ஒரு பயணத்திற்கு தயாரா? அப்படியானால், இந்தக் கட்டுரையைப் படிக்க இதுவே சரியான நேரம். விடுமுறை சுற்றுலா, ஆண்டு சுற்றுலா, என்று எப்போதாவது போகிறவர்களுக்கு அந்த சுற்றுலா முடித்ததும் 2 நாட்கள் ஓய்வு எடுத்தால் சரியாகிவிடும். ஆனால் வேலை நிமித்தமாக அடிக்கடி பயணிப்பவர்களுக்கு ஓய்வு என்பது குறைவு. அப்போது ஆரோக்கியத்தை பாதுகாப்பது என்று தொடரும். அதற்கான வழிகளை தான் இங்கு சொல்ல இருக்கிறோம்.
பயணத்தைப் போல எதுவும் உங்கள் மனதை விரிவுபடுத்துவதில்லை. ஒவ்வொரு பயணமும் தனக்கான தனி அனுபவத்தை நமக்கு விட்டுச்செல்லும் . ஆனால் முழு பயணத்தையும் ஆரோக்கியமாக அனுபவிக்க தான் தயாராக வேண்டும். இல்லையேல் போகும் பயணம் முழுமை பெறாது.
பயத்தின்போது சோர்வு ஏற்படாமல் , நோய்வாய்ப்படாமல், சுறுசுறுப்பாக , இருக்க ஒரு சில டிப்ஸை உங்களுக்கு சொல்கிறோம். உங்கள் பயணத்தின்போது முயற்சி செய்து பாருங்கள். நிச்சயம் உங்கள் பயணங்கள் எல்லாம் இனிதான பயங்களாகவே அமையும்.
- ஒவ்வொரு பயணத்தின்போதும் சரியான நேரத்தில் சரியாய் மற்றும் சீரான உணவை உண்பதை உறுதி செய்யவும்.
- எப்போதும் நீரேற்றமாக இருங்கள். அதுதாங்க.. stay hydrated என்பார்களே. பயணத்தின்போது எப்போதும் உங்களுடன் ஒரு பெரிய அளவு தண்ணீர் பாட்டிலை எடுத்துக்கொண்டு போங்க. பயணம் முழுவதும் குறிப்பிட்ட இடைவேளையில் தண்ணீர் எடுத்துக்கொண்டே இருங்கள்.
- ஒருவேளை விமானத்தில் பயணம் செய்யப்போகிறீர்கள் என்றால் விமானத்தில் ஏறுவதற்கு 60 நிமிடங்களுக்கு முன்பு மற்றும் தரையிறங்கிய பின் டீ மற்றும் காபி மற்றும் தவிர்க்கவும்.
- கார், பஸ் போன்ற சாலைப் பயணங்களின்போது ஓடும் வாகனத்தில் தேநீர், காபி அருந்தக் கூடாது. ஒரு இடத்தில் நிற்கும்போது அருந்துங்கள். அதுவும் கொஞ்சம் அளவாக.
- வெளியூரில் தங்கும்போது ஜிம்மிற்கான அணுகலை வழங்கும் ஹோட்டல்களைத் தேர்ந்தெடுத்து, நேரம் கிடைக்கும்போது உடற்பயிற்சி செய்யுங்கள். அல்லது உங்கள் அறையிலேயே சிறிய அளவிலான உடற்பயிற்சிகளையாவது செய்யுங்கள்.
- தினமுமே யோகா சூரியமஸ்காரம் போன்றவற்றை செய்வதை பழக்கமாக்கிக் கொள்ளுங்கள். உடல் சிறு அளவிலான இயக்கத்திலாவது இருப்பதாய் உறுதி செய்து கொள்ளுங்கள்
- பயணத்தின்போது கிடைக்கும் உணவுகள் ஆரோக்கியமாக இருக்குமென்று சொல்ல முடியாது. அதை ஈடு செய்ய வேர்க்கடலை, முந்திரி, பிஸ்தா மற்றும் பிற கொட்டைகளை கையில் எடுத்துச் செல்லுங்கள். நேரம் கிடைக்கும்போது இடையில் அவற்றை சாப்பிட்டுகொள்ளலாம்.
- எங்கே சென்றாலும் குறைந்தது 7 மணி நேரத் தூக்கம் என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள். தூக்கமின்மை தான் சோர்வு மற்றும் உடல் நலக்குறைவு ஏற்பட பெரிதும் காரணமாக இருக்கும். அதனால் அதை சரியாக கவனித்துக்கொள்ளுங்கள்
- ஆடைகளில் கவனம் தேவை. செல்லும் இடத்தின் தர்ப்பை வெப்ப நிலைக்கு ஏற்ப ஆடைகளை எடுத்துச்செல்லுங்கள். கூடுதலாக ஒரு செட் ஆடைகளை எடுத்து செல்வது நன்று.
- அதே போல வெளியில் சாப்பிடும்போது அதீத இனிப்பு, அதீத காரம் எடுத்துக்கொள்வதை தவிர்த்து கொள்ளுங்கள். அதுதான் ஆரோக்கியத்தை பாதிக்கும்.
- வைட்டமின், சப்ளிமென்ட் மாத்திரைகளை பயணத்தின்போது கையில் வைத்துக்கொள்வது கூடுதல் நன்று. அதே போல காய்ச்சல் தலைவலிக்கான மாத்திரைகளையும் குறைந்த பட்சம் கையில் வைத்துக்கொள்ளுங்கள். அதனால் பயணத்தின் நேரத்தை வலிகளில் செலவிடாமல் தவிர்க்கலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.