முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / ஓரியண்ட் எக்ஸ்பிரஸ் முதல் பேலஸ் ஆன் வீல்ஸ் வரை: உலகின் சொகுசு ரயில் பயணங்கள்!

ஓரியண்ட் எக்ஸ்பிரஸ் முதல் பேலஸ் ஆன் வீல்ஸ் வரை: உலகின் சொகுசு ரயில் பயணங்கள்!

சொகுசு ரயில் பயணங்கள்

சொகுசு ரயில் பயணங்கள்

உலகில் உள்ள மிக பிரம்மாண்டமான சொகுசு பயண ரயில்கள், அவற்றின் வரலாறு மற்றும் தகவல்களை பற்றி தெர்ந்துக்கொள்வோம்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

குழந்தைப் பருவத்தில் விடுமுறை என்றால் குடும்பத்துடன் ரயிலில் பயணம் செய்ய வேண்டும் என்கிற ஆசை எல்லோருக்கும் இருக்கும். ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குச் செல்வதற்கான எளிய மற்றும் வசதியான வழி, ரயில் பயணங்கள் தான். அதே போன்று ஜன்னல் வழியாக நிலப்பரப்புகளை மகிழ்வாகப் பார்த்து வருவதும் அற்புதமான ஒரு உணர்வைத் தரும். மேலும் ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் பல்வேறு விற்பனையாளர்கள் மற்றும் விதவிதமான சத்தங்கள் காதுகளில் ஒலித்தாலும், ரயில் பயணங்கள் மிகவும் வசதியாகவும் நிதானமாகவும் இருக்கும். ஆனால் உலகெங்கிலும் உள்ள சில ரயில் பயணங்கள் நாம் நினைப்பதைக் காட்டிலும் மிகவும் பிரம்மாண்டமான ஆடம்பர சேவைகள் வழங்கக் கூடியவையாக இருக்கின்றன.

இப்படிப்பட்ட சொகுசு இரயில் பயணங்கள் பற்றி இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

ஓரியண்ட் எக்ஸ்பிரஸ்:

ஓரியண்ட் எக்ஸ்பிரஸ்

அக்டோபர் 4, 1883-இல் அறிமுகமானதிலிருந்து சொகுசுப் பயணத்தின் வரலாற்றை மாற்றியது இந்த ரயில் தான். பெல்ஜிய பொறியாளர் ஜார்ஜஸ் நாகல்மேக்கர்ஸ் என்பவர், அமெரிக்காவில் உலகின் முதல் உறங்கும் வாகனங்களைக் கொண்ட இரயில் பாதைகளை வடிவமைத்து அசத்தினார். இந்த ரயிலின் பெயரைப் பிரபல த்ரில்லர் கதைக்கள எழுத்தாளர் அகதா கிறிஸ்டி தனது மர்டர் ஆன் தி ஓரியண்ட் எக்ஸ்பிரஸ் நாவலிலும் பயன்படுத்தியுள்ளார். இந்த தலைசிறந்த படைப்பு ஆர்ட் டெகோ பாணியில் வடிவமைக்கப்பட்டது. இந்த ரயிலானது, பாரிஸ் மிலன் மற்றும் வெனிஸ் வழியாக இஸ்தான்புல்லுக்கு செல்கிறது. மே 20, 1977 அன்று, இந்த ரயில் தனது கடைசி பயணத்தை மேற்கொண்டது.

பேலஸ் ஆன் வீல்ஸ்:

பேலஸ் ஆன் வீல்ஸ்

பேலஸ் ஆன் வீல்ஸ் ரயிலானது ராஜஸ்தான் மற்றும் ஆக்ராவின் நிலப்பரப்பு வழியாக ராஜ வசதி கொண்ட, ஆடம்பரமான பயணத்திற்கு அழைத்துச் செல்கிறது. இந்த வரலாற்று நகரங்களின் கலாச்சார நுணுக்கங்களை அனுபவிக்க இந்த ரயில் பயணம் உதவுகிறது. இவை இணைக்கப்பட்ட குளியலறைகள் கொண்ட விசாலமான டீலக்ஸ் கேபின்கள் கொண்டவை. மேலும், உங்களுடைய சொந்த பட்லர், இரண்டு உணவகங்கள், ஒரு லவுஞ்ச் பார் மற்றும் ஸ்பா ஆகியவை இவற்றில் உள்ளது.

