பொதுவாக கிராமங்களில் உள்ள பெரியவர்கள் ஓய்வாக இருக்கும் பொது ஆடு புலி ஆட்டம், சீட்டுக்கட்டு , கேரம் போர்டு கூட விளையாடி பார்த்திருப்போம். விடலை பசங்க சேர்ந்தால் கபடி, கிரிக்கெட் விளையாடி பார்த்திருப்போம். ஆனால் இந்தியாவில் உள்ள ஒரு கிராமத்தில் அனைவருமே சதுரங்கம் எனப்படும் செஸ் விளையாடுகிறார்கள்.
கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமம் தான் மரோட்டிச்சல். இது சதுரங்க திறமைகளின் மையமாக அங்கீகாரம் பெற்றுள்ளது. சுமார் 5,000 மக்கள்தொகையுடன், மரோட்டிச்சல் பல தேசிய மற்றும் சர்வதேச செஸ் சாம்பியன்களை உருவாக்கியுள்ளது, இது "சதுரங்க கிராமம்" என்ற புனைப்பெயரைப் பெற்றது.
இதன் தொடக்கம் எல்லாம் 1990 களைக் காட்டுகிறது. அந்த சமயத்தில் ஒரு சில உள்ளூர் ஆர்வலர்கள் சதுரங்கப் போட்டிகளை ஏற்பாடு செய்து கிராமத்தில் உள்ள குழந்தைகளுக்கு விளையாட்டைக் கற்பிக்கத் தொடங்கியுள்ளனர். ஒன்று இரண்டாகி, இரண்டு நான்காகி இன்று முழு கிராமமே சதுரங்க விளையாட்டுக்கு அடிமை ஆகி விட்டது.
காலப்போக்கில், விளையாட்டின் புகழ் கிராமத்திற்குள் வளர்ந்தது. கிராமத்திற்குள்ளேயே அதிக அளவிலான போட்டிகளை நடத்தத் தொடங்கினர். இன்று, கிராமத்தில் பல சதுரங்க கிளப்புகள் மற்றும் செழிப்பான சதுரங்க சமூகம் உருவாகி உள்ளது, எல்லா வயதினரும் தங்கள் சதுரங்க திறமைகளை வெளிப்படுத்த துடிப்புடன் பங்கேற்று வருகின்றனர். அடுத்தடுத்த சந்ததிகளும் அதில் சிறந்து விளங்க வேண்டும் என்று குழந்தைகளையும் ஊக்குவித்து வருகின்றனர்.
அதுமட்டும் இல்லாமல் சிலர் சதுரங்க அரங்குகள் அமைப்பதற்காக நிலத்தை நன்கொடையாக வழங்கியுள்ளனர். ஆண்டுதோறும் செஸ் போட்டிகளுக்கும் நிதி உதவி வழங்கி வருகின்றனர். இதனால் மரோட்டீச்சல் கிராமத்தில் இருந்து பல திறமையான வீரர்களையும் பயிற்சியாளர்களையும் உருவாக்க முடிந்துள்ளது. இவர்கள் உள்ளூர் வீரர்களின் திறமைகளை மேம்படுத்த உதவியது மட்டுமல்லாமல், மற்ற இடங்களை சேர்ந்த ஆர்வமுள்ள செஸ் வீரர்களை ஊக்குவிப்பதில் முக்கிய பங்கு வகித்துள்ளனர்.
சில பயிற்சியாளர்கள் தேசிய மற்றும் சர்வதேச சாம்பியன்களை உருவாக்கி, சதுரங்க மையமாக கிராமத்தின் நற்பெயரை மேலும் உயர்த்தியுள்ளனர். அனைத்து செஸ் விளையாட்டு நிலைகளிலும் இந்த கிராமத்தை சேர்ந்த நபர்கள் பங்கேற்று வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தாஜ்மஹால் முதல் லடாக் வரை.. ஆப்டிகல் இல்யூஷனாக காட்சியளிக்கும் இந்த இடங்களை பற்றி தெரியுமா..?
மரோட்டிச்சலின் சதுரங்கக் காட்சியின் வெற்றி உள்ளூர் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கிராமத்தில் நடத்தப்படும் சதுரங்கப் போட்டிகள் நாடு முழுவதிலுமிருந்து வீரர்களை ஈர்க்கின்றன, இது உள்ளூர் சுற்றுலாத் துறைக்கு ஊக்கமளிக்கிறது. மேலும், செஸ் போட்டிகளானது , பயிற்சியாளர்கள் மற்றும் துணை ஊழியர்கள் உட்பட பல நபர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.