Home /News /lifestyle /

கோவை மக்களே ஒரு நற்செய்தி... இந்த புரட்டாசிக்கு திருப்பதி போக IRCTC இன் அற்புதமான பேக்கேஜ்!

கோவை மக்களே ஒரு நற்செய்தி... இந்த புரட்டாசிக்கு திருப்பதி போக IRCTC இன் அற்புதமான பேக்கேஜ்!

கோவை-திருப்பதி சுற்றுலா

கோவை-திருப்பதி சுற்றுலா

இந்த புரட்டாசிக்கு திருப்பதி, ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோயிலுக்கு சென்று வருவதற்கான அற்புதமான பேக்கேஜை IRCTC அறிமுகம் செய்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore, India
புரட்டாசி சனிக்கிழமைதோறும் பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் சிறப்பு தரிசனங்கள் நடைபெறுவது வழக்கம். இதனால்  புரட்டாசி தொடங்கிய நிலையில், பெருமாள் கோயில்களை நோக்கி பக்தர்கள் கூட்டம் படையெடுக்க தொடங்கிவிட்டது. 

அந்தவகையில் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் ஆந்திரப் பிரதேசத்தின் சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள திருப்பதி, ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோயிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். நீங்களும் திருப்பதி சென்று வழிபட முடிவெடுத்திருந்தால் உங்களுக்குதான் இந்த நற்செய்தி.

ஆமாம். உங்களுக்காகவே IRCTC திருப்பதி சுற்றுலா பேக்கேஜ் அறிமுகம் செய்துள்ளது.  ரூ. 4,170 பேக்கேஜில் கோவையிலிருந்து திருப்பதி வரை சென்று வருவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புரட்டாசி மாதம்: வைணவ கோயில்கள் ஒரு நாள் சுற்றுலா.. தமிழக அரசு ஏற்பாடு!

சுற்றுலா திட்டம்:

அந்த பேக்கேஜின்படி 2 பகல், 1 இரவு சுற்றிப்பார்க்கும் இந்த திட்டம் வாரம்தோறும் செவ்வாய்க்கிழமை காலை 6 மணிக்கு கோவை ரயில் நிலையத்தில் இருந்து தொடங்குகிறது. அடுத்தடுத்த நிறுத்தங்களில் அந்த வழியாக உள்ள மக்களை இணைத்துக்கொள்கிறது. அதன் நேர விபரம் :

கோவை சந்திப்பு - 06:00,

திருப்பூர்- 06:43 ,

ஈரோடு சந்திப்பு - 07:25

சேலம் சந்திப்பு - 08:22

ஜோலார்பேட்டை- 10:03

காட்பாடி சந்திப்பு - 11:23

மதியம் 1.20 மணிக்கு திருப்பதி சேர்ந்துவிடும். அங்கே காளஹஸ்தி கோயில், திருச்சானூர் பத்மாவதி அம்மன் கோயில் ஆகியவற்றை தரிசிக்கலாம்.

ஜம்முவில் உள்ள வைஷ்ணவி தேவியை வழிபட அருமையான வாய்ப்பு... IRCTC-ன் அசத்தல் பேக்கேஜ் அறிமுகம்!

அடுத்த நாள் காலை உணவிற்கு பிறகு திருப்பதியில் பெருமாளை தரிசித்து விட்டு மதியம் 2 மணிக்கு கிளம்பினாள் இரவு 10.40 க்கு கோவை வந்து சேர்ந்து விடலாம்.

தொகுப்பின் விலை

இந்த டூர் பேக்கேஜ் சாதாரண மக்களுக்கு ஏற்ற மலிவு விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பெரியவர்களுக்கு ரூ.4170, 5 முதல் 11 வயதுடைய குழந்தைகளுக்கு ரூ.3640 கட்டணமாகும். உணவு, உறைவிடம், சாதாரண / ஏசி பெட்டியில் பயணம், நுழைவு சீட்டு கட்டணம், தரிசன டிக்கெட் அனைத்தும் இதில் அடங்கும்.

முன்பதிவு விவரங்கள்

ஆர்வமுள்ள பயணிகள் IRCTC சுற்றுலாவின் அதிகாரப்பூர்வ https://www.irctctourism.com இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம்.
Published by:Ilakkiya GP
First published:

Tags: IRCTC, Tirumala Tirupati, Tirupati temple, Tourism

அடுத்த செய்தி