• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • உலக நோயாளி பாதுகாப்பு தினம்: இந்த நாள் உருவான வரலாறும்,முக்கியத்துவமும்..

உலக நோயாளி பாதுகாப்பு தினம்: இந்த நாள் உருவான வரலாறும்,முக்கியத்துவமும்..

காட்சி படம்

காட்சி படம்

உலகளாவிய ரீதியில் நோயாளிகளின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த நாள் கொண்டாடப்படுகிறது.

  • Share this:
உலக நோயாளி பாதுகாப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 17ம் தேதி அன்று சர்வதேச அளவில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. உலகளாவிய ரீதியில் நோயாளிகளின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும், தனிநபர்கள் சுகாதாரப் பாதுகாப்பை பராமரிப்பதில் ஊக்குவிப்பதற்காகவும் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. WHO மற்றும் அதன் சர்வதேச கூட்டமைப்புகளால் இந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது.

அதிலும் குறிப்பாக இந்த ஆண்டும் கொரோனா வைரஸ் வெடிப்பின் போது மருத்துவ பணியாளர்கள் மற்றும் பிற கொரோனா முன்களப்பணியாளர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள எண்ணற்ற உயிர்களைக் காப்பாற்றவும், கொடிய தொற்று பரவுவதைத் தடுக்கவும் அயராது உழைத்து வருகின்றனர். எனவே இந்த நாளில் நாம் நம் சுகாதாரத்தை பராமரிப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

சர்வதேச நோயாளி பாதுகாப்பு தினம் உருவான வரலாறு:

கடந்த 2019ம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற 72-வது உலக சுகாதார பேரவையில் உலக நோயாளி பாதுகாப்பு தினம் கொண்டுவரப்பட்டது. அன்றைய தினத்தில் தான் WHA72.6 என்ற தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதையடுத்து "நோயாளி பாதுகாப்பு குறித்த உலகளாவிய நடவடிக்கை" என்ற தீர்மானம் அதில் நிறைவேற்றப்பட்ட தோடு ஆண்டுதோறும் செப்டம்பர் 17ம் தேதி இந்த நாளை கொண்டாடுவதற்கான அனுமதியும் வழங்கப்பட்டது. நோயாளி பாதுகாப்பு தினம் முதன் முதலில் 2016ம் ஆண்டில் லண்டனில் தொடங்கப்பட்டது. உலக நோயாளி பாதுகாப்பு தினம் ஆண்டுதோறும் உலகளாவிய மந்திரி உச்சிமாநாடுகளின் வெற்றிகரமான தொடரின் ஒரு பகுதியாகவே கொண்டாடப்படுகிறது.

உலக நோயாளி பாதுகாப்பு தினத்தையொட்டி இந்த ஆண்டின் கருப்பொருள்:

2021 உலக நோயாளி பாதுகாப்பு தினத்தில், "பாதுகாப்பான மகப்பேறு மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தையின் பராமரிப்பு" என்ற கருப்பொருளோடு, "பாதுகாப்பான மற்றும் இரக்கமுள்ள பிரசவத்திற்கு இப்போதே செயல்படுங்கள்" என்று உலக சுகாதார மையம் (WHO) அனைத்து மருத்துவ கூட்டமைப்புகளையும் வலியுறுத்தியுள்ளது. WHO தரவுகளின்படி, தினமும் 810 பெண்கள் கர்ப்பம் மற்றும் பிரசவத்துடன் தொடர்புடைய தவிர்க்க முடியாத காரணங்களால் உயிரிழக்கின்றனர். மேலும், ஒவ்வொரு நாளும் சுமார் 6700 குழந்தைகள் இறக்கின்றனர். மொத்த இறப்பு விகிதங்களில் ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு 47 சதவிகிதம் ஆகும்.

Also read : மாரடைப்பை விட அதிக ஆபத்தை ஏற்படுத்தும் 'செப்சிஸ்' தொற்றுநோய்.. செப்சிஸ் தொற்றுநோய் என்றால் என்ன ?

மேலும், ஒவ்வொரு ஆண்டும் சுமார் 2 மில்லியன் குழந்தைகள் பிரசவத்தின் போது இறந்தபடியே பிறக்கின்றன. அந்த வகையில், பிரசவத்தின் போது இதுபோன்ற நிகழ்வு 40% க்கும் அதிகமாக நடக்கின்றன. இதுபோன்ற பிரசவ இறப்புகள் தவிர்க்கப்பட வேண்டியது என்றும், மருத்துவப் பிழைகளால் ஏற்படும் தீங்கின் அளவை உணர்ந்து நாம் செயல்பட வேண்டும் என்றும் WHO அறிவுறுத்தியுள்ளது. கொரோனா தொற்றுநோயால் ஏற்படும் முக்கிய சுகாதார சேவைகளின் குறுக்கீட்டால், முறையற்ற சிகிச்சையின் விளைவாக, பெண்கள் மற்றும் கைக்குழந்தைகள் எதிர்கொள்ளும் கணிசமான ஆபத்து மற்றும் துன்பங்களைக் கருத்தில் கொண்டு, இந்த ஆண்டு நோயாளிகள் பாதுகாப்பு தொடர்பான பிரச்சாரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

உலக நோயாளி பாதுகாப்பு நாளின் குறிக்கோள்கள்:

பிரசவத்தின்போது தேவையற்ற அபாயங்களை தவிர்க்க வேண்டும். மேலும் அனைத்துப் பெண்களுக்கும், பிறந்த குழந்தைகளுக்கும் ஏற்படும் பாதிப்புகளைக் குறைப்பதோடு, பராமரிப்பு நேரத்தில் தரமான சேவைகளை வழங்குவதை ஆதரிப்பதும் இந்த நாளின் முக்கிய நோக்கமாகும். பரந்த அளவிலான கூட்டபைப்புகளை ஒன்றிணைத்து, பயனுள்ள மற்றும் புதுமையான தீர்வுகளை செயல்படுத்துவதன் மூலம் தாய் மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தைகளின் பாதுகாப்பை மேம்படுத்தவும் WHO பாடுபடுகிறது.

பாதுகாப்பு முயற்சிகளை அதிகரிக்கவும், அணுக முடியாததை அடையவும், குறிப்பாக பிரசவத்தின்போது, ​​தாய் மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தைக்குப் பாதுகாப்பை வழங்கவும், அவசர மற்றும் நீண்ட கால நடவடிக்கைகளை எடுக்க அனைத்து மருத்துவ கூட்டமைப்புகளுக்கும் WHO அறிவுறுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Tamilmalar Natarajan
First published: