Home /News /lifestyle /

9 நாடுகளில் இலவசப் பொதுப்போக்குவரத்து.. எங்கெல்லாம் தெரியுமா ?

9 நாடுகளில் இலவசப் பொதுப்போக்குவரத்து.. எங்கெல்லாம் தெரியுமா ?

9 பிரசித்தி பெற்ற நகரங்கள்

9 பிரசித்தி பெற்ற நகரங்கள்

மான்ட்ரியல் தெற்கு கடற்கரை பகுதியில் உள்ள சாம்ப்ளி என்ற புறநகர் பகுதி மற்றும் அதைச்சார்ந்த நகராட்சிகளிலும் 2012 ஆம் ஆண்டு முதல் நகரவாசிகளுக்கு பொதுப் போக்குவரத்தை இலவசமாக வழங்கப்படுகிறது.

எல்லா நாடுகளிலும் ரயில், பேருந்துகள் என்று பொதுப் போக்குவரத்து வசதி இருந்தாலும் எல்லா இடங்களிலும் கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. ஆனால், ஒரு சில நகரங்களில் பொது போக்குவரத்தை பயன்படுத்துபவர்களுக்கு எந்த கட்டணமும் இல்லை. உலகம் முழுவதும் 9 நாடுகளில் பொதுமக்கள், பொதுப்போக்குவரத்தை இலவசமாகப் பயன்படுத்தலாம்.

சாம்ப்ளி, கனடா



மான்ட்ரியல் தெற்கு கடற்கரை பகுதியில் உள்ள சாம்ப்ளி என்ற புறநகர் பகுதி மற்றும் அதைச்சார்ந்த நகராட்சிகளிலும் 2012 ஆம் ஆண்டு முதல் நகரவாசிகளுக்கு பொதுப் போக்குவரத்தை இலவசமாக வழங்கப்படுகிறது. பொதுப் போக்குவரத்து இலவசம் என்று அறிவிக்கப்பட்ட காலத்திலிருந்து, போக்குவரத்து நெரிசல் குறைந்தது மட்டுமல்லாமல், காற்று மாசுபாடும் குறைந்துள்ளது என்பதை குறிப்பிடத்தக்கது.

லக்சம்பர்க்



உலகத்தின் பல்வேறு நகரங்கள், நகர வாசிகளுக்கு இலவச பொதுப் போக்குவரத்தை பல ஆண்டுகளுக்கு முன்னரே வழங்கியிருந்தாலும், பிப்ரவரி 29, 2020 முதல், லக்சம்பர்க் இந்தச் சேவையைத் தொடங்கியுள்ளது. நாட்டின் சுற்று சூழல் பாதிப்பு தான் இலவச பொதுப் போக்குவரத்தைத் தொடங்குவதற்கான காரணமாக அமைந்துள்ளது என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

தாலின், எஸ்தோனியா



எஸ்டோனியா நாட்டில் உள்ள தாலின் கடந்த 2013 ஆம் ஆண்டு முதலே பொதுப் போக்குவரத்தை இலவசமாக வழங்கி வருகிறது. இந்த சேவை மிகப்பெரிய அளவில் வரவேற்பையும் வெற்றியையும் பெற்றதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. நகரத்தில் வசிப்பவர்களுக்கு மட்டுமே இந்த சேவை என்று அறிவிக்கப்பட்டிருந்தது. பலரும் நாட்டின் ரெசிடென்ட்டாக பதிவு செய்யத் தொடங்கினார். இதனால், உள்ளூர் வரிகளில் சுமார் 38 மில்லியன் யூரோக்கள் கூடுதலாக ஈட்டப்பட்டது.

அவெஸ்டா, ஸ்வீடன்



அவெஸ்டா நகரத்தில் கடந்த எட்டு ஆண்டுகளாக பொதுப் போக்குவரத்து இலவசமாக பயன்படுத்துகிறது. காற்று மாசு பாட்டை கட்டுப்படுத்தவும், பசுமையான சுற்றுசூழலை மேம்படுத்தவும் இலவச பொதுப் போக்குவரத்து சேவையை தொடங்குவதாகக் கூறப்பட்டது. மேலும், போக்குவரத்து சேவை இலவசம் என்று அறிவிக்கப்பட்ட பிறகு, பேருந்து பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 200 சதவீதம் அதிகரித்துள்ளன.

டியூஸ்பரி, யுகே



FreeTownBus என்ற இலவசப் போக்குவரத்து 2009 ஆம் ஆண்டு முதல் டியூஸ்பரி வாசிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இது நகரத்தின் முக்கிய இடங்களில் நிறுத்தப்படும் இலவசப் பேருந்து சேவையைக் குறிக்கிறது.

பெர்த், ஆஸ்திரேலியா



 

 

ஆஸ்திரேலியாவின் பல்வேறு நகரங்கள் மிகவும் காஸ்ட்லியான நகரங்கள் என்று கூறப்படும். ஆனால், பெர்த் நகரின் முக்கிய இலக்குகளில் ஒன்று, அனைவருக்கும் பொது போக்குவரத்தை இலவசமாக வழங்குவதாகும். ஆனால், பெர்த் வழங்கும் இலவச போக்குவரத்து, குறிப்பிட்ட மண்டலத்துக்குள் மட்டுமே கிடைக்கிறது. எனவே, மண்டங்களுக்குள் மட்டும் இலவசமாக பயணிக்க முடியும்.

கிளெம்சன், அமெரிக்கா



தென் கரோலினா போக்குவரத்துறையின் கீழ் வரும் கிளெம்சன் நகருக்கு, போக்குவரத்துத் துறை, மத்திய அரசு, கிளெம்சன் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல நகரங்கள் இலவச பேருந்து சேவையை வழங்கியுள்ளது. கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாக இலவச போக்குவரத்து வழங்கபப்ட்டு வருகிறது.

சமொகோவ், பல்கேரியா



 

பல நகரங்கள் சுற்றுசூழல் காரணமாக பொதுப் போக்குவரத்தை இலவசமாக வழங்கினாலும், பல்கேரியா நாட்டில் உள்ள சமொகோவ் நகரம் மாணவர்கள் மற்றும்முதியவர்களின் வசதிக்காக, 2006 ஆம் ஆண்டு இலவச போக்குவரத்து சேவையைத் தொடங்கியது. சில வருடங்களிலேயே, இலவச சேவை அனைத்து நகர வாசிகளுக்கும் அளிக்கப்பட்டது.

மேரிஹான், ஃபின்லாந்து



ஆலந்து தலைநகரமான மேரிஹான், ஃபின்லாந்து குடியரசுக்கு சொந்தமான ஒரு தீவு நகரமாகும். இந்த தீவில் வசிப்பவர்கள் மற்றும் சுற்றுலாவாசிகளுக்கு இலவச போக்குவரத்து, Röde Orm என்ற நிறுவனத்தின் மூலம் 2000 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Public Transport, Transport

அடுத்த செய்தி