குழந்தைகளின் சிறப்பான மூளை வளர்ச்சி மற்றும் நினைவாற்றலுக்கு உதவும் உணவுகள்!

மாதிரி படம்

உடலில் இருக்கும் அனைத்து உறுப்புகளை இயக்குவது மூளை தான். எனவே மூளை ஆரோக்கியமாக செயல்பட, சில முக்கிய ஊட்டச்சத்துக்கள் அவசியம்.

  • Share this:
நம் உடலில் இருக்கும் உறுப்புகளிலேயே அதிக அளவு ஆக்ஸிஜன் தேவைப்படுவது மூளைக்கு தான். தேவையான உணவு மற்றும் சத்துக்களை நாம் சரியாக உட்கொள்ளாத போது, மூளைக்கு கிடைக்க வேண்டிய ஆக்ஸிஜனின் அளவு குறைகிறது. இதனால் குழப்பம், ஞாபகமறதி உள்ளிட்ட மூளை தொடர்பான பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது. சுருக்கமாக சொன்னால் மூளை பலமாக இருந்தால் உடலும் பலமாக இருக்கும்.

உடலில் இருக்கும் அனைத்து உறுப்புகளை இயக்குவது மூளை தான். எனவே மூளை ஆரோக்கியமாக செயல்பட, சில முக்கிய ஊட்டச்சத்துக்கள் அவசியம். சரியான உணவை எடுத்து கொள்வது நம் நினைவாற்றல் செறிவு மற்றும் மூளையின் செயல்பாட்டை மேம்படுத்த உதவும். உடலின் மற்ற பகுதிகளைப் போலவே தான் மூளை. நாம் உண்ணும் உணவில் இருந்து அதற்கு தேவையான ஊட்டச்சத்துக்களை எடுத்து கொள்ளும். எனவே குழந்தைகளின் மூளை வளர்ச்சி மற்றும் திறனை மேம்படுத்த அதிக சத்தான உணவுகளை அவர்களுக்கு கொடுப்பது மிகவும் முக்கியம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

முட்டை:

கார்போஹைட்ரேட்டுகள், புரதம் மற்றும் கொஞ்சம் ஆரோக்கியமான கொழுப்பு உள்ளிட்ட கலவையுடன் கூடிய காலை உணவை குழந்தைகளுக்கு கொடுத்தால் அது அவர்களை அன்றைய நாள் முழுவதும் ஆற்றலுடன் வைத்து இருக்க உதவும். அந்த வகையில் காலை அவர்கள் சாப்பிட முட்டை கொடுத்து வரலாம். முட்டைகளில் அதிக புரதம் உள்ளது மற்றும் இதில் கூடுதலாக choline உள்ளது. இது நினைவாற்றலுக்கு உதவுகிறது.

எண்ணெய் மீன் (Oily fish):

எண்ணெய் மீன்களில் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் இருக்கிறது மற்றும் மூளை வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்திற்கு நன்மை அளிக்க கூடியது. சால்மன், கானாங்கெளுத்தி, டுனா, ஹெர்ரிங் போன்ற மீன் வகைகளில் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் இருப்பதால் வாரத்திற்கு ஒரு முறை குழந்தைகளுக்கு கொடுத்து வரலாம்.

ஓட்ஸ் / ஓட்மீல்:

ஓட்ஸ் / ஓட்மீல் மூளைக்கு தேவையான சிறப்பான ஆற்றலை தர கூடியது. இவற்றில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இவற்றால் சாப்பிடுவதால் குழந்தைகளுக்கு நன்றாக சாப்பிட திருப்தி ஏற்படும். இதனால் தேவையற்ற ஸ்னாக்ஸ்கள் மற்றும் ஜங்க் ஃபுட்களை அவர்கள் எடுத்து கொள்வதை தடுக்கிறது. இதில் வைட்டமின்கள் ஈ, பி காம்ப்ளக்ஸ் மற்றும் ஜிங்க் உள்ளிட்டவை அதிகம் உள்ளன. மேலும் இவை குழந்தைகளின் மூளை சிறப்பாக செயல்பட உதவுகின்றன.

வண்ணமயமான காய்கறிகள்:

ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் இருப்பதால் வண்ண காய்கறிகள் மூளை செல்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. தக்காளி, இனிப்பு உருளைக்கிழங்கு, பூசணி, கேரட்,கீரை உள்ளிட்டவை குழந்தைகளின் உணவில் சேர்க்க வேண்டிய சில முக்கிய காய்கறிகள்.

Also read... டயட்டில் முட்டை சேர்த்துக்கொள்வது நல்லதா? மருத்துவ ஆய்வின் முடிவுகள் என்ன?

பால், தயிர் மற்றும் சீஸ்:

பால், தயிர் மற்றும் சீஸ் இவற்றில் புரதம் மற்றும் பி வைட்டமின்கள் அதிகம் உள்ளன. இந்த உணவு பொருட்களை குழந்தைகளின் டயட்டில் சேர்ப்பதால் அவர்களின் மூளை திசு, நரம்பியக்கடத்திகள் மற்றும் என்சைம்களின் வளர்ச்சி அதிகரிக்கும். இந்த பால் உணவுகளில் இருக்கும் அதிக கால்சியம் வலுவான மற்றும் ஆரோக்கியமான பற்கள் மற்றும் எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது. குழந்தைகளின் கால்சியம் தேவைகள் அவர்களின் வயதைப் பொறுத்து மாறுபடும் என்றாலும் நாள்தோறும் தவறாமல் இரண்டு முதல் மூன்று கால்சியம் நிறைந்த மூலங்களை உட்கொள்வது அவசியம்.

பீன்ஸ்

புரதம், வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் சிறந்த ஆதாரமாக பீன்ஸ் உள்ளது. கிட்னி மற்றும் பிண்டோ பீன்ஸ் ஆகியவை வேறு எந்த பீன்களையும் விட ஒமேகா 3 ஐ அதிகம் கொண்டுள்ளன. எனவே வாரத்தில் குறைந்தபட்சம் ஒருமுறையாவது குழந்தைகளின் உணவில் பீன்ஸ் சேர்ப்பது அவசியம்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: