14,000 அடி உயரத்தில் குளு குளு ஐஸ் கஃபே... பனிக்கட்டிகள் சூழ சூடாக டீ அருந்தலாம்..!

இதுதான் லடாக்கில் உள்ள மிகப்பெரிய ரெஸ்டாரண்ட் என்கிற பெயரையும் கொண்டுள்ளது.

news18
Updated: May 10, 2019, 10:26 AM IST
14,000 அடி உயரத்தில் குளு குளு ஐஸ் கஃபே... பனிக்கட்டிகள் சூழ சூடாக டீ அருந்தலாம்..!
லடாக் ஐஸ் கஃபே
news18
Updated: May 10, 2019, 10:26 AM IST
பனிசூழ் மலைகளுக்கு நடுவே ஜில் காற்று... எங்கும் வெள்ளை மழை... உங்கள் கையில் மட்டும் சூடான கப் காஃபி... ப்பா...! இந்த அனுபவத்தை வாழ்க்கையில் ஒருமுறையாவது அனுபவிக்க வேண்டும் என்கிற ஆசை அனைவருக்குமே இருக்கும். அப்படி இருந்தால் யோசிக்காமல் உடனே விரையுங்கள் லடாக் ஐஸ் கஃபே.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் லடாக் பகுதியில் உள்ள லெ மனல் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஒரு சிறு கிராமம்தான் கையா மீரு.
அது முற்றிலும் மலைகள் நிறைந்த பகுதி தற்போது அங்கு நடுங்க வைக்கும் குளிர் பருவம் என்பதால் சுற்றுலா விரும்பிகள் லடாக்கை விசிட் செய்து வருகின்றனர்.பொதுவாக பயண விரும்பிகள் வெயில் காலம் வந்துவிட்டாலே ஜில்லெனக் குளிரும் மலைப்பிரதேசங்களை நோக்கி ரெய்ட் சென்றுவிடுவார்கள். அவர்களை மனதில் வைத்தே இந்த லடாக் ஐஸ் கஃபே உருவாக்கப்பட்டுள்ளது, முற்றிலும் பனிக்கட்டிகளால் 14,000 அடி உயரத்தில் இந்த ரெஸ்டாரண்ட் கட்டப்பட்டுள்ளது. இதுதான் லடாக்கில் உள்ள மிகப்பெரிய ரெஸ்டாரண்ட் என்கிற பெயரும் கொண்டுள்ளது.

Loading...அதேபகுதியைச் சேர்ந்த ஜிக்மெட் டண்டப், நவாங் பன்சோக் மற்றும் சோனம் சோஸ்டப் ஆகிய மூன்று இளைஞர்கள்தான் இந்த ரெஸ்டாரண்டை கட்டியுள்ளனர்.ஏதேனும் புதுமையாக ரெஸ்டாரண்ட் உருவாக்க வேண்டும் என்ற ஆசைதான் இந்த மெய்சிலிர்க்க வைக்கும் ரெஸ்டாரண்ட் உருவாக்க காரணம். இங்கு சூடான மசாலா டீ, இஞ்சி டீ, ஏலக்காய் டீ, லெமன் டீ மற்றும் காஃபி, சூப் மற்றும் நூடுல்ஸ் போன்றவை மெனுவில் இடம்பெற்றுள்ளன.

இந்த வாய்ப்பைத் தவர விடாதீர்கள் ...

இதையும் படிக்க :

உருளைக் கிழங்கு தோற்றத்தில் லக்ஸுரியான ஹோட்டல் : ஒரு இரவு தங்க ரூ.18 ஆயிரம்

கடலுக்கு அடியில் ஓர் உணவகம்... கண்கவர் புகைப்படங்கள்

இரவு வெறும் வயிற்றில் தூங்கினால் என்ன ஆகும் தெரியுமா?
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: May 10, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...