நமக்கு தைப்பொங்கல்... நாட்டின் பிற மாநிலங்களில் உள்ளவர்களுக்கு?

தை முதல் நாளை பொங்கல் பண்டிகையாக நாம் கொண்டாடுகையில் மற்ற மாநிலங்களிலும் வெவ்வேறு பெயர்களில் அந்த நாள் கொண்டாடப்படுகிறது.

Sivaranjani E | news18
Updated: January 9, 2019, 12:20 PM IST
நமக்கு தைப்பொங்கல்... நாட்டின் பிற மாநிலங்களில் உள்ளவர்களுக்கு?
தை முதல் நாளை பொங்கல் பண்டிகையாக நாம் கொண்டாடுகையில் மற்ற மாநிலங்களிலும் வெவ்வேறு பெயர்களில் அந்த நாள் கொண்டாடப்படுகிறது.
Sivaranjani E | news18
Updated: January 9, 2019, 12:20 PM IST
தமிழர்களின் முக்கியத் திருநாளாகக் கொண்டாடப்படுவது தை பொங்கல்.  விவசாயிகள் அறுவடை செய்ததை கடவுளுக்கு வைத்து நன்றி சொல்லும் விதமாக வழிபடுவதையே பொங்கலாகக் கொண்டாடுகிறோம். இதேபோல் இந்தியாவின் மற்ற மாநிலங்களிலும் வெவ்வேறான பெயர்களில் வெவ்வேறு சடங்கு சம்பிரதாயங்களுடன் வழிபடுகின்றனர். அவை எவ்வாறு என்பதைக் கீழேக் காணலாம்.

டெல்லி மற்றும் ஹரியானா

டெல்லி மற்றும் ஹரியானாவில் ’சங்க்ராத்’ அல்லது ’சங்கராந்தி’ என்கிற பெயரில் கொண்டாடுகின்றனர். இது அவர்களுக்கு மிக முக்கியப் பண்டிகை. பண்டிகையில் நெய், அல்வா மற்றும் அரிசி பாயாசம் ஆகியவை முக்கிய உணவாக படைக்கப்படுகிறது.

திருமணமான பெண்கள் தங்கள் வீடுகளுக்குச் சென்று ஆடைகளைப் பரிசாக வழங்குவதைப் பாரம்பரிய வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். பின் தன் கனவனுக்கு பரிசளித்து பிடித்த பாடலைப் பாடி நடனம் ஆடுவதும் இவர்களின் வழக்கம்.

பஞ்சாப்

பஞ்சாப் மாநிலத்தில் ’மாகி’ என்கிற பெயரில் தங்கள் அறுவடை நாளை விமர்சையாகக் கொண்டாடுகின்றனர்.  அதிகாலை ஆற்றில் முங்கிக் குளித்து இறைவனை வழிபடுவதுதான் இவர்களின் முதல் சடங்கு. அடுத்ததாக வீடு முழுவதும் தீப ஒளி ஏற்றி மிளிரச் செய்வார்கள். இவ்வாறு செய்வதால் கெட்டவை விளகி , வாழ்க்கை தீப ஒளி போல் பிரகாசிக்கும் என நம்பப்படுகிறது.

பஞ்சாப்பின் தலைநகரான ஸ்ரீ முக்சர் சாகிப்பில் நடைபெறும் ’மேலா மாகி’ என்கிற பெயரில் பிரமாண்டமாக நடைபெறும். இது சீக்கியர்களின் முக்கிய நிகழ்வாகும். இங்கு போரின் போது இறந்தவர்களை நினைவு கூர்ந்து பாரம்பரிய பாங்க்ரா நடனம் ஆடுவார்கள். பின் அங்கேயே அமர்ந்து உணவு உண்ணுவார்கள். அதில் பால், கரும்புச் சாறு, அரிசி பாயாசம் கட்டாய உணவாக இடம் பெறும்.

ராஜஸ்தான் மற்றும் மேற்கு மத்தியப் பிரதேசம்

இங்கு ’மகார் சங்ராத’ என்கிற பெயரில் பெருநாளை வெகு விமர்சையாகக் கொண்டாடுகின்றனர். பீனி, டில் பாதி, கஜாக், கீர், கேவர், பகோடி,புவா மற்றும் லட்டு என இனிப்பு பலகாரங்கள்தான் படையலுக்கு வைக்கின்றனர்.

அதுதவிர உணவாக ’சங்ராத் போஜ்’ என்கிற உணவும் படையலில் வைக்கின்றனர். திருமணமான பெண்கள் 13 திருமணமான பெண்களுக்கு சுமங்களி பொருட்களை பரிசாக அளிப்பார்கள். பின் தங்களின் அம்மா வீடுகளுக்குச் சென்று பாட்டு நடனம் என மகிழ்ச்சி பொங்க சங்கராத்தியை கொண்டாடுவார்கள்.

