மதுரை என்றதுமே மீனாட்சி தான் நினைவுக்கு வருவார். மீனாட்சி அம்மன் கோவில், நாயக்கர் மஹால், அழகர் கோவில், திருப்பரங்குன்றம் , பழமுதிர்ச்சோலை என்று ரெகுலர் லிஸ்ட் அல்லாமல் மதுரையில் இருக்கும் பட்ஜெட் ட்ரெக்கிங் கலந்த ஆன்மிகப் பயணத் திட்டம் தருகிறோம்.
ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் இருந்து தேனிக்கு செல்லும் பேருந்து அல்லது உசிலம்பட்டி செல்லும் பேருந்தில் தான் நம் பயணம் தொடங்க இருக்கிறது. பாண்டியர் ஆண்ட மதுரை சைவ சமயத்திற்கு மட்டுமல்லாது சமண சமயத்திற்கும் அடைக்கலம் கொடுத்தது. மதுரையை சுற்றி எண்ணற்ற சமண படுகைகள், சிற்பங்கள் உள்ளன.
சமணர்களை பொறுத்தவரை நகரங்களைச் சுற்றி அமைந்துள்ள மலைப்பகுதிகளில் தங்குவர். அந்த மலைகளைக் குடைந்து குகைகள் அமைத்து வாழ்வர். கற்பாறைகளில் படுக்கை அமைத்து உறங்குவர். அவர்களின் குறிப்புகள் பாறைகளில் கீறல்களாக இருக்கும்.
கீழக்குயில்குடி- சமணர் மலை
காளவாசல் பேருந்து நிறுத்தத்தில் இருந்து நேரே தேனி வழியில் 11 கிலோமீட்டர் பயணித்தால், கீழக்குயில்குடி என்ற நிறுத்தம் வரும். அதில் இறங்கி தெற்கு நோக்கி நடந்தால் ஒரு 2 கிலோமீட்டரில் சமணர் மலை வரும். ஆட்டோக்களும் கிடைக்கும்.
மலைக்கு முன்னால் அல்லி,தாமரை நிறைந்த ஒரு தெப்பம் இருக்கும் அதில் கால் நனைத்துவிட்டு பயணத்தைத் தொடங்கலாம். ஆழம் இருக்கும் பார்த்து கால் நனையுங்கள். கீழே ஒரு இந்து கோவில் இருக்கும். வணங்கிவிட்டு மேலே ஏற தொடங்கலாம்.
கொஞ்சம் செங்குத்தான மலை என்றாலும் படிகள் அமைப்பு ஏற உதவியாக இருக்கும். பாதி மலையில் பேச்சிப்பள்ளம் என்று சொல்லுமிடத்தில் கி மு 1 ஆம் நூற்றாண்டை சேர்ந்த சமண தீர்த்தங்கரர்கள் சிலை, 10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவட்டெழுத்துக்களால் இருக்கும்.
இதையும் படிங்க..
மகாவீரரின் முழுச் சிற்பம், தமிழிக் கல்வெட்டு- கீழக்குயில்குடி சமணர் மலையின் சிறப்புகள் தெரியுமா?
அதை தாண்டி மேலே போகும் பொழுது நடுவில் புல்வெளிக்கு இடையில் ஒரு ஒற்றை மரம் இருக்கும். அதைக் கடந்து சென்றால் மலையின் உச்சியை அடைவோம். அருகில் உள்ள பெருமாள் மலை, நாகமலை, முதலியவற்றின் இடையே அமைந்துள்ள கிராமங்களின் அழகிய காட்சியை காணலாம். மலை உச்சியில் இரு விளக்கு ஏந்திய தூண் நின்று கொண்டிருக்கும்.
மலையைவிட்டு இறங்கி வந்தால் மலையின் பின்னால் செட்டிப்பொடவு எனும் இடம். ஒரு படிக்கட்டு வழி ஏறினால் அங்கே ஒரு மகாவீரரின் தியான நிலை சிற்பம், அருகில் ஒரு குகை அமைந்திருக்கும். அதன் விட்டத்தில் சமணர்கள் சிலைகள், தீர்த்தங்கரர் சிலைகள் அமைந்திருக்கும். அங்கேயும் கன்னடம் கலந்த தமிழ் பிராமி எழுத்துகளைக் காணலாம். அதோடு சமண கற்படுகைகள் காணப்படும்.
அங்கிருந்து ஊருக்குள் அந்த மீண்டும் தேனி நோக்கி சென்றால் அடுத்த நிறுத்தம் மதுரை காமராசர் பல்கலைக்கழகம். பல்கலைக்கழகத்தின் எதிரே ஒரு சாலை செல்லும். கிராமத்தின் சந்துகள் வழியாக சென்றால் அங்கே ஒரு கற்குவாரி தெரியும். அதன் பின்னால் தான்
பெருமாள் மலை.
இதையும் படிங்க...
பிரெஞ்சு காலனி பாண்டிச்சேரிக்கு 1 நாள் பயணத் திட்டம் இதோ..!
திகம்பர சமணர்களின் நினைவுச் சின்னமாக உள்ளது. மஹாவீரர், மற்றும் சமணர்களின் தவநிலை காணப்படும். சமணர் மலை போல் அல்லது எளிமையாக ஏறும் மலைதான். 2 குகைகள், வட்டெழுத்துக்கள், சமண படுக்கைகள் எல்லாம் அமைந்திருக்கும். இதுவும் 2000 ஆண்டுகள் பழமையானதே.
தியான நிலையில் இருக்கும் சமணர் சிலைகள் காணப்படும். மனிதர்களால் அதிகமாக சேதப்படுத்தகப்பட்டுள்ள நிலையில் உள்ளது. தலைக்கு உயரமாக, உடம்புக்கு சமமான அமைப்பபோடு படுகைகள் அமைக்கப்பட்டிருக்கும். மலைக்கு அருகில் ஒரு சிறிய குட்டை இருக்கும். யாரேனும் உள்ளூர் ஆட்களோடு போவது நல்லது. தனித்து செல்லவேண்டாம்.
அடுத்து
நாகமலை.
பல்கலைகழகத்தின் வழியாகவும், நாகமலை புதுக்கோட்டை வழியாகவும் ஏறலாம். நீண்ட மலைத்தொடராகத்தான் இருக்கும். பெயருக்கு ஏற்றார் போல் நாகங்களின் நடமாட்டம் உண்டு. பாதையை கவனித்து போகவேண்டும்.
பல்கலைக்கழக வளாகத்திற்கு உள்ளேயே தமிழ் பிராமி கல்வெட்டுகள் காணப்படும். மலை ஏறும் பொழுது ஆங்காங்கே சிறிய படுகைகள் காணப்படும். நீண்ட மலை என்பதால் மேலே ஏறி உயரத்திலேயே நீண்ட தூரம் நடந்துகொண்டே ஊரின் எழிலை ரசிக்கலாம். உயரமான பாறைகள் பல நின்றுகொண்டு இருக்கும் அதில் ஏறியும் ஊரை பார்க்கலாம். காளான் போன்ற அமைப்பில் உள்ள பாறையை அங்கே காணலாம். நண்பர்களோடு மலை ஏறி பயணம் செய்ய ஏற்ற இடமாக இருக்கும் .சூரியன் உதித்த பிறகு செல்லுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.