இந்திய குடும்பங்களுக்கு குடும்பத்தில் ஒருவராவது வெளிநாட்டிற்கு சென்று வேலை செய்ய வேண்டும். அதில் ஒரு கவுரவம் என்று நினைக்கின்றனர். ஆனால் அவ்வளவு சீக்கிரம் விசா கிடைத்துவிடுமா என்ன?
மாதக்கணக்கில் விசாவிற்காக அலைந்து கொண்டிருக்கும் கூட்டம் இருக்கத்தான் செய்கிறது. அப்படி விசாவிற்காக அலையும் மக்கள் திரளாக கூடும் இடமாக ஹைதராபாத்தின் ஒரு குறிப்பிட்ட இடம் சில வருடங்களாக மாறி இருக்கிறது. விசா கிடைப்பதற்காக இங்கே வந்து இறைவனை வேண்டுகின்றனர். அவர்களுக்கு விசாவும் கிடைத்து விடுகிறதாம்.
விசா பாலாஜி என்று பிரபலமாக அறியப்படும் கோவில், ஹைதராபாத்தின் புறநகரில் ஒஸ்மான் சாகர் ஏரிக்கு அருகில் சில்கூர் எனுமிடத்தில் அமைந்துள்ளது. ஐதராபாத்தில் உள்ள பழமையான கோவில்களில் ஒன்றான இந்த கோவிலை இசையமைப்பாளரும், ராம பக்தருமான ராமதாஸின் மாமாக்கள் அக்கண்ணா மற்றும் மாதன்னா கட்டியதாக சொல்கிறார்கள்.
இதையும் படிங்க : கல்பாக்கத்தில் ஒரு கம்பீரமான டச்சு கோட்டையா..! 1 நாள் ட்ரிப்புக்கு சூப்பர் இடம்
சாதாரண பெருமாள் கோவிலாக இருந்த இந்த கோவில் எப்படி விசா பாலாஜி கோவிலாக மாறியதற்கு ஒரு சுவாரசிய கதையைச் சொல்கிறார்கள். 1983-84ல் அர்ச்சகர்களில் ஒருவரான கோபாலகிருஷ்ணன் கிணறு தோண்டும்போது தண்ணீர் வரவில்லை என்று வருந்தி 11 முறை கடவுளை சுற்றி வந்து வேண்டியுள்ளார்.
அவர் 11வது சுற்று முடிந்தவுடன், கிணற்றில் தண்ணீர் வந்ததாக கூறுயுள்ளனர். அதற்கு கடவுளுக்கு நன்றி செலுத்தும் விதமாக கோபாலகிருஷ்ணன் மேலும் 108 சுற்றுகளை முடித்தார். இந்த சம்பவம் தான் தொடக்கப்புள்ளி. இதன் பிறகுதான் இந்த கோவிலில் 11 சுற்று சுற்றி எதை வேண்டுகிறோமோ அது கிடைக்கும் என்று மாறியது. குறிப்பாக விசா விண்ணப்பங்கள் நிறைய நடந்துள்ளது. அதன் பின்னர் தான் இந்த சில்கூர் பாலாஜி, விசா பாலாஜி ஆனார்.
பல இளம் இந்தியர்கள் ஆஸ்திரேலியா, அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பாவிற்கு செல்ல விசா போட்டு விட்டு கிடைக்கவேண்டும் என்று இந்த கோவிலை வந்து சுற்றுகிறார்கள். முக்கியமாக படிக்க வெளிநாடு செல்ல விரும்பும் மாணவர்களை இங்கு அதிகம் காணலாம். வெளிநாட்டு பல்கலைக்கழகங்களின் எண்ட்ரன்ஸ் தேர்வு முடிந்த பின்னர் இங்கு கூட்டம் களைகட்டும்.
இந்த கோவிலுக்கு அண்டை மாநிலங்களான ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அதிகம் வருகின்றனர். வேண்டுதல் நிறைவேறியதும், பக்தர்கள் 108 முறை கருவறையைச் சுற்றி வருகின்றனர். கோவிலுக்கு ஒரு நாளைக்கு 4,000 முதல் 5,000 பக்தர்கள் வருகிறார்கள், பொது விடுமுறை மற்றும் வார இறுதி நாட்களில் கூட்டம் அதிக எண்ணிக்கையில் இருக்கிறது.
இதையும் படிங்க: 18,000 அடி உயரத்தில் 8 வகை ஒயின்... உலகின் முதல் ஒயின் விமான பயணம் தொடக்கம்!
அதே போல் கோவிலில் பூஜை அல்லது தரிசனத்திற்கான டிக்கெட் வடிவில் எந்த பணத்தையும் ஏற்றுக்கொள்வது இல்லையாம். இந்த கோவிலில் உண்டியல் கூட வைத்திருப்பதில்லை.
"பெரும்பாலான பக்தர்கள் 25 முதல் 35 வயதிற்குட்பட்டவர்கள், பிரார்த்தனைகள் அனைத்தும் விசா தொடர்பானவை. பெரும்பாலான மாணவர்கள் பிரார்த்தனை செய்த பிறகே விசாவைப் பெறுகிறார்கள். அதுதான் இந்த கோவிலுக்கு கிடைக்கும் காணிக்கை" என்று கோவிலின் அறக்கட்டளை நிதியத்தின் அதிகாரிகள் கூறுகின்றனர்.
நீங்களும் நீண்ட காலமாக விசாவிற்கு அப்பிளிகேஷன் போட்டு கிடைக்காமல் காத்திருந்தால் உடனடியாக ஹைராபாத்துக்கு ஒரு டிக்கெட்டை போடுங்க.. விசா பாலாஜிக்கு ஒரு அட்டெண்டன்ஸ் போட்டுட்டு வந்தரலாம் ...!
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: American visa, Temple, Travel, Travel Guide