அதேபோல் இங்கு முக்கியமாக பட்டம் விடும் நிகழ்ச்சி வெகு விமர்சையாகக் கொண்டாடப்படும். இதில் மற்றவர்களின் பட்டத்தை அறுத்துவிடுவது, உயரே பறக்க விடுவது என போட்டிகள் நிறைந்ததாக இருக்கும்.

அஸ்ஸாம்

’மாக் பிஹு’ அல்லது ’பொகாலி பிஹு’ என்கிற பெயரில் அறுவடை நாளை 14லில் தொடங்கி மாத இறுதி வரைக் கொண்டாடுகின்றனர். அஸ்ஸாமில் மூங்கில் கட்டைகளைக் கொண்டு தற்காலிக சிறிய குடில் கட்டுகின்றனர்.

அதில்  அவர்கள் தங்கள் அறுவடையில் விளைந்த அரிசியில் உணவு சமைத்து விருந்தினர்களை அழைத்து விருந்தளிக்கின்றனர். மறுநாள் காலையில் அந்தக் குடிலை எரித்துவிடுகின்றனர். அந்த சமயத்தில் ’டெகெலி போங்கா’ எனப்படும் பானை உடைக்கும் போட்டி, எருது சண்டை போன்றவை நடத்தப்படுகிறது. இறுதி நாளிலும் விருந்து அளித்து பண்டிகையை கழிக்கின்றனர்.

மஹாராஷ்டிரா

’மகார் சங்ராதி’ என பெருநாளைக் கொண்டாடுகின்றனர். அதிகாலை  நல்லெண்ணெய் தேய்த்து தலைக் குளிப்பதை முக்கிய வழக்காகக் கொண்டிருக்கின்றனர். பின் இனிப்பு பலகாரம் மற்றும் வாழ்த்துகளால் பண்டிகையைக் கொண்டாடுகின்றனர்.

அல்வா, லட்டு, போளி என பல இனிப்பு வகைகளை கடவுளுக்குப் படைக்கின்றனர். பின் உறவினர்களுக்குள் வாழ்த்துக்களைச் சொல்லி பலகாரங்களைப் பரிமாறிக்கொள்கின்றனர்.

கோவா

கோவாவிலும் மஹாராஷ்டிராவைப் போலவே கொண்டாடுகின்றனர். பெண்கள் ’ஹல்தி கும்கும்’ என்கிற பெயரில் சுமங்களிகளுக்கு மஞ்சள் குங்குமம் அளிப்பதை முக்கிய வழக்காகக் கொண்டிருகின்றனர்.

குஜராத்

குஜராத்தில் ’உத்ராயன்’ என தங்களின் அறுவடைக் கொண்டாத்தைக் களிக்கின்றனர். இங்கு பட்டம் விடும் நிகழ்ச்சி உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான திருவிழாவாகும். எங்கும் வண்ணமயமான பட்டங்களைக் காணலாம். வானில் 1000த்திற்கும் மேற்பட்ட பட்டங்களை ஒன்று சேரக் காண முடியும். அந்த சமயத்தில் வெளிநாட்டினரும் குஜராத் சென்று பட்டம் விடுவார்கள். பட்டத்தை உயரே பறக்க விடுவது, மற்றவர்களின் பட்டத்தை அறுப்பது என போட்டிகளுக்கும் பஞ்சமிருக்காது. காய்கறிகள் நிறைந்த உணவுகள், பலகாரங்கள் படையலுக்கு வைக்கப்படுகிறது.

ஹிமாச்சலப் பிரதேசம்

இங்கு ’மஹா சாஜி’ என்கிற பெயரில் பொங்கலைக் கொண்டாடுகின்றனர். இங்கு சூரிய பகவான் தங்கள் ராசி நட்சத்திரத்தில் பல நல்ல மாற்றங்களை நிகழ்த்தக் கூடும் என நம்புகின்றனர்.

மேலும் ஹிமாச்சலத்திலிருந்து இடம்பெயர்ந்த பறவைகள்  மீண்டும் தன் கூட்டை அடைகின்றன.பறவைகளின் வருகையை நல்ல சகுனமாகக் கருதுகின்றனர்.  படையலில் இனிப்புக் கிச்சடி செய்வது முக்கிய உணவாகும். பின் உறவினர்கள், நண்பர்களுடன் பாட்டு நடனம் என நாளைக் கழிக்கின்றனர்.  உத்திரகாண்டிலும்  தங்கள் அறுவடையை ஹிமாச்சலம் போன்றே  கொண்டாடுகின்றனர்.

உத்திரப் பிரதேசம்

இங்கு  ’கிச்செரி’ என்கிற பெயரில் பெருநாளைக் கொண்டாடுகின்றனர். அலகாபாத், வாரணாசி, ஹரித்வார் என பரவும் கங்கை நதியில் நூற்றுக்கணக்கான மக்கள் ஒன்று சேர முங்கிக் குளிப்பார்கள். இவ்வாறு செய்வதால் தங்களின் பாவங்கள் , துயரங்கள் நீங்கி நன்மை நடக்கும் என நம்புகின்றனர்.

பின் காலை விரதம் இருந்து பின் இனிப்பைப் பரிமாறிக் கொள்கின்றனர்.  முக்கிய பலகாரமாக லட்டுவை படையலுக்கு வைக்கின்றனர். இங்கும் பட்டம் விடும் போட்டியே முக்கிய நிகழ்வாக இருக்கிறது.

ஒடிசா

ஒடிசாவில் ’மகர சாலா’ என்கிற பெயரில் அறுவடை செய்த நெல், வாழை, தேங்காய், வெல்லம், எள், பருப்பு உருண்டை ஆகியவற்றை கடவுளுக்கு வைத்து வழிபாடு செய்கின்றனர். முக்கியக் கடவுளாக சூரியனை வழிபடுகின்றனர்.

தை மாதத்திலிருந்து சூரியனின் மறைவு நீண்ட நேரம் இருக்கும் என்பதாலும் அதனை வரவேற்று அந்த மாதம் முழுவதும் சூரியனை வழிபடுவார்கள். அவ்வாறு செய்வதால் சூரிய ஒளி போல் தங்கள் வாழ்கையும் பிரகாசிக்கும் என நம்புகின்றனர்.

பிஹார் மற்றும் ஜார்கண்ட்

இங்கு ’சக்ராத்’ அல்லது ’கிச்டி’ என்கிற பெயரில் பொங்கலைக் கொண்டாடுகின்றனர். சூரிய உதயத்திற்கு முன்னரே குளித்துவிட்டு கடவுளுக்கு  உணவு மற்றும்  பலகாரங்கள் படைப்பது  இறுதியாக மாலை பட்டம் விடுவது பாட்டு நடனம் என பொழுதைக் கழிக்கின்றனர்.

அன்றைக்கு மட்டும் பெண்கள் குழுவாக சேர்ந்து சமைத்து உண்ணுகின்றனர். தயிர், பூசணிக்காய் முக்கிய உணவுப் பொருளாக இடம் பெறுகின்றன.

கர்நாடகா

கர்நாடகாவில் ’சுகி’ பண்டிகை ஜனவரி 14 நாளில் விவசாயிகளால் கொண்டாடப்படுகிறது. அன்றைய நாளில் உறவினர்களுக்குள் ஒரு தட்டு பரிமாறிக் கொள்கின்றனர். அதில் எள், மஞ்சள் குங்குமம், முந்திரி, பாதாம், தேங்காய், வெல்லம் ஆகியவை அந்த தட்டில் இருக்கின்றன.

அதேபோல் கரும்பு முக்கிய இடம் பிடிக்கிறது. அந்த தட்டை பரிசாக அளிக்கும் போது ’எல்லு பெல்லா திண்டு ஒல்லே மாதடி’ என்கிற வாக்கியத்தை சொல்கின்றனர். அதற்கு அர்த்தம் எள்ளு வெல்லம் கலந்து அந்த உணவை உண்டு நல்லதை மட்டுமே பேசு என்று அர்த்தமாம். ஏறு தழுவும் மாடுகளைக் கழுவி அதற்கு பொட்டு வைத்து வழிபடுவதையும் முக்கியமாக செய்கின்றனர்.

கேரளா

மகர விளக்குப் பூஜையை ஒட்டி இந்நிகழ்வு நடைபெறும். இதனால் மகர ஜோதி தெரிவது முக்கிய நிகழ்வாகக் கொண்டாடப்படுகிறது. அன்றைய நாளில் வீடு முழுவதும் விளக்கு ஏற்றி பலகாரங்கள் செய்து கடவுளை வழிபடுகின்றனர்.

ஆந்திரா

ஆந்திராவிலும் தமிழ்நாட்டைப் போன்றே சடங்குகள் இருக்கின்றன. அன்று திருப்பதியில் வெகு விமர்சையான பூஜைகள் நடெபெறும் அதனால் அன்று வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். மற்ற மாநிலங்களைப் போன்றே பட்டம் விடுதல், கோழி சண்டை, காளைச் சண்டை போன்ற போட்டிகள் நடைபெறும்.

Also See..

First published: January 9, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...