ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு சமயத்தில் பலர் சுற்றுலா செல்வதுண்டு. சிலர் அவரவர் ஊருக்குள் இருக்கும் இடங்களை சுற்றி பார்ப்பார்கள். சிலர் தங்களது பைக் அல்லது கார்களை எடுத்துக்கொண்டு வேறு மாநிலங்களுக்கு செல்ல நினைப்பார்கள். அந்த வகையில் இந்தியாவில் சுற்றுலா செல்வதற்கு ஏற்ற சிறந்த 10 சாலை பயண இடங்கள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
பூரியில் இருந்து கோனார்க் வழி: கோனார்க்கில் உள்ள சூரிய கோவிலை பார்க்க செல்பவர்கள் பலர் இருப்பார்கள். இதை காண பூரி-கோனார்க் தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்றால் ஒடிசாவின் இயற்கை அழகை காணும் பாக்கியம் கிடைக்கும். மேலும் இந்த சாலையானது கடற்கரையை ஒட்டிய படி செல்லும். எனவே மிக அற்புதமான வியூவை நீங்கள் பெறலாம். மும்பை-பூனே வழியை விட இந்த வழியை பயன்படுத்தி விரைவில் சென்றடைய முடியும்.
மும்பையில் இருந்து கோவா வழி: அடிக்கடி சுற்றுலா செல்லும் பலருக்கும் மும்பையில் இருந்து கோவா செல்லும் சாலை வழியானது மிகவும் பிடிக்கும். குறிப்பாக நீங்கள் கோவா செல்ல விரும்பினால் இந்த வழியை தேர்ந்தெடுங்கள். இந்த சாலை வழியில் சென்றால் மேற்கு தொடர்ச்சி மலையின் அழகியலை பார்த்து ரசிக்கும் வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும். கோவாவை சென்றடைய 2 வழிகள் உண்டு. ஒன்று பூனே-கோல்காபூர் NH4 நெடுஞ்சாலை வழி; இதை பயன்படுத்தி கோவா சென்றடைய 10 மணி நேரம் ஆகும். இன்னொன்று சிப்லுன்-ரத்னகிரி NH66 வழி; இந்த சாலையானது மிக சவாலாக இருக்கும். இதில் 12 மணி நேரத்தில் கோவா செல்லலாம்.
மும்பையில் இருந்து பூனே வழி: மும்பை-பூனே நெடுஞ்சாலை வழி மிக பிரபலமானது. இதில் பயணம் செய்தால் நிச்சயம் உங்களுக்கு உற்சாகமாக இருக்கும். மும்பை வாசிகள் பலர் விடுமுறைகளில் இந்த சாலையில் எப்போதும் பயணம் செய்வதுண்டு. இந்த பயணத்தின் சிறப்பம்சம் இகத்புரி-நாசிக் பெல்ட், அதன் இயற்கை அழகுடன் உங்களை வரவேற்கும்.
சென்னையில் இருந்து பாண்டிச்சேரி: கடற்கரை சாலையில் சிறப்பான பயணம் ஒன்றை மேற்கொள்ள சென்னையில் இருந்து பாண்டிச்சேரி கடற்கரை சாலை வழி சிறந்த தேர்வு. வெறும் 3-4 மணி நேர பயணம் தான். ஆனால் உங்களுக்கு ஏற்ற தரமான பயண அனுபவத்தை இது தரும். மேலும் இந்த சாலை வழியாக சென்றால் மகாபலிபுரத்த்தில் உள்ள இடங்களையும் பார்த்து விடலாம்.
குவாஹாட்டியில் இருந்து தவாங் வழி: வடகிழக்கு இந்தியாவில் உள்ள சாலை வழிகளில் இது மிகவும் விரும்பப்படும் சாலை வழி பயணமாகும். இதில் பயணம் செய்ய 14 மணி நேரம் எடுக்கும். இது சவாலான சாலை வழியாக இருந்தாலும் இயற்கை காட்சிகள் மிக அற்புதமாக இருக்கும். இது ஒரு நீண்ட சாலைப் பயணம் என்பதால், மேற்கு கமெங்கில் உள்ள திராங்கில் சிறிது நேரம் ஓய்வெடுத்து விட்டு, நிங்மாபா மடாலயத்தில் புத்த கலாச்சாரத்தை நீங்கள் பார்க்கலாம் அல்லது அசாமில் உள்ள தேஸ்பூரில் நின்று அதன் வரலாற்று இடங்களை காணலாம்.
அகமதாபாத்தில் இருந்து கட்ச் வழி: இந்த சாலை பயணமானது 7 மணி நேர எடுக்கும். இதற்கிடையில் பல்வேறு இயற்கை எழில்கொண்ட இடங்களை நீங்கள் காணலாம். அந்த இடங்களில் நின்று உங்களுக்கு தேவையான புகைப்படங்களை எடுத்துக்கொள்ளுங்கள். குஜராத்தின் கலாச்சாரத்தை அறிய, உணவு வகைகளை சுவைக்க இந்த சாலை வழி பயணமானது மிக சிறந்தது.
டார்ஜிலிங்கில் இருந்து பெல்லிங் வழி: மிக பெரிய மலைகள், தேயிலை தோட்டங்கள், அழகிய நிலப்பரப்புகள் போன்றவற்றை இந்த சாலை வழி பயணத்தில் நீங்கள் பார்க்கலாம். 72 கிலோ மீட்டர் கொண்ட இந்த சாலை வழியை கடக்க 4 மணி நேரம் ஆகும். ஓய்வு எடுப்பதற்கு இடையில் தேயிலை தோட்டங்களின் அருகில் உள்ள கடைகளில் நிறுத்தி சூடான டீயை குடிக்கலாம்.
கொல்கத்தாவில் இருந்து திகா வழி: கொல்கத்தாவிற்கு அருகில் உள்ளோருக்கு இந்த ட்ரிப் நிச்சயம் வசதியாக இருக்கும். 172 கிலோ மீட்டர் உள்ள இயற்கை எழில் கொண்ட இந்த நிலப்பரப்பில் மகிழ்ச்சியாக பயணம் செய்யலாம். மேலும் NH116B மற்றும் NH16 நெடுஞ்சாலை வழியாக சென்றால் 4 மணி நேரத்தில் பயண இலக்கை அடைந்திடலாம்.
பெங்களூரில் இருந்து ஊட்டி வழி: இயற்கை அன்னையின் அற்புத படைப்புகளை காண வேண்டுமென்றால் இது ஒரு சிறந்த சாலை பயணமாக இருக்கும். எங்கு பார்த்தாலும் பச்சைபசேல் என்று இருக்கும். இந்த வழியில் பல தேயிலை தோட்டங்களையும் நீங்கள் காணலாம். அத்துடன் பல்வேறு சிறப்பான வியூவ்களை இங்கு பார்க்க முடியும். 6 மணி நேரத்தில் இந்த வழியை பயன்படுத்தி ஊட்டி செல்லலாம்.
top videos
தங்க முக்கோணம் (டெல்லி-ஆக்ரா-ஜெய்ப்பூர்): இந்திய வரலாற்றையும் கலாச்சாரத்தையும் சாலை வழி பயணம் மூலம் அறிய டெல்லி-ஆக்ரா-ஜெய்ப்பூர் வழி NH8 நெடுஞ்சாலை பயணம் தான் சரியான தேர்வு. இடை இடையே பல்வேறு தாபாக்கள், சிறந்த சிற்றுண்டிகளை வாங்கி உண்ணவும் இது சிறந்த சாலை வழி. இந்த சாலை பயணத்தை 7 மணி நேரத்தில் அடைந்து விடலாம்.
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.