ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

வேலு நாச்சியாரின் சிவகங்கை சீமை அரண்மனைக்கு ஒரு ட்ரிப்!

வேலு நாச்சியாரின் சிவகங்கை சீமை அரண்மனைக்கு ஒரு ட்ரிப்!

சிவகங்கை கோட்டை

சிவகங்கை கோட்டை

வலிமைமிக்க மறவ மன்னர்களின் ஆட்சி இடமாக இருந்து ராணி வேலு நாச்சியார், ராணி வெள்ளச்சி நாச்சியார், ராணி காத்தம நாச்சியார் போன்ற ராணிகளின் வசிப்பிடமாக இருந்தது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Sivaganga |

சிவகங்கை சீமை என்றாலே வீரம் செழித்த ஊர் என்றே சொல்லலாம். இன்னைக்கு எதோ பெண் சுதந்திரம், உயர்பதவியில் பெண்கள் என்று பேசிக்கொண்டிருக்கும்போது 18 ஆம் நூற்றாண்டில் முழு நேர வீரமிக்க அரசியாக ஆட்சி செய்தவர் வேலு நாச்சியார். அப்படிப்பட்ட வீர மண்ணை ஒரு ட்ரிப் அடித்து பார்க்க வேண்டாமா?

மதுரையிலிருந்து 40 கி.மீ தொலைவில் சிவகங்கையின் மையப்பகுதியில் அமைந்துள்ள "கௌரி விலாசம்" என்று அழைக்கப்படும் அரண்மனை பல மறவ மன்னர்களின் இருப்பிடமாக ஒரு காலத்தில் இருந்தது. திருமலை நாயக்கர் காலத்து கட்டிடக்கலை பாணியில் ராஜபுதன கலைகள் உட்செலுத்தப்பட்டு கட்டப்பட்ட இது தனி அழகோடு நிற்கிறது.

கடந்த 273 ஆண்டுகளாக நடந்த போர்களின் கதைகளை கூறும் அரண்மனை, தமிழ்நாட்டின் புகழ்பெற்ற பாரம்பரிய தளங்களில் ஒன்றான சிவகங்கை அரண்மனை ஆகும். 1730 இல் சசிவர்ணத்தேவர் கட்டிய இந்த இடம் ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய கட்டபொம்மன் மற்றும் மருது சகோதரர்கள்  ரகசியமாக கூடும் இடமாக இருந்துள்ளது.

இதையும் படிங்க : சென்னை அருகே இத்தனை அழகான தீவுகள் இருக்கா... இது தெரியாம போச்சே...!

வலிமைமிக்க மறவ மன்னர்களின் ஆட்சி இடமாக இருந்து ராணி வேலு நாச்சியார், ராணி வெள்ளச்சி நாச்சியார், ராணி காத்தம நாச்சியார் போன்ற ராணிகளின் வசிப்பிடமாக இருந்தது.

18 ஆம் நூற்றாண்டில் கம்பீரமான கோட்டை இருந்த இடம் இடிக்கப்பட்டு இன்று நாம் பார்க்கும் 19 ஆம் நூற்றாண்டில் படமாத்தூர் கௌரி வல்லப தேவர் கட்டிய மாளிகையாக மாறியுள்ளது.

இந்த அரண்மனை ராஜா துரைசிங் தேவர் (1898-1941) காலத்தில் "துரதிர்ஷ்டம்" என்று காரணம் காட்டி புறக்கணிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதன் பின்னர் மதுரை சாலையில் உள்ள "ஐரோப்பிய பங்களா" என்று அழைக்கப்படும் மற்றொரு அரண்மனைக்கு மாறிவிட்டார்களாம். அரண்மனையின் புறக்கணிப்பு உள்ளூர் வாசிகள் மற்றும் ஆங்கிலேயர்களின் சூரையாடலுக்கு வலி வகுத்தது.

ஆனால் மிக மோசமான சேதம் மறைந்த விஜயராகவன் கார்த்திக் என்பவர் காலத்தில் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அவர் பெரும்பாலான சொத்துக்கள், பழங்கால பொருட்கள் மற்றும் மர வேலைப்பாடுகளை விற்று விட்டார். இப்போது, ​​அரண்மனையின் பாழடைந்த பகுதிகள் மட்டுமே எஞ்சியுள்ளன.

சிவகங்கை அரண்மனை நுழைந்ததும் வேலு நாச்சியாரின் சிலையைக்காணலாம். அதன் அருகில் ஒரு நடைக்கிணறு இருக்கும். அரசிகள் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. அதன் அருகில் எண்ணற்ற தூண்களை தாங்கிய பிரமாண்டமான மண்டபம், ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி கோவில், கொண்ட இந்த அரண்மனையில் அரச குடும்பத்தின் அனைத்து செயல்பாடுகளும் நடந்ததாக கூறப்படுகிறது. ஆனால் தற்போது மண்டபம் பூட்டியே கிடக்கிறது. அரண்மனையின் முகப்பில் பாழடைந்த நிலையில் ஒரு பல்லக்கு மட்டும் உள்ளது.

இந்த அரண்மனைக்கு காலை 10 மணி முதல் 5 மணி வரை பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவர். ஞாயிறு விடுமுறை. அதனால் மற்ற நாட்களில் திட்டமிட்டுக்கொள்ளுங்கள்.

First published:

Tags: Sivagangai, Tourism, Trip