வேலு நாச்சியாரின் சிவகங்கை சீமை அரண்மனைக்கு ஒரு ட்ரிப்!
இது போக ட்ரக்கிங் செய்ய விரும்பும் பயணிகள் வனத்துறை அலுவலர்களிடம் அனுமதி பெற்று குழுவாக அருகில் உள்ள மலைகளில் ட்ரெக்கிங் போகலாம். ஏரியோரம் முகாமிட்டு தங்க விரும்பினாலும் ஏரியின் அருகில் அமைந்திருக்கும் வன வலுவலகத்தில் அனுமதி பெற வேண்டும்.
இரவில் ஏரியின் மீது படியும் பனியின் அழகை ரசித்துக்கொண்டே ஒரு கேம்ப் பயர் போட்டு கழித்தால் அதன் அனுபவமே தனி. ஊட்டி போனால் நிச்சயம் இதை முயற்சி செய்யுங்கள்.
அது போக, அவலாஞ்சி ஏரியில் இருந்து 5 கிமீ தொலைவில் உள்ள எமரால்டு ஏறி, டீர் பார்க் , த்ரெட் கார்டன் இடங்களையும் பார்க்க மறக்காதீங்க. ஊட்டியிலிருந்து அவலாஞ்சி ஏரிக்கு ஏராளமான பேருந்து மற்றும் டாக்ஸி சேவைகள் சீரான இடைவெளியில் இருக்கின்றன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Ooty, Travel, Travel Guide, Trip