முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / நீர் வீழ்ச்சி, படகு சவாரி, அருவி என தண்ணீர் காதலர்களுக்கான சூப்பர் ஸ்பாட்... பெடகாட் பற்றி தெரியுமா..?

நீர் வீழ்ச்சி, படகு சவாரி, அருவி என தண்ணீர் காதலர்களுக்கான சூப்பர் ஸ்பாட்... பெடகாட் பற்றி தெரியுமா..?

பெடகாட்

பெடகாட்

யுனெஸ்கோவின் பாரம்பரிய பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள பெடகாட், வரலாற்று மற்றும் சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்தது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Madhya Pradesh |

நீர்வீழ்ச்சி, படகு சவாரி , மலை, கோவில் என்று பல அற்புதங்களை ஒரே இடத்தில் பார்க்க முடியுமா என்று கேட்டால் முடியும். நாட்டின் மத்தியில் அமைந்துள்ள மத்திய பிரதேசம் இயற்கை அழகும், கட்டிட கலைகளும் ஒருங்கே கூடி அழகு சேர்க்கும் இடம். அங்குள்ள தனித்துவமான பேடாகாட் நகரத்தை பற்றி தான் பார்க்க போகிறோம்.

இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தின் ஜபல்பூர் மாவட்டத்தில் உள்ள யுனெஸ்கோவின் பாரம்பரிய பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள பெடகாட், வரலாற்று மற்றும் சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த இடத்தின் சிறப்பே இங்குள்ள மார்பில் பாறைகள் தான். அதற்கு சுவாரசிய வரலாறும் சொல்லப்படுகிறது.

இதையும் படிங்க: சென்னையில் சூரிய அஸ்தமனத்தின் அழகை காண இத்தனை இடங்கள் இருக்கா..? ஒரு முறையேனும் பாத்துட்டு வாங்க..!

பெடகாட்டின் வரலாறு 180-250 மில்லியன் ஆண்டுகள் பழமையானது என நம்பப்படுகிறது. பேதகாட்டின் பெயரைப் பற்றி பல கதைகள் உள்ளன. அதில் ஒன்று, பண்டைய காலத்தில் பிருகு ரிஷி என்ற முனிவரின் ஆசிரமம் இந்த இடத்தில் இருந்தது. அதன் நினைவாக ரிஷியின் பெயர் நிலைத்து விட்டதாக கூறுகின்றனர்.

இங்கு புனித பவாங்கங்கா என்ற நதி நர்மதை நதியுடன் சங்கமிக்கும் இடம் ஒன்று உள்ளது. அதை பந்தர் குடானி என்று அழைக்கின்றனர். அதேபோல் ஒரு காலத்தில் இந்த நதி ஓடுவதற்கு இருபுறமும் ஒருங்கு மலைகள் அருகருகே இருந்ததாக கூறப்படுகிறது. எவ்வளவு அருகில் என்றால், இந்த பகுதியில் உள்ள குரங்குகள் ஒரு மலையில் இருந்து மற்றொரு மலைக்கு ஒரே பாய்ச்சலில் தாவுமாம்.

ஆனால் பின்னர் ஆற்று நீரால் அரிப்பு ஏற்பட்டு இந்த இரண்டு மலைகளுக்கு இடையே பெரிய இடைவெளி உண்டாகியுள்ளது. இந்த இரண்டு மலைகளுக்கு இடையே ஆறு ஓடும் காட்சி பார்ப்பதற்கு ரம்யமாக இருக்கும். இந்த இடத்தில் நவம்பர் முதல் மே வரை நிறைந்து வழியும் நீரில் படகு சவாரியும் செய்யலாம்.

இந்த உயரமான பளிங்கு பாறைகள், வெவ்வேறு வண்ணங்களையும், விலங்குகள் மற்றும் பிற உயிரினங்களின் வடிவங்களையும் கொண்டிருக்கும். இந்த பாறைகளின் இடையே நிலவொளி இரவுகளில். ரோப்வே சவாரி செய்யலாம். வித்தியாசமான சாகச முயற்சியாக இருக்கும்.

துவாந்தர் நீர்வீழ்ச்சி

இப்படி இருபுறமும் 100 அடி உயரமுள்ள பளிங்குப் பாறைகள் பாறைகள் வழியாக மெதுவாக பாயும் நர்மதை நதி சிறிது தூரத்திற்குப் பிறகு, ஒரு குன்றின் கீழே விழுந்து துவாந்தர் நீர்வீழ்ச்சியை உருவாக்குகிறது. குன்றின் மேல் இருந்து நீர் அதிக சக்தியுடன் விழுவதால், இந்த நீர்வீழ்ச்சிக்கு இந்த பெயர் வந்தது.

நர்மதை திருவிழா:

இயற்கையின் இந்த அழகிய படைப்பை ரசிக்கும் வகையில் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் பெடகாட் பகுதியில் நர்மதை நதி கரை ஓரம் 'சரத் பூர்ணிமா' எனப்படும் நர்மதை திருவிழா நடத்தப்படுகிறது. இந்த பிரமாண்ட நிகழ்வில் பாலிவுட் பிரபலங்களின் நடனம், நாடகம் மற்றும் இசை நிகழ்ச்சிகள் நடக்கும்

எப்படி அடைவது?

விமானப் பயணிகள் விமானத்தில் ஜபல்பூர் விமான நிலையத்திற்கு (34.1 கி.மீ.) செல்லலாம், பின்னர் டாக்ஸி மூலம் பெடகாட்டை அடையலாம். ரயிலில் பயணம் செய்தால், பெடகாட்டில் இருந்து 20.8 கிமீ தொலைவில் உள்ள ஜபல்பூர் ரயில் நிலையத்தில் இறங்கவும். சாலைப் பயணம் செய்பவர்கள் ரஞ்சி பேருந்து நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து தனியார் வாகனம் அல்லது பேருந்து மூலம் பெடகாட்டை அடையாளம்.

First published:

Tags: Madhya pradesh, Travel