முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / இந்தியாவில் 82 குழந்தைகளுக்கு பரவியுள்ள தக்காளி காய்ச்சல்.. இதன் பாதிப்பு என்ன?

இந்தியாவில் 82 குழந்தைகளுக்கு பரவியுள்ள தக்காளி காய்ச்சல்.. இதன் பாதிப்பு என்ன?

தக்காளி காய்ச்சல்

தக்காளி காய்ச்சல்

Tomato Fever: லான்செட் ஆய்வில், தக்காளிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளில் காணப்படும் முதன்மை அறிகுறிகள் சிக்குன்குனியாவைப் போலவே இருக்கும்,  தக்காளியின் அளவிற்கு உடல் முழுவதும் சிவப்பு மற்றும் வலிமிகுந்த கொப்புளங்கள் வளரும்.

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :
  • Chennai |

இந்தியாவில் தக்காளி ஃப்ளு அல்லது தக்காளி காய்ச்சல் பரவல் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தீவிர பின்விளைவுகளை ஏற்படுத்தும் இந்த நோய் கேரளாவின் கொல்லத்தில் தொடங்கி இதுவரை 82 குழந்தைகளுக்கு தொற்று ஏற்பட்டுள்ளது என்று லென்செட் தரவுகள் குறிப்பிட்டுள்ளது.

1-5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் நோயெதிர்ப்பு குறைபாடுள்ள பெரியவர்களைக் குறிவைக்கும் பொதுவான தொற்று நோயான கை, கால் மற்றும் வாய் நோயின் (HFMD) புதிய திரிப்பாகவும் இந்த காய்ச்சல் இருக்கலாம் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

2020 மார்ச் மாதம் இந்தியாவில் பரவத் தொடங்கிய கொரோனா தொற்றின் நான்காவது அலை வரும் அச்சத்தில் நாடே பயணித்துக்கொண்டு இருக்கும் நிலையில் கொரோனாவின் அடிப்படை அறிகுறிகளான காய்ச்சல், சோர்வு, உடல் வலி மற்றும் தோலில் தடிப்புகள் ஆகியவற்றுடன் தக்காளி காய்ச்சலும் பரவி வருகிறது. ஆனால் தக்காளி காய்ச்சலுக்கும் கொரோனாவிற்கும் எந்தத் தொடர்பும்  இல்லை.

காரணி:

தக்காளி காய்ச்சல்,என்று அழைக்கப்படும் இந்த தொற்று நோய் குடல் வைரஸ்களால் ஏற்படுகிறது. பெரும்பாலும் 1-5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஏற்படுகிறது. பெரியவர்களுக்கு இந்த நோய் அரிதாக பாதிக்கிறது. ஏனெனில் பெரியவர்களிடம் இந்த வைரஸிலிருந்து பாதுகாக்கும் அளவுக்கு வலுவான நோயெதிர்ப்பு அமைப்புகள் இருக்கும்.

ஆன்லைன் லோன், ஆபாச படம் மூலம் மிரட்டி ரூ.500 கோடி மோசடி: பின்னணியில் சீன நபர்கள்

தக்காளி காய்ச்சல் தோற்றமும் பரவலும்:

கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் மே 6, 2022 அன்று தக்காளிக் காய்ச்சல் முதன்முதலில் பதிவாகியுள்ளது. லென்செட் நிறுவனம் தக்காளி காய்ச்சல் குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. ஜூலை 26, 2022 நிலவரப்படி 5 வயதுக்குட்பட்ட 82க்கும் மேற்பட்ட குழந்தைகள் தக்காளி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கேரளாவின் ஆரியங்காவு மற்றும் நெடுவத்தூர் ஆகிய இடங்களிலும் இந்நோய் பரவியுள்ளது. வைரஸ் தொற்று பரவுவதைக் கண்காணிக்கவும், இந்தியாவின் பிற பகுதிகளில் பரவாமல் தடுக்கவும் கேரள சுகாதாரத் துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எல்லை மாவட்டங்களில் சுகாதாரத் துறை சார்பில் கண்காணிப்பு பணி நடைபெற்று வருகிறது.

ஒடிசாவில் 26 குழந்தைகளுக்கு கை, கால் மற்றும் வாய் நோய் (HFMD) இருப்பதை புவனேஸ்வரில் உள்ள பிராந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் கண்டறியந்துள்ளது. இருப்பினும், கேரளா, தமிழ்நாடு மற்றும் ஒடிசாவைத் தவிர, இந்தியாவில் வேறு எந்த பகுதியும் இந்த வைரஸால் பாதிக்கப்படவில்லை.

அன்று ஐடி ஊழியர்..இன்று 199க்கு அளவில்லா பீட்ஸா விற்கும் முதலாளி.. கலக்கும் பஞ்சாபி சர்தார்..

அறிகுறிகள்

உலக சுகாதார அமைப்பின் (WHO) கூற்றுப்படி , காய்ச்சல், சோர்வு, குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு , நீரிழப்பு, மூட்டுகளில் வீக்கம், உடல் வலி,புண்கள் மற்றும் கைகள், கால்களில் கொப்புளங்களுடன் சொறி போன்ற அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளது.

லான்செட் ஆய்வில், தக்காளிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளில் காணப்படும் முதன்மை அறிகுறிகள் சிக்குன்குனியாவைப் போலவே இருக்கும்,  தக்காளியின் அளவிற்கு உடல் முழுவதும் சிவப்பு மற்றும் வலிமிகுந்த கொப்புளங்கள் வளரும்.

சிகிச்சை

top videos

    தக்காளி காய்ச்சல் சிக்குன்குனியா, டெங்கு மற்றும் கை, கால் மற்றும் வாய் நோயின் அறிகுறிகளைப் போலவே இருப்பதால், தக்காளி காய்ச்சலுக்கும் அதே சிகிச்சை வழங்கப்படுகிறது. தொற்று உறுதிப்படுத்தப்பட்ட பிறகு 5-7 நாட்கள் நோயாளிகளை தனிமைப்படுத்தவும், ஓய்வெடுக்கவும், ஏராளமான திரவ உணவுகளை உட்கொள்ளவும் அறிவுறுத்தப்படுகின்றனர்.  எரிச்சல் மற்றும் கொப்பளங்களின் நிவாரணத்திற்காக சூடான நீரில் ஒத்தடம் கொடுக்கச் சொல்கின்றனர்.

    First published:

    Tags: Corona Symptoms, India, Tomato Fever