முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / குப்பைகளால் உருவாக்கப்பட்ட வீடுகள்.. மெக்ஸிகன் நகரம் பற்றி தெரியுமா.?

குப்பைகளால் உருவாக்கப்பட்ட வீடுகள்.. மெக்ஸிகன் நகரம் பற்றி தெரியுமா.?

எர்த்ஷிப் கட்டுமானங்கள்

எர்த்ஷிப் கட்டுமானங்கள்

குப்பைகளை மட்டுமே பயன்படுத்தி, உலகம் முழுவதும் முற்றிலும் நிலையான வீடுகளை உருவாக்குவதை தனது கனவாக எடுத்துக்கொண்டார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

ஷங்கர் இயக்கத்தில் 2003 ஆம் ஆண்டு வெளிவந்த பாய்ஸ் படத்தில் குப்பைகளை மட்டுமே வைத்து ஒரு பாடலை எடுத்திருப்பார். காதல் நுழைந்தால் காய்லாங்கடையும் கோலார் வயலாகும் என்று வரிகளை கூட பாடலாசிரியர் எழுதியிருப்பார். அப்படி குப்பைகளை வைத்து ஒரு நகரம் அமைக்கப்படுகிறது என்று சொன்னால் நம்புவீர்களா?

மைக்கேல் ரெனால்ட்ஸ் என்ற கட்டிடக் கலைஞர் உலகில் அதிகரித்து வரும் குப்பைகளை எண்ணி கவலை கொண்டுள்ளார். இந்த குப்பைகளை பூமிக்குள் புதைக்கவும் முடியாது. பூமியிலிருந்து அழிக்கவும் முடியாது என்று சிந்தித்துள்ளார். அப்போது தான் ஒரு ஐடியா உதித்துள்ளது.

குப்பைகளை மட்டுமே பயன்படுத்தி, உலகம் முழுவதும் முற்றிலும் நிலையான வீடுகளை உருவாக்குவதை தனது கனவாக எடுத்துக்கொண்டார்.

குப்பைகளில் இருந்து கிடைக்கும் பொருட்களை வைத்து கட்டிடங்களை அமைப்பதால் அவரது படைப்புகளை ‘ எர்த்ஷிப்கள்’ என்று பெயரிடுகிறார்.

அதன் முதல்படியாக, நியூ மெக்ஸிகோவின் தாவோஸில் மட்டும் அவர் தனது 75 எர்த்ஷிப் கட்டுமானங்களை உருவாக்கியுள்ளார். அது போக 20 நாடுகளில் இவர் இதுபோன்ற எர்த்ஷிப் கட்டிடங்களை காட்டியுள்ளார்.

மேலும் குப்பைகள் என்றால் பழைய கேன்கள், டயர்கள் பயன்படுத்தி உருவாக்குகிறார். அதோடு மணல், மரம் போன்ற கட்டிட அமைப்புகளை சேர்த்துள்ளார்.

இந்த கட்டமைப்புகள் எந்த எரிபொருளையும் பயன்படுத்தாமல், மழைநீரைப் பிடித்து சேமித்து பயன்படுத்தும் அமைப்பு, சூரிய சக்தி பயன்படுத்தி , ஆண்டு முழுவதும் 72 டிகிரி பாரன்ஹீட் (22 டிகிரி செல்சியஸ்) பராமரிக்கும் வீடுகளாக இவை உள்ளன.

அதேபோல இன்றைய உலகத்தில் உள்ள அனைத்து தேவைகளும் பூர்த்தி செய்யும் வசதிகளும் இங்கு உள்ளன. இல்லனா வசதியும் உள்ளது.

ஆனால் இங்கு வந்து இந்த நகரத்தின் அழகை ரசிக்கும்போது போன்களை எல்லாம் மறந்துவிடுவோம். வெளியில் இருந்து வரும் மக்கள் இங்குள்ள எர்த்ஷிப்களை வாடகைக்கு எடுத்து இங்கு தங்கலாம்

First published:

Tags: Mexico, Travel