டாய்லெட்டாக மாறிய எவரெஸ்ட் சிகரம்: 13 டன் குப்பைகள், 8000 கிலோ மனிதக் கழிவுகள் நீக்கம்!

மலைச் சரிவுகளுக்குக் கீழ் வாழும் மக்கள் மனித மலம் கலக்கப்பட்ட நீரை குடிக்கின்றனர்.

Web Desk | news18
Updated: June 26, 2019, 3:39 PM IST
டாய்லெட்டாக மாறிய எவரெஸ்ட் சிகரம்: 13 டன் குப்பைகள், 8000 கிலோ மனிதக் கழிவுகள் நீக்கம்!
எவரெஸ்ட் மலை சிகரம்
Web Desk | news18
Updated: June 26, 2019, 3:39 PM IST
உலகின் உயரமான சிகரம் எவரெஸ்ட். இதையும் விட்டுவைக்கவில்லை இந்த மனிதன். ஒவ்வொரு வருடமும் வசந்த காலத்தையொட்டி மார்ச் மற்றும் ஜூன் மாதங்களில் நூற்றுக்கணக்கான மலை ஏறுபவர்கள் மலை உச்சியை அடையச் செல்வார்கள்.

இந்த வருடத்திற்கான மலையேறும் பருவம் நிறைவடைந்ததையொட்டி நேபாள அரசு தன்னுடைய குழுக்களை வைத்து எவரெஸ்ட் சிகரத்தைச் சுத்தம்செய்ய அனுப்பி வைத்துள்ளது. அங்கு 13 டன் குப்பைகள் மற்று 8000 கிலோ மனிதக் கழிவுகளைச் சுத்தம் செய்துள்ளது அந்தக் குழு. அதுவும் இரண்டு மாதம் மலையேறும் பருவத்தில் நடைபெற்ற தீவிர பராமரிப்பில் 1 டன் குப்பைகளையும் நான்கு மனித சடலங்களையும் அப்புறப்படுத்தியுள்ளனர்.

மலை ஏறும் குழுக்கள் இளைப்பாறத் தங்குவதற்கு வசதியாக ஆங்காங்கே குடில் அமைத்துக்கொள்வார்கள். அப்படி அவர்கள் தங்கிச் சென்ற இடங்களில் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், பிளாஸ்டிக் பாட்டில்கள், உணவுக் கழிவுகள்,பொட்டலங்கள், கேன்ஸ், கயிறுகள், பிளாஸ்டிக் கவர்கள் , மலை ஏற பயன்படுத்தும் கருவிகளை எடுத்துச் செல்ல முடியாமல் அப்படியே விட்டுச் செல்லுதல் என இப்படியாகப் பல கழிவுகளை அப்புறப்படுத்தியுள்ளனர்.
அதுமட்டுமின்றி தி அசோசியேட்டட் பிரெஸ் வெளியிட்டுள்ள அறிக்கைப் படி, மலை ஏறும் குழுக்கள் கட்டப்படும் குடில்களை அப்படியே விட்டுச் செல்வதாகவும், அப்படி கிட்டத்தட்ட 30 டன் குடில்கள் காற்றால் அடித்து வீசப்பட்டுக் குவிந்து கிடந்தன என்று கூறியுள்ளது. சில குடில்கள் பனிச் சரிவுகளுக்கு இடையில் சொருகப்பட்டு அவற்றைத் தோண்டி எடுத்தது மிகப்பெரிய சவாலாக இருந்தது என்று சுத்தம் செய்த பணியாளர்கள் கூறியுள்ளனர்.

இதில் என்ன ஒரு கொடுமையான விஷயமென்றால் மலை ஏறும் மக்கள் தங்கள் கழிவுகளை வெளியேற்ற அமைக்கப்பட்டிருக்கும் தற்காலிகக் கழிவறைகளைப் பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்கின்றனர். அதற்குப் பதிலாகப் பனியிலேயே குழி தோண்டி அதில் மலம் கழித்துவிட்டு அதன் மேல் பனியைக் கொட்டி மூடிவிடுகின்றனர். இந்தப் பனிகள் கரைந்து வழிந்தோடும்போது மலமும் அதோடு கலந்து வழிந்தோடுகிறது. மலைச் சரிவுகளுக்குக் கீழ் வாழும் மக்கள் இந்த வழிந்தோடும் நீரைத்தான் தங்களுடைய வாழ்வாதாரத்திற்குப் பயன்படுத்துகின்றனர். இதனால் அந்த மலம் கலக்கப்பட்ட தண்ணீரைப் பயன்படுத்தும் மக்களுக்குப் பல நோய்கள் ஏற்படுகின்றன.

Loading...இதுபோன்ற சுற்றுச்சூழல் அசுத்தங்கள் ஒவ்வொரு வசந்த காலம் அதாவது மார்ச் மற்றும் ஜூன் இறுதி வரை வரும் மலை ஏறும் குழுக்களால் நிகழ்கின்றன என்றும்; இந்த அசுத்தத்திற்கு இதுவரை எந்தவிதக் கட்டுப்பாடுகளும் விதிக்கவில்லை என ஆங் டோர்ஜி, AP நியூஸ் குழுவிடம் கூறியுள்ளார். இவர் சுயாதீன எவரெஸ்ட் மாசுக் கட்டுப்பாட்டுக் குழுவின் (independent Everest Pollution Control Committee) தலைவராக இருக்கிறார்.

நேபாள அரசிடம் சில விதிமுறைகளை அமல்படுத்துமாறு கேட்கப்பட்டுள்ளது. அதாவது குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டும் மக்களை ஒவ்வொரு வருடமும் அனுமதிக்க வேண்டும். சில பொருட்களை எடுத்துச்செல்லத் தடைவிதிக்க வேண்டும் என்று விதிமுறைகள் அளிக்க வேண்டும் என்று கேட்கப்பட்டுள்ளது. PTI வெளியிட்ட அறிக்கைப்படி எவரெஸ்ட் சிகரத்தை அடைய ஒரு நபருக்கு 7,62,484 ரூபாய் செலவாகிறது. இந்த எவெரெஸ்ட் சிகரத்தை அடைவதற்கான பாதை மார்ச் 14-ம் தேதி திறக்கப்படும்.கடந்த மாதம் வெளியான 'எவரஸ் சிகரத்தில் கூட்ட நெரிசல்’ என்னும் தலைப்பில் வெளியான புகைப்படம் ஒன்று வைரலாகப் பரவியது. அந்தப் புகைப்படத்தில் காட்டப்பட்டது என்னவெனில், கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் 220 பேர் மலை உச்சியில் நின்று கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் அடுத்தடுத்த குழுக்கள் செல்ல பல மணி நேரம் காத்திருந்து சென்றனர். இதனால் உச்சியில் ஆக்ஸிஜன் அளவு குறைவாக இருந்ததால், இந்த சீசனில் 16 பேர் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: June 25, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...