Home /News /lifestyle /

இரண்டு நாட்கள் கூட குளிக்காம இருக்கலாம்... ஆனால் சும்மா சும்மா குளிக்காதீங்க... ஏன் தெரியுமா..?

இரண்டு நாட்கள் கூட குளிக்காம இருக்கலாம்... ஆனால் சும்மா சும்மா குளிக்காதீங்க... ஏன் தெரியுமா..?

4. சருமத்தை மென்மையாக பராமரியுங்கள் : குளிர்காலத்தில் உங்கள் தோல் எப்படியும் வறண்டதாகவும், உணர்திறன் மிக்கதாகவும் இருக்கும், எனவே குளித்த பின் ஒரு கனமான டவலை கொண்டு உடலை கடினமாக துடைக்க வேண்டாம். அது உங்கள் சருமத்திற்கு அதிக வறட்சியை ஏற்படுத்தும். குளிர்காலத்தில் உங்கள் சருமத்திற்கு மென்மையான அன்பும் கவனிப்பும் தேவைப்படும். ரோஜா இலையை குளியலுக்கு பயன்படுத்தும் போது உடல் எவ்வளவு வெப்பமாக இருந்தாலும் உடல் வெப்பம் குறைந்து உடல் அழகு ஏற்படும்.

குளிப்பது உடல் சுகாதாரத்திற்கு நல்லது என்றாலும் அடிக்கடி குளிப்பது நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும் என ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இரண்டு நாள் குளிக்கவில்லை என்றால் துர்நாற்றம்தான் வீசும். ஆனால் குளிக்கிறேன் என்ற பேர்வழியில் ஒருநாளைக்கு இரண்டு மூன்று முறை தேய் தேய் என தேய்த்துக் குளிப்பதால் உடலில் வாழக்கூடிய நல்ல பாக்டீரியாக்கள், வைரஸ் செல்களை அழித்துவிடும்.

இதனால் நோய் எதிர்ப்பு சக்திக் குறைந்து விடும். அதுமட்டுமன்றி ஜீரண சக்தி பாதிக்கும். சிலருக்கு இதயத்தைக் கூட பாதிக்கலாம் என யனோமாமி வில்லேஜ் நடத்திய ஆய்வில் கூறப்பட்டுள்ளது. இதற்கு முன் உட்டா பல்கலைக்கழகத்தின் மரபணு அறிவியல் மையத்திலும் இந்த ஆய்வு நடத்தப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது.

எனவே சுத்தமாக இருக்க அடிக்கடி குளிப்பது, ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரம் என தேய்த்து தேய்த்துக் குளிப்பது மிக மிகத் தவறான எண்ணம் என்கிறது.

தி அட்லாண்டிக் இதழின் சீனியர் எடிட்டர் ஹம்பிலின் இந்த ஆய்வுக்குப் பிறகு தான் அடிக்கடி உடலைச் சுத்தம் செய்வதையே நிறுத்தியுள்ளார். அதுகுறித்த அனுபவத்தையும் பகிர்ந்துள்ளார். “ முதல் முறை எண்ணெய் வடிந்த சருமமாக இருந்தது. துர்நாற்றம் வீசியது. ஆனால் உடல் ஒரு கட்டத்தில் சமநிலையை அடைந்தது. பின் துர்நாற்றம் வீசுவது இல்லை. அதற்காக மாறாக ரோஸ் வாட்டர் வாசனையோ, பாடி ஸ்பிரே வாசனையோ அடிக்காது என்றாலும் மூக்கை மூடும் அளவிற்கான துர்நாற்றம் வீசாது என்று கூறியுள்ளார்.

Published by:Sivaranjani E
First published:

Tags: Lifestyle

அடுத்த செய்தி