Home /News /lifestyle /

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலை பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் இங்கே!

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலை பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் இங்கே!

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில்

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில்

நாட்டில் உள்ள 12 ஜோதிர் லிங்க தலங்களில் தமிழகத்தை சேர்ந்த ஒரே தலம் ராமநாத சுவாமி கோயிலாகும். பலருக்கும் தெரியாத ஒரு தகவல் என்னவென்றால் ராமநாதசுவாமி கோயிலில் 2 லிங்கங்கள் உள்ளன.

    இந்துக்களின் புனித தலங்களில் மிக முக்கியமான தலமாக இருக்கிறது ராமேஸ்வரம். ராமாயணப்படி ராமன் இலங்கைக்கு சென்று ராவணனை கொன்று விட்டு சீதையை மீட்டு வந்ததை நாம் அறிவோம். ராவணனை கொன்ற பாவத்தை (பிரம்மஹத்தி தோஷம்) போக்கி கொள்ள சிவலிங்கத்தை நிறுவி ராமர் வழிபட்ட இடத்தை தான் தற்போது ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலாக பக்தர்கள் வழிபட்டு வருகிறார்கள். நாட்டில் உள்ள 12 ஜோதிர் லிங்க தலங்களில் தமிழகத்தை சேர்ந்த ஒரே தலம் ராமநாத சுவாமி கோயிலாகும். இந்திய தீபகற்பத்தின் முனையில் அமைந்துள்ள இந்த நகரம் மன்னார் வளைகுடாவில் இலங்கைக்கு அருகே அமைந்துள்ளது. கோடைகாலம் என்பதால் பலரும் சுற்றுலா செல்ல திட்டமிட்டு வருவீர்கள். இந்நிலையில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் பற்றிய சில சுவாரசியமான தகவல்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்..

    சிவ லிங்கம்:

    ராமர் விஷ்ணுவின் அவதாரம் ஆவார். அவர் சிவபெருமானை தனது குரு அல்லது ஆசிரியராக கருதினார். ராமர் பிராமணனான ராவணனை கொன்றதால் பிரம்மஹத்தி தோஷத்தை பெற்றார். எனவே தன் தோஷத்தை கழிக்க ஒரு சிவ லிங்கத்தை நிறுவினார். இது கோவிலுக்குள் நிறுவப்பட்டுள்ளது மற்றும் இந்து மதத்தைப் பின்பற்றுபவர்களுக்கான மிக முக்கியமான யாத்திரை மையங்களில் ஒன்றாகும்.

    இரண்டு லிங்கங்கள்:

    பலருக்கு தெரியாத ஒரு தகவல் என்னவென்றால் ராமநாதசுவாமி கோயிலில் 2 லிங்கங்கள் உள்ளன. ஒன்று விஸ்வலிங்கம் மற்றும் ராமலிங்கம். ராமலிங்கம் சீதா தேவியால் கட்டப்பட்டது. விஸ்வலிங்கம் ஹனுமானால் கைலாசத்தில் இருந்து இங்கு கொண்டுவரப்பட்டது.

    புனித யாத்திரை தலம்:

    இந்துக்களின் முக்கியமான 4 புனித யாத்திரைகளில் ராமேஸ்வரமும் ஒன்றாக இருக்கிறது. மற்றவை கேதார்நாத் & பத்ரிநாத், கங்கோத்ரி & யம்னோத்ரி, துவாரகா.



    பல புனித ஆலயங்களின் உறைவிடம்:

    இந்த கோயிலில் சிவலிங்கங்கள் மட்டுமின்றி பல தெய்வங்களின் உறைவிடமாகவும் உள்ளது. ராமநாதசுவாமி சன்னதி, கருப்பு கிரானைட் கற்களால் கட்டப்பட்டு உள்ளது. மேற்கூரை கோபுரத்தில் தங்க பூச்சு பூசப்பட்டு உள்ளது. சேதுமாதவன், விசாலாக்ஷி, மகாகணபதி, சந்தானகணபதி, நடராஜர், பர்வதவர்த்தினி, ஆஞ்சநேயர், ராமநாதசுவாமி, சுப்ரமணியர் மற்றும் மகாலட்சுமி உள்ளிட்ட சன்னதிகள் இந்த கோயிலில் உள்ளன.



    இந்த திருக்கோயில் ராமேஸ்வரத்தில் சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. ராமநாத சுவாமி கோயில் 1212 தூண்களை கொண்டுள்ளது. தவிர உலகிலேயே மிக நீளமான பிரகாரம் என்ற பெருமையைப் பெற்ற ராமநாதசுவாமி கோயில் நடைபாதை பிரகாரம் வடக்கு மற்றும் தெற்கில் 640 அடி, மேற்கு மற்றும் கிழக்கில் 400 அடி கொண்டது.

    20-க்கும் மேற்பட்ட தீர்த்தங்கள்:

    மகாலட்சுமி தீர்த்தம், சாவித்திரி தீர்த்தம், காயத்ரி தீர்த்தம், சரஸ்வதி தீர்த்தம், சங்கு தீர்த்தம், சக்கர தீர்த்தம், சேது மாதவ தீர்த்தம், நள தீர்த்தம், நீல தீர்த்தம், கவய தீர்த்தம், கவாட்ச தீர்த்தம் ,கந்தமாதன தீர்த்தம், பிரம்மஹத்தி விமோசன தீர்த்தம். கங்கா தீர்த்தம், யமுனை தீர்த்தம், கயா தீர்த்தம், சர்வ தீர்த்தம், சிவ தீர்த்தம், சத்யாமிர்த தீர்த்தம், சந்திர தீர்த்தம், சூரிய தீர்த்தம், கோடி தீர்த்தம் உள்ளிட்ட தீர்த்தங்கள் உள்ளன. கடலில் நீராடி, பின்னர் 22 கிணறுகளில் நீராடி, தெய்வத்தின் முன் செல்ல வேண்டும்.

    ஜோதிர்லிங்கங்கள்..

    இந்து புராண படி சிவபெருமான் ஜோதியாக வெளிப்பட்டுக் காட்சியளித்த லிங்கங்கள் ஜோதிர்லிங்கங்கள் என்று கூறப்படுகின்றன. இந்த 12-ல் ஒரு ஜோதிர்லிங்கம் ராமநாதசுவாமி கோயிலின் வளாகத்தில் உள்ளது. மத நம்பிக்கைகளின்படி, 12 ஜோதிர்லிங்கங்களையும் தரிசித்து பிரார்த்தனை செய்பவர் சொர்க்கம் அல்லது மோட்சத்தை அடைவார்.
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Rameshwaram

    அடுத்த செய்தி