முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / அதிகாலை சீக்கிரம் எழ முயற்சிப்பவரா நீங்கள்..? இதை டிரை பண்ணுங்க!

அதிகாலை சீக்கிரம் எழ முயற்சிப்பவரா நீங்கள்..? இதை டிரை பண்ணுங்க!

நம்மில் பலர் காலையில் எழுந்திருக்க நிறைய சிரமப்படுவார்கள். ஏனெனில், அவர்கள் மிகவும் சோர்வாக உணர்கிறார்கள். இந்த சோர்வுக்கு உடலின் சர்க்காடியன் ரிதம் தான் காரணம்.

நம்மில் பலர் காலையில் எழுந்திருக்க நிறைய சிரமப்படுவார்கள். ஏனெனில், அவர்கள் மிகவும் சோர்வாக உணர்கிறார்கள். இந்த சோர்வுக்கு உடலின் சர்க்காடியன் ரிதம் தான் காரணம்.

நம்மில் பலர் காலையில் எழுந்திருக்க நிறைய சிரமப்படுவார்கள். ஏனெனில், அவர்கள் மிகவும் சோர்வாக உணர்கிறார்கள். இந்த சோர்வுக்கு உடலின் சர்க்காடியன் ரிதம் தான் காரணம்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu |

அதிகாலையில் எழுந்திருப்பது பல நன்மைகளை வழங்கினாலும், அதிகாலையில் எழுவது நம்மில் பலரால் முடியாத ஒன்று. இன்றைக்காவது சீக்கிரம் எழுந்திருக்க வேண்டும் என அலாரம் வைத்து அதை அணைத்துவிட்டு தூங்குபவர்கள் இன்றைய இளைஞர்கள். அதிகாலையில் எழுந்திருப்பது உங்கள் நாளை நோக்கத்துடன் தொடங்க உதவும். சீக்கிரம் எழுவது உடற்பயிற்சி செய்ய உங்களுக்கு அதிக நேரத்தை வழங்கும்.

நம்மில் பலர் காலையில் எழுந்திருக்க நிறைய சிரமப்படுவார்கள். ஏனெனில், அவர்கள் மிகவும் சோர்வாக உணர்கிறார்கள். இந்த சோர்வுக்கு உடலின் சர்க்காடியன் ரிதம் தான் காரணம். இது 24 மணி நேர சுழற்சியாகும், இது நம் உடல் எப்போது தூங்க வேண்டும், எப்போது விழித்திருக்க வேண்டும் என்று கூறுகிறது.

சர்க்காடியன் ரிதம் (Circadian rhythm) மூளையில் உள்ள சுப்ராச்சியாஸ்மாடிக் நியூக்ளியஸால் (SCN) கட்டுப்படுத்தப்படுகிறது. இது ஒளிச்சேர்க்கை எனப்படும் செயல்முறை மூலம் ஒளியால் பாதிக்கப்படுகிறது. பகல் வெளிச்சம் நம் கண்களைத் தாக்கும் போது, எப்போது எழுந்திருக்க வேண்டும் என்று SCN உடலுக்குச் சொல்கிறது. எனவே, சூரியனிடமிருந்து வரும் இந்த சமிக்ஞை இல்லாமல், காலையில் எழுந்திருப்பதில் சிக்கல் இருக்கும். பின்வரும் குறிப்புகள் நீங்கள் சீக்கிரம் எழுந்திருக்க உதவும்.

குறிப்பு ஒன்று : நீங்கள் வேலை செய்யாத நாட்களில் கூட, தினமும் ஒரே நேரத்தில் அலாரத்தை அமைக்கவும். ஒவ்வொரு இரவும் (ஓய்வு நாட்களில் கூட) அதே நேரத்தில் படுக்கைக்குச் செல்ல முயற்சி செய்யுங்கள். இதனால் உங்கள் உடல் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தூங்கப் பழகிவிடும். இதே போல விரைவாக எழுவதற்கும் முயற்சிக்கலாம்.

குறிப்பு இரண்டு : நீங்கள் படுக்கைக்குச் செல்வதற்கு முன், ஏதாவது ஒரு புத்தகத்தைப் படிப்பது (கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகங்கள்) அல்லது இன்றைய நிகழ்வுகளை ஒரு குறிப்பேட்டில் எழுதுவது போன்றவற்றை செய்யவும். இதனால் நீங்கள் எழுந்ததும் புத்துணர்வுடன் நாளைத் தொடங்கத் தயாராக இருப்பீர்கள்.

குறிப்பு மூன்று : நீங்கள் எழுந்தவுடன் காலைக் கடன்களை முடிக்கவும். அது உங்களுக்கு உற்சாகமாகவும், வரவிருக்கும் நாளுக்கு தயாராகவும் உதவுகிறது. உதாரணமாக, குளிர்ந்த நீரில் குளிப்பது, உடற்பயிற்சி அல்லது ஐந்து நிமிடங்கள் தியானம் செய்யவும்.

குறிப்பு நான்கு : ஒரு வாரம் சீக்கிரம் எழுந்திருக்க முயற்சி செய்யுங்கள். பின்னர், நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்று பாருங்கள். உங்களால் இன்னும் பழக முடியாவிட்டால், உங்களுக்கு எது சிறந்தது என்பதைப் பொறுத்து நீங்கள் படுக்கைக்கு செல்லும் நேரத்தை சரிசெய்யவும்.

குறிப்பு ஐந்து : சரியான நேரத்திற்கு படுக்கைக்கு சென்று தூங்க முயற்சிக்கவும். படுக்கைக்கு சென்ற பின் படிப்பது TV பார்ப்பதை தவிர்க்கவும். 20 நிமிடங்களுக்குள் உங்களுக்கு தூக்கம் வரவில்லை என்றால், தூக்கம் வரும் வரை எழுந்து ஏதாவது படிக்கவும்.

குறிப்பு ஆறு : நீங்கள் தினமும் பின்பற்றுவதற்கு ஒரு அட்டவணையை உருவாக்கவும். இதனால், காலையில் நேரத்தை வீணடிக்க உங்களுக்கு வாய்ப்பு குறைவாக இருக்கும்.

குறிப்பு ஏழு : படுக்கைக்குச் செல்வதற்கு முன் தியானம் அல்லது சில சுவாசப் பயிற்சிகளை செய்யவும். இதனால் நீங்கள் எழுந்ததும், எதிர்மறை எண்ணங்கள் மற்றும் மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவீர்கள்.

குறிப்பு எட்டு : நீங்கள் எழுவதற்கு 20 நிமிடங்களுக்கு முன் அலாரம் வைக்கவும். அந்த நேரத்தை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்துங்கள். இந்த நேரத்தை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்துங்கள். உதாரணமாக, தியானம் செய்தால், படித்தல், சுவாசப் பயிற்சி ஆகியவற்றை செய்யலாம்.

நீங்கள் சீக்கிரம் எழுந்திருக்க பழகியதும், உங்கள் உடல் புதிய அட்டவணைக்கு பழகி, சரியான நேரத்தில் தூங்க பழகிவிடும். வழக்கத்தை விட 15 - 30 நிமிடங்கள் முன்னதாகவே படுக்கைக்குச் செல்ல முயற்சிக்கவும்.

குறிப்பு ஒன்பது : அதிகாலையில் எழுந்திருப்பதை ஒரு வேலையாக நினைக்க வேண்டாம். அதற்குப் பதிலாக, மாலை அல்லது வார இறுதி நாட்களில் நீங்கள் விரும்பும் விஷயங்களைச் செய்வதற்கு அதிக நேரத்தைச் செலவிடவும்.

குறிப்பு பத்து : காலையில் எழுந்திருப்பதில் உங்களுக்கு சிக்கல் இருந்தால், உங்கள் அலாரம் சத்தத்தை அதிகமாக வைக்கவும் (உதாரணமாக, உற்சாகமான பாடல் அல்லது உரத்த சத்தம்). அது உங்களை வேகமாக எழுப்பும்.

First published:

Tags: Sleep