டீ உற்பத்தியில் பெயர்போன பங்களாதேஷில், ஒரே கப்பில் 7 வகையான சுவைகளை உள்ளடக்கிய டீ சுற்றுளாவாசிகளிடையே பிரபலமாகி வருகிறது.
பல நூற்றாண்டுகளுக்கு முன் டீ தயாரிப்பதில் முன்னோடியாக இருந்த ரோமெஷ் ராம் கவுர் (romesh ram gour) என்பவர்தான் இந்த டீயை தயாரித்துள்ளார். பங்களாதேஷின் மவுலிபஸார் மாவட்டத்தைச் சேர்ந்த ரோமெஷ் 7 வண்ணங்களில் 7 சுவைகளில் இந்த டீயை அறிமுகப்படுத்தியுள்ளார்.
தாகாவிலிருந்து 200 கி.மீ உள்ளே சென்றால் ஸ்ரீமோங்கொல் (srimongol) டவுனில்தான் இந்த டீ கடை இருக்கிறது. டீ தயாரிப்பில் இந்த கிராமம் மிகவும் பிரசித்தி பெற்றது. வெளிநாட்டினர் பலரும் இந்த கிராமத்திற்குச் சென்று டீ அருந்தாமல் வர மாட்டார்கள்.
இதுவரை கவுர் யாருக்கும் தன்னுடைய டீ லேயர் ரகசியத்தை வெளிப்படுத்தியதில்லை. கவுரைத் தொடர்ந்து அவரைப் போலவே பலரும் அந்த கிராமத்தில் இந்த 7 லேயர்கள் கொண்ட டீயை தயாரித்து விற்பனைச் செய்கின்றனர். அவர்களும் தங்கள் வியாபாரத்தில் நல்ல லாபத்தைப் பெற்றுள்ளனர். இருப்பினும் கவுரின் டீ சுவைதான் தனித்துவமாக இருக்கும் என பலரும் பேசுகின்றனர்.
சாய்ஃபுல் இஸ்லாம் (saiful islam) என்கிற டீ விற்பனையாளரும் இந்த 7 லேயர் டீயை விற்பனை செய்து நல்ல லாபம் பெற்று வருகிறார். இவர் பங்களாதேஷின் தலைநகரான தக்காவில் (dhaka) டீ கடை வைத்திருக்கிறார். மற்றவர்களைக் காட்டிலும் இவரின் கடையில் விற்கப்படும் டீ ரோமெஷின் டீ சுவையின் சாயலை கொண்டிருக்கிறது என பலரும் பேசுகின்றனர்.வெளிநாட்டினர் பலரும் இந்த டீயை சுவைக்கவே வருகின்றனராம்.
ஆனால் இஸ்லாமும் கவுரைப் போலவே தன் ரகசியத்தை வெளியிடத் தயங்குகிறார்.
பிளாக் டீ, கிரீன் டீ, லெமன் டீ, மசாலா பால் என அந்த லேயர் ஒவ்வொன்றும் ஒவ்வொறு சுவையைக் கொண்டிருக்கின்றன. அதேபோல் ஏலக்காய், இஞ்சி, கிராம்பு போன்ற உடலுக்கு நன்மை நன்மை தரக் கூடிய மூலிகைப் பொருட்களும் சேர்க்கப்படுகின்றன.
இங்கு டீ அருந்த வரும் ஒவ்வொருவரும் அடுத்த லேயரில் என்ன சுவை இருக்கும் என்ற எதிர்பார்பிலேயே ஒவ்வொரு சிப்பையும் சுவைக்கின்றனர்.
நீங்களும் டீ பிரியர் என்றால் உடனே பங்களாதேஷ் செல்லுங்கள். டீ சுவையின் அனுபவத்தைப் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.