ரோவோஸ் ரயில்:

ரோவோஸ் ரயில்

ரோவோஸ் ரெயில் ஆப்பிரிக்கக் கண்டத்தில் உள்ள மிகவும் மாறுபட்ட ரயிலாகும். 1989-இல் நிறுவப்பட்ட இந்த ரயில் அதன் உலகத் தரம் வாய்ந்த பயண அனுபவத்திற்காகச் சர்வதேச நற்பெயரைப் பெற்றுள்ளது. இந்த ரயிலில் பழங்கால மரத்தால் செய்யப்பட்ட பெட்டிகள் உள்ளன. இதன் பயணமானது 2 முதல் 15 நாட்கள் வரை நீடிக்கும். இந்த ரயில் பயணிகளுக்கு மிகச்சிறந்த தென்னாப்பிரிக்க ஒயின்கள் சிலவற்றுடன் சிறந்த உணவு வகைகளை வழங்குகிறது. ஆப்பிரிக்க ஆய்வுப் பயணம் விக்டோரியா நீர்வீழ்ச்சி, எட்டோஷா தேசிய பூங்கா மற்றும் இந்த கண்டத்தின் சின்னமான வனவிலங்குகளுக்குப் பிரபலமான பல்வேறு இடங்கள் வழியாக இது பயணம் செய்கிறது.

கோல்டன் ஈகிள்-டிரான்ஸ் சைபீரியன் எக்ஸ்பிரஸ்:

கோல்டன் ஈகிள்-டிரான்ஸ் சைபீரியன் எக்ஸ்பிரஸ்

ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக பழமையான கோல்டன் ஈகிள்-டிரான்ஸ் சைபீரியன் எக்ஸ்பிரஸ் ரஷ்யாவில் மாஸ்கோ மற்றும் விளாடிவோஸ்டாக் இடையே கிழக்கு நோக்கி, மேற்கு நோக்கி, பாம் மற்றும் யாகுட்ஸ்க் வழியாக மூன்று வழிதடங்களை கொண்டு பயணம் செய்கிறது. இதன் வழியில், வரலாற்று நகரமான இர்குட்ஸ்க் மற்றும் உலகின் மிகப்பெரிய நன்னீர் ஏரியான பைக்கால் ஏரியை பார்க்கலாம்.

Also Read : ஆணிகள் கூட இல்லாத தனித்துவமாக மரத்தால் மட்டுமே ஆன சரணாலயம் - படங்கள் இதோ

தி கான்:

தி கான்

ஆஸ்திரேலியா சிவப்பு மையம் வழியாக டார்வினிலிருந்து அடிலெய்டுக்கு நான்கு நாள் பயணத்தில் பயணிகளை உற்சாகமாக தி கான் ரயில் பயணம் அழைத்துச் செல்கிறது. 1924 ஆம் ஆண்டு முதல் இயக்கப்படும் இந்த ரயில் நவீன பயணத் தேவைகளுக்கு ஏற்ப சரியான நேரத்தில் புதுப்பிக்கப்பட்டது. இதன் பயணத்தில் கூபர் பெடியின் ஓபல் சுரங்க நகரமான ஆலிஸ் ஸ்பிரிங்ஸ் வழியாகவும் செல்கிறது. மேலும் உலுரு போன்ற இடங்களுக்கு உல்லாசப் பயணம் செல்ல பயணிகளுக்கு வாய்ப்புகளையும் வழங்குகிறது.

தி ராக்கி மவுன்டெயினர்:

தி ராக்கி மவுன்டெயினர்

நான்கு மறக்கமுடியாத ரயில் வழித்தடங்கள் மற்றும் உலகத் தரம் வாய்ந்த சேவையின் இரண்டு நிலைகளுடன், தி ராக்கி மவுன்டெயினர் கனடிய ராக்கீஸின் கம்பீரமான இயற்கைக்காட்சிகள் வழியாகப் பயணம் செய்கிறது. மிக உயரமான மலைச் சிகரங்கள், வசீகரிக்கும் சிவப்பு மணற்கல் நிலக்காட்சிகள் மற்றும் பசுமையான காடுகளின் அழகை இந்த பயணத்தின் மூலம் ரசிக்கலாம். வழியில் வரும் இடங்களில் பான்ஃப் அல்லது லேக் லூயிஸ், ஜாஸ்பர், க்ளென்வுட் ஸ்பிரிங்ஸ் போன்ற இடங்களையும் கண்டுகளிக்கலாம்.

ஹிராம் பிங்காம்:

ஹிராம் பிங்காம்

இந்த பெருவியன் சாகச சவாரி உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றான மச்சு பிச்சு, லாஸ்ட் சிட்டி ஆஃப் தி இன்காஸ் வழியாகப் பயணிக்கிறது. பயணிகள் பெருவின் புனித பள்ளத்தாக்கு வழியாக, மச்சு பிச்சுவின் அடிவாரத்திலிருந்து செல்கிறது. இந்த பழங்கால ரயிலில் 1920-களில் புல்மேன் பாணி பெட்டிகள் இருந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Luxury life, Train, Travel, Travel Guide