முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / மாலத்தீவில் ஆண்ட்ரியா தங்கியிருக்கும் வீடு எப்படி இருக்கு தெரியுமா ?

மாலத்தீவில் ஆண்ட்ரியா தங்கியிருக்கும் வீடு எப்படி இருக்கு தெரியுமா ?

நடிகை ஆண்ட்ரியா

நடிகை ஆண்ட்ரியா

நடிகை ஆண்ட்ரியா விடுமுறையை கொண்டாட மாலத்தீவிற்கு சென்றுள்ளார்.

  • Last Updated :

தமிழ் சினிமாவில் முன்னணி பாடகி மற்றும் நடிகையாக வலம் வருகிறார் நடிகை ஆண்ட்ரியா. இவர் பொங்கலுக்கு வெளியான மாஸ்டர் படத்தில் நடித்திருந்தார். தற்போது பிசாசு 2, மாளிகை, வட்டம் ஆகிய படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

பிசியாக ஷூட்டிங்கில் நடித்து வரும் சினிமா பிரபலங்கள் விடுமுறை நாட்கள் கிடைத்தவுடன் சுற்றுலா தளங்களுக்கு செல்கின்றனர். ஆனால் நடிகர்கள் மற்றும் நடிகைகள் அடிக்கடி செல்லும் சுற்றுலா தலமாக மாலத்தீவு திகழ்கிறது.

நடிகை காஜல் அகர்வால் முதல் நடிகர் காளிதாஸ் வரை அனைவரும் சென்றுள்ளனர். தற்போது நடிகை ஆண்ட்ரியா மாலத்தீவிற்கு சென்றுள்ளார். இந்த பயணத்தை pick your trail என்ற வெப்சைட்டில் ஆண்ட்ரியா புக் செய்துள்ளார். sun siyam resorts-ல் தங்கியுள்ள ஆண்ட்ரியா அங்கிருந்தப்படி புகைப்படங்களையும் பதிவிட்டு வருகிறார்.

வெள்ளை நிறத்தில் ஷார்ட் ட்ரெஸ் அணிந்து வீட்டில் இருக்கும் private pool-ல் குளிக்கும் படி வீடியோ வெளியிட்டுள்ளார்.


மேலும் வீட்டின் உள்ளே அவர் செல்வதையும் வீடியோவாக வெளியிட்டுள்ளார். வீட்டினுள் மொத்தம் மூன்று கதவுகள் உள்ளது. முதல் கதவை திறக்கும் போது ஒரு பெரிய ஹாலில் சோஃபா மற்றும் டேபிள் இருக்கிறது. அடுத்த கதவை திறக்கும் போது பெரிய பெட் ரூம் ஒன்று இருக்கிறது. பின்பு மூன்றாவது கதவை திறக்கும் போது விண்டோ வியூவுடன் அழகிய பாத்ரூம் இருக்கிறது. அந்த விண்டோவை திறந்து சென்று அந்த மாலத்தீவின் அழகை காட்டுகிறார் ஆண்ட்ரியா.


குடும்பத்துடன் மற்றும் உங்கள் துணையுடன் நேரத்தை செலவிட ஒரு நல்ல இடமாக மாலத்தீவு இருக்கும்.

top videos

    குறிப்பு : கொரோனா காலம் என்பதால் சுற்றுலா தளங்களுக்கு செல்வதை தவிர்ப்பது பாதுகாப்பானது.

    First published:

    Tags: Andrea Jeremiah, Maldives