ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

வீட்டில் சின்ன நூலகம் வைக்க வேண்டும் என ஆசையா..? அப்போ இதை முதலில் கற்றுக்கொள்ளுங்கள்...

வீட்டில் சின்ன நூலகம் வைக்க வேண்டும் என ஆசையா..? அப்போ இதை முதலில் கற்றுக்கொள்ளுங்கள்...

புத்தகம் பராமரிப்பு

புத்தகம் பராமரிப்பு

புத்தக பராமரிப்பில் முதன்மையானது, புத்தகங்களை அதன் அளவு மற்றும் எடை வாரியாக சரியாக அடுக்கி வைப்பது ஆகும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

வீட்டில் இருக்கும் விலை மதிப்புள்ள பொருட்களைப் பாதுகாப்பது போல, புத்தகங்களையும் சரியான முறையில் பராமரிக்க வேண்டும். உங்கள் வீட்டில் நிறைய புத்தகங்கள் இருந்தால், செல்லரித்து போகாமல் தடுப்பது, பழுப்பு நிறமாக புத்தக காகிதங்கள் மாறாமல் எவ்வாறு போன்ற எளிமையான டிப்ஸ் இங்கே.

முறையாக அடுக்கி வைத்தல் :

புத்தக பராமரிப்பில் முதன்மையானது, புத்தகங்களை அதன் அளவு மற்றும் எடை வாரியாக சரியாக அடுக்கி வைப்பது ஆகும். ஒரே அளவில் இருக்கும் புத்தகங்களை செங்குத்தாக அடுக்கி வைக்கலாம். அதிக எடையுள்ள, பெரிய அளவிலான புத்தகங்களை தட்டையாக அடுக்கலாம்.

ஈரப்பதம் இல்லாத காற்றோமான இடங்கள் :

சரியான காற்றோட்டம் இருக்கும் இடங்களில் உங்கள் புத்தகங்களை அடுக்க வேண்டும். பெட்டிகளில் மூடி வைக்காமல், திறந்த அலமாரிகளில், திறந்த பெட்டிகளில் காற்றோட்டமாக வைக்கலாம். ஈரப்பதம் இருந்தால் புத்தகங்களில் ஒரு விதமான பூச்சுகள் உருவாக வாய்ப்பிருப்பதால் அப்படிப்பட்ட இடங்களை தவிர்த்து விடுவது நல்லது.

நேரடியான சூரிய ஒளியை தவிர்க்கவும் :

நேரடியான சூரிய ஒளியில் புத்தகங்கள் வெளிப்படுமாறு வைத்தால், அதன் புற ஊதா கதிர்கள் காகிதங்களை பழுப்பு நிறமாக மாற்றும். அது மட்டுமின்றி, புத்தக அட்டைகள், அச்சு எழுத்துகள் ஆகியவையும் நிறம் மங்கும். இதனால் நாளடைவில் புத்தகங்கள் வீணாகிவிடும் என்பதால் சூரிய ஒளி நேரடியாக படாத இடங்களில் அடுக்கி வையுங்கள்.

குறிப்பிட்ட இடைவெளியில் சுத்தம் செய்யவும் :

மற்ற பொருட்களைப் போல தான் புத்தகங்களின் பராமரிப்பும். புத்தகங்களை பயன்படுத்தாமல் அப்படியே வைத்திருப்பதும் அதனை பாதிக்கக் கூடும். பயன்படுத்தாமல் இருக்கும் புத்தகங்களில் உள்ள தாள்கள் மக்கிப் போகும் வாய்ப்புள்ளது. குறிப்பிட்ட இடைவெளியில், புத்தகங்களை எடுத்து மென்மையான துணியாலோ, பிரஷ் பயன்படுத்தியோ அவ்வபோது தூசு தும்புகளை நீக்கி, சுத்தம் செய்து அடுக்கி வைக்கவும்.

டெங்கு முதல் சரும பராமரிப்பு வரை... பப்பாளி இலையில் இருக்கும் மருத்துவ குணங்களை பற்றி தெரிந்தால் ஆச்சரியப்படுவீங்க...

புத்தகங்களை கவனமாக கையாள வேண்டும் :

ஒவ்வொரு புத்தகமும் ஒவ்வொரு விதமாக கட்டமைக்கப்பட்டிருக்கும். சில புத்தகங்கள் தனித்தனி பகுதிகளாக பிரித்து தைக்கப்பட்டிருக்கும். சில புத்தகங்கள் மொத்தமாக ஒட்டப்பட்டிருக்கும். புத்தகங்கள் தன்மைக்கு ஏற்ப அதனை கவனமாக கையாள வேண்டும்.

சுத்தமான கைகள் :

உணவு உண்ணும் போது எந்த அளவுக்கு கைகளை சுத்தமாக வைத்துக்கொள்கிறோமோ, அதே அளவுக்கு சுத்தமான கைகளுடன் புத்தகங்களை கையாள வேண்டும். பலருக்கும் சாப்பிடும் போது புத்தகம் படிக்கும் பழக்கம் உள்ளது. இதனால் எளிதாக தாள்களில் கறை படிந்து விடும். இதனால் அப்படி செய்வதை தவிர்த்து விடுங்கள்.

புத்தக அடையாளக்குறி பயன்படுத்துங்கள் (புக்மார்க்)

எந்த பக்கத்தில் இருக்கிறோம் என்ற அடையாளமாக பலரும் புத்தகங்களின் முனைகளை மடித்து வைக்கும் பழக்கம் கொண்டுள்ளனர். அதனை தவிர்த்தால், ஆயுள் நீளூம். பதிலாக, புத்தக புக்மார்க் எனும் அடையாளக்குறியைப் பயன்படுத்தலாம். இதனால் புத்தகங்களில் சேதம் ஏற்படுவது தவிர்க்கப்படுகிறது.

பிளாஸ்டிக் உறைகளை பயன்படுத்துங்கள்

புத்தகங்கள் நீண்ட காலத்துக்கு புதிது போல இருக்க, பள்ளி நோட்டு புத்தகங்களுக்கு அட்டை போடுவது போல, பிளாஸ்டிக் உறைகளை பயன்படுத்தலாம். இதனால் எத்தனை வருடங்கள் ஆனாலும் புதிதாக இருப்பது போலவே காட்சியளிக்கும்.

குழந்தைகள், செல்ல பிராணிகளிடம் இருந்து பாதுகாப்பாக வைக்கவும் :

குழந்தைகள் கையில் புத்தகங்கள் அல்லது காகிதம் கிடைத்தால் கூட கிறுக்கி விடுவார்கள் அல்லது கிழித்து விடுவார்கள். அதே போல, செல்லப் பிராணிகளும். எனவே, புத்தகங்களை பத்திரமாக அவர்களுக்கு எட்டாத இடத்தில் வைக்கவும்.

Published by:Sivaranjani E
First published:

Tags: Book